/* ]]> */
Jan 092012
 

தமிழர்களுக்கு எப்போதுமே சென்டிமெண்ட்களும் அந்த செண்டிமெண்ட்களுக்காக விக்கிரமன் பட லா லா லால்லால்ல லா லா BGM போல உருகுவது என்பது சமுதாய கடமையாக ஆகி விட்டது. மெழுகாய் உருகுவது அவர்களின் சொந்த விருப்பம்.. உருகும் போது சம்பவங்களின் மறுபக்கத்தை அதாங்க பேக்ரவுண்டை விட்டு விட்டு ஒரே பல்லவியில் லா லா பாடுவது தான் காமெடியாக இருக்கிறது.

நான் என்ன சொல்றேன்னா தமிழர்கள் எல்லாம் emotional idiots.
உடனே இதற்கும் பெருமைபட்டு லா லா சாங்கை போடாதீங்க.. இல்லை உடனே என்னோட உருவ பொம்மையை எரிக்கக் கிளம்பாதீங்க..
பல பெரிய பிரச்சனைகளில் பிரச்சனைக்கான உண்மையான காரணத்தை விட்டு விட்டு பிரச்சனை முடிந்து பின்னர் நடக்கும் செயல்களை வைத்து உருகுவதே தமிழனின் முழு நேர தொழிலாக விட்டது..உதாரணங்களாக பல சொல்லலாம்.
சமீப வருடங்களில் நடந்த சில சம்பவங்களை திரும்ப வேறு கோணத்தில் பார்ப்போம்.
ஹிதேந்திரனை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. பைக் விபத்தில் மூளை சாவடைந்த 16 வயது சிறுவன் இதயம் 9 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. அந்த சிறுவனின் பெற்றோரும் மருத்துவர்கள் தான். தமிழ்நாடே சில வாரங்கள் ஹீதேந்திரன் புகழ்பாடி பின்னர் வேறுசென்டிமெண்ட் தேடி இந்த சம்பவத்தை மறந்து விட்டது. ஹிதேந்திரன் சாவிற்கு காரணம் என்ன?? அவன் பெற்றோர்தான்!
16 வயது சிறுவனுக்கு பைக் தேவையா?? லைசென்ஸ் கூட கிடைக்காது. அவனுக்கு பைக் கொடுத்து லைசென்ஸ் இல்லாமல் ஓட்ட தைரியமும் கொடுத்தது அவர்கள் தான். விபத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் அவர்களே..ஆனால் விபத்திற்குப் பின் மீடியாவின் பார்வையால் வாழும் அன்னை தெரசாவாக மாறி விட்டார்கள்.. ஏன் அன்றைய முதல்வர் கூட அவர்களை பாராட்டினார். கடைசி வரை யாரும் அவர்களை ஏன் 16 வயது பையனுக்கு பைக் வாங்கி கொடுத்தீங்க என்று மறந்தும் கூட கேட்கவில்லை,,,தமிழ்நாடே மெழுகுவர்த்தி வைத்து உருகி உருகி லா லா பாடியது தான் நடந்தது.
போன வருடம் நடந்த சம்பவம் இது..காதலன் மகனைக் கடத்தி கள்ளக்காதலி கொலை வெறி செயல். தமிழ் தினசரிகளில் இப்படி தான் புகைப்படம் போட்டு ஒரு மாதம் புலனாய்வு கட்டுரை எழுதி ஒய்ந்து போனார்கள். தமிழ் மக்களும் வழக்கம் போல லா லா லால்லாலா பாடி விட்டு வேறு வேலை தேடி போனார்கள். நடந்தது இது தான். ஒரு வங்கி அதிகாரி அப்பாவி பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என ஏமாற்றி இருக்கிறார். உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, மன ரீதியாக தொல்லைகள் பல கொடுத்துள்ளார். இதனால் வெறியான அந்தப் பெண் தன் காதலனின் குழந்தையை கடத்திக் கொலை செய்தார்.  தமிழகமே அந்த காதலியை கரித்துக் கொட்டியது. எல்லா சாபமும் இலவசமாக கொடுத்தது. கடைசிவரை அந்த பெண் ஏன் அதை போல செயலில் இறங்கினார் என்று யோசிக்கவேஇல்லை.
எல்லாவற்கும் மூல காரணமான அந்த காதலனை அனைவரும் மறந்து விட்டனர்.. அவரும் ஒன்றும் தெரியாதது போல டிவிக்கு பேட்டி எல்லாம் கொடுத்து அனைவர் பார்வைக்கும் அப்பாவியாக தப்பித்து விட்டார். அந்த பெண் தமிழகத்தின் ஏதாவது சிறையில் வழக்கை சந்தித்து கொண்டு இருக்கும்.. காதலன் வேறு ஏதாவது அப்பாவி பெண்ணிற்கு வலை விரித்து கொண்டு இருப்பார்.
