/* ]]> */
Mar 272012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : விழிகளின் அருகினில் வானம்

படம் :அழகிய தீயே

இசை : ரமேஷ் விநாயகம்

பாடியவர் : ரமேஷ் விநாயகம்

பாடலாசிரியர் : வைரமுத்து

காதலாகிக் கசிந்துருகும் ஒருவன் தன்னவளைப் பற்றிப் பாடுவது போல அமைந்திருந்தாலும் கூட அவளைப் பற்றின வர்ணனை எங்குமே வராமல் இயற்றப்பட்டிருப்பது தான் இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு .

மற்றபடியும் மனதுக்கு இதமான அழகிய படமாக்கம் , ரம்யமான பாக்ரவுண்ட் , பிரசன்னாவின் முகபாவங்கள் , நவ்யாவின் அழகு என்று மிக இனிமையான ஒரு காம்பினேஷன் ..என்னுடைய ஃபேவரிட்ஸ் லிஸ்ட்டில் டாப் டென்னில் இருக்கும் ஒரு பாடல் இது ..

 

விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ — யா ..

ஒலியின்றி உதடுகள் பேசும் பெரும் புயலென வெளிவரும் சுவாசம்

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ — யா

பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல ஓ யா

பூ போன்ற கன்னித்தேன் அவள் பேர் சொல்லித் தித்தித்தேன்

அது ஏன் என்று யோசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மௌனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள்

அலைகடலாய் இருந்த மனம் துளித்துளியாய் சிதறியதே

ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே

விழிகாண முடியாத மாற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம்

ஒரு மௌனப் புயல் வீசுதே அதில் மனம் தட்டுத்தடுமாறும் ஓ யா ..

பூவில் என்ன புத்தம் புது வாசம்

தென்றல் கூட சங்கீதமாய் வீசும்

ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்

யாரோ என்று எந்தன் மனம் தேடும்

கேட்காத ஓசைகள் இமை தாண்டாத பார்வைகள்

இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம் இல்லை நில் என்னும் ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா துடிப்பது போல் நடிக்கிறதா

உரைத்திடவா மறைத்திடவா ரகசியமாய் தவித்திடவா

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனைக் கத்தி இல்லாமல் கொய்யும்

இதில் மீள வழியுள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது ஓ யா

விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ — யா ..

ஒலியின்றி உதடுகள் பேசும் பெரும் புயலென வெளிவரும் சுவாசம்

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ — யா

பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல ஓ யா

ஆங்கிலத்தில் பாடல் வரிகள் :

Pallavi

vizhigalin aruginil vanam – vegu
Tholaivinil tholavinil thookam – Ethu
ainthu pulangalin yekkam – yen
muthal muthal anubavam oh oh yeh…

oliendri uthadugal pesum – Perum
puyal yena velivarum swasam – Oru
suvadindri nadanthidum patham
ethu athisaya anubavam oh oh yeh…

Pennai santhiththen – Aval
Natpai yasithen – Aval
Panbai nesithen
vera yenna naan solla oh oh yeh …

Saranam 1

Poo pondra kanithen – Aval
Pher solli thiththithen – Athu
Yen yendru yosithen – Adda
Naan yengu swasithen ?

kathodu mownangal – Esai
vaarkindra nerangal – Pasi
Neer thookam ellamal – Uyir
vazhkindra mayangal

Alai kadalai eruntha manam
Thuli thuliyaai sithariyathe !

Aium polanum yen manamum
Yenakethirai seyal paduthe !

vizhi kana mudiyatha mattram – Athai
Moodi maraikindra thootram – Oru
Mouna puyal veesuthe – Athil manam
Thattu thadumarum oh oh yeh…

Saranam 2

Ketkatha osaigal – Ethazh
thandatha varthaigal – Emai
adatha parvaigal – Evai
Naan konda mattrangal

Soll yennum oru nenjam – Yenai
Nil yennum oru nenjam – Yethri
parkamal yen vazhvil – Oru
porkallam arambam

Eruthaiyam thodikaratha ?
Thudipathu pool nadikiratha ?
Oraithidava? Maraithidava?
Ragasiyamai thavithidava ?

Oru pennin nenaivenna seium – Yenai
Kathi ellamal koiyum – Ethil
Meella vazhi ullathe – Erupinum
ullam virumbathu oh oh yeh …

விழிகளின் அருகினில் வானம் , அழகிய தீயே , பிரசன்னா , நவ்யா நாயர் , நவ்யா , பிரகாஷ் ராஜ், காதல் பாடல், லவ் சாங்ஸ் , சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும் , ரமேஷ் விநாயகம், வைரமுத்து, பாடல் வரி , விடியோ

vizikalin aruginil vanam , azagiya theeye , prasanna, navya nayar, navya, prakash raj, love songs, ramesh vinayagam , vairamuthu , sugaragam , song lyrics, song video, love songs, tamil love songs,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>