/* ]]> */
Dec 142011
 
simbu dhanush

simbu dhanush

 

தனுஷ் பாடியிருக்கும் ‘கொலவெறி’ பாடலை சிம்பு ரசிகர்கள் நெட்டில் ஏடாகூடமா கேலி செய்துள்ளனர். சினம் கொள்ளவேண்டிய தனுஷ் அமைதி காத்துவிட்டார். ஆனால்,  ‘ என் நண்பன் தனுஷை நீங்க எப்படி திட்டலாம்?’ என்று தன் ரசிகர்கள் மீதே சீறியிருக்கிறார், சிம்பு.

 

‘கொலவெறி’ பாடல் பற்றி செய்திகளுக்கு குறைவில்லை. இதோ இன்னுமொரு செய்தி. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் அனிருத். அவர் இசையமைத்த ஆறே நிமிடத்தில் பாட்டெழுதிவிட்டார், தனுஷ் என்று அவருடைய அண்ணன் செல்வராகவன் கூறியிருந்தார். ஆனால், திடீரென்று செல்வராகவனே செய்தியை மாற்றி, பாடலுக்கு இசையமைத்ததும் தனுஷ்தான். அவருக்குள் ஒரு இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார், என்று கூறியிருக்கிறார். இன்டஸ்ரி அதிர்ந்ததோ இல்லையோ, அனிருத் அதிர்ந்திருப்பார்.  காரணம் என்னவாக இருக்க முடியும்? இந்தப் பாட்ட இதுவரை யூ ட்யூபில் டௌன்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டும். மொழி புரியாத தேசங்களிலிருந்தும் இந்தப் பாடலுக்கான ரைட்ஸ் கேட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால், அதுவே பல கோடிகள் வரும். இசையமைத்ததும் தனுஷ் என்று கூறி விட்டால், பணத்தை ஷேர் பண்ண வேண்டாமில்லையா? இத்தனைக்கும் மியூஸிக் டைரக்டர் அனிருத் வேறு யாருமில்லை. ஐஸ்வர்யாதனுஷின் சொந்த மாமா மகன்.

Tags : Why this kolaveridi,  வை திஸ் கொலவெறி டி, தனுஷ், சிம்பு, அனிருத், 3, தனுஷ் + சிம்பு,  dhanush, simbu, dhanush + simbu

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>