கடைசியாக போனவாரம் நடந்த மேட்டர்..
தூத்துக்குடியில் துணிகரம், டாக்டர் ரவுடிகளால் வெட்டி கொலை…
வழக்கம் போல லா லா லால்லாலா கூடவே உலகத்தில் நல்லவர்களான மருத்துவர்கள் வேலை நிறுத்தம் …அவசர கேஸ் மட்டும் தான் பாப்பாங்களாம். ஆனா அவங்க தனியா நடத்துற க்ளினிக் மட்டும் எந்த வித வேலை நிறுத்தமும் இல்லாம நடக்குமாம். நடந்தது என்ன?? தன்னோட குடும்ப டாக்டரிடம் தன்னோட மனைவி சீரியஸ்ன்னு ஒருத்தன் பதறி ஓடி வரான். கேஸ் சீரியஸ்ன்னு தெரியுது. ஏதோ முயற்சி செய்து பார்க்குறாங்க. முடியலை. உடனே வேறு மருத்துவமனைக்கு எடுத்துகிட்டு போக சொல்றாங்க..போகறதுக்கு முன்னாடி பில் எல்லாத்தையும் கட்டி விட்டு மனைவியை வேறு மருத்துவமனைக்கு கூப்பிட்டு போன்னு சொல்றாங்க.. கணவனும் எங்கேயோ பணம் புரட்டி மனைவியை வேறு மருத்துவமனைக்கு கூப்பிட்டு செல்லும் வழியிலேயே இறந்து போறாங்க. இதனால் வெறியான கணவன் டாக்டரை கொலை செய்கிறான். அவன் தரப்பு நியாயம்.. தெரிந்த டாக்டர் தானே… சீரியஸ்ன்னு தெரிந்தும் பணத்துக்காக உடனே டிஸ்சார்ஜ் செய்யவில்லை. பணத்தை கட்டினா தான் டிஸ்சார்ஜ்…பணம் புரட்ட தாமதமான நேரத்தில் மனைவி நிலை மிக சீரியஸாகி விடுகிறது..
டாக்டர் மீதும் தவறு  இருக்க ஆனால் அவருக்கே லா லா பாடுவது சரியா? அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராம் பணம் போதவில்லையா?? வீட்டில் வேற தனியாக க்ளினிக் வைத்து கொள்ளை அடிக்க..? எந்த சட்டத்தில் இப்படி அரசு வேலையும் பார்த்து கொண்டு தனியாக பிஸினஸ் வைத்து சம்பாதிப்பதை அனுமதிக்கிறது?? அப்பாவிப் பொதுஜனம் மாட்டியவனை நன்றாக திட்டி விட்டு தங்களுக்கும் இதை போல ஒரு நிலை என்றாவது வரலாம் என்பதையும் மறந்து விட்டு சென்டிமெண்ட் அருவியில் குளிக்கிறது .
இப்பவாது நான் சொல்றது உங்களுக்கு சரியாக தெரிகிறதா? மூன்று வெவ்வேறு பிரச்சனைகள்—- ஆனால் தமிழ்ச் சமூகம் எடுக்கும் நிலை ஒரே நிலை.. தவறு செய்தவர்களுக்கு தன்னையும் அறியாமல் சென்டிமெண்ட் ஆதரவை கொடுப்பது.இப்ப சொல்லுங்க நான் தமிழர்களை emotional idiots என்று சொல்வது சரியா தவறா?
இதில் எங்கேயும் பாதிக்கபட்டவர்களின் துயரை இல்லை என்று சொல்ல வரவில்லை ! செய்த குற்றங்களை நியாயப்படுத்தவில்லை . நம் பார்வையில் இருக்கும் பயஸ்டு ஆட்டிட்யூடைத் தான் குறை சொல்கிறேன் .. இந்தக் கட்டுரையின் நோக்கம் நிகழும் குற்றங்களில் இருந்து பாடம் படித்துக் கொண்டு, இனி இது போல் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும் அல்லது நிகழாதிருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கவாவது வேண்டும் .. வெட்டியாய் ஒரு சென்சேஷன் உண்டாக்குவதற்காக மீடியாக்கள் அதீதமாய் ஒரு பக்கமாய் செய்யும் ஃபோகஸைப் புரிந்து கொண்டு சரியாக யோசிக்க வேண்டும் என்பது தான் !
..குழலன் துரை ..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>