/* ]]> */
Jun 292013
 

விஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை

vishal sarathkumar

vishal sarathkumar

 நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று  சென்னை தி. நகரில், சௌத் போக் ரோடில்  உள்ளது. இந்தக் கடட்டத்தை இடித்துவிட்டு, ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸும், ஒரு தியேட்டரும் கட்ட அதன் தலைவரான சரத் குமாரும், செயலர் ராதா ரவியும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதுமுதலே சிக்கல் ஆரம்பமானது. குடியிருப்புப் பகுதியில் அப்படிப்பட்ட கட்டடம்  கட்டக் கூடாது என்று பகுதி மக்கள் பிரச்சினையைக் கிளப்பினர் அதோடு விதி முறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே சங்கத்துக்குக்க் கட்டடமும் இல்லாமல், புதிய கட்டடம் கட்ட முடியாமலும் போய்விட்டது. இப்படியாக ஏற்பட்டுள்ள தொய்வு நிலை பெரிய நடிகர்களை ரொம்பவே கோபம் கொள்ளச் செய்துள்ளது.
                இதற்கிடையே நடிகர் குமரிமுத்து, நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பாக ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். இதைத் தொடர்ந்து அவரை சங்கத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். இந்த நிலையில்தான், நடிகர் விஷல் ஃபேஸ் புக்கில் ‘விஸ்வரூபம்’ பிரச்சினையில், நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் கேட்டு, சரத் குமார் தரப்பிலிருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து சரத்குமாருக்கு எதிரான அணியில் இருப்பவர்களை ஒன்று திரட்ட விஷால் முயற்சித்ததாகத் தெரிகிறது. மேலும், எதிர்த் தரப்பு நடிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஜூலை முதல் வாரத்தில் ஒரு மீட்டிங் நடத்தி சரத் குமாருக்கு எதிராக கேள்வி எழுப்பவும் தயாராகிவிட்டனர்.
           இதுபற்றிக் கூறும்போது விஷால் தெரிவிப்பது என்னவென்றால், அவரும் சங்க உறுப்பினர் என்ற முறையில், சங்கத்தை எல்லோரும் குறை கூறும்போது அந்த அவப் பெயரில் அவருக்கும்  பங்கு இருப்பதாக நினைக்கிறார். அதனால் அந்த நில விவகாரத்தின் உண்மை நிலை எனன் என்று தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறார். அவர் சங்கத்துக்கு எதிரானவர் இல்லை. அவர்க்ளுடன் சண்டை  போடவில்லை. சங்க் க்ட்டடத்தின் தற்போதைய நிலை  என்ன என்று  விளக்கம் கேட்டு,  சங்கத் தலைவருக்குக் கடிதம் கொடுகக்ப் போகிறார். அந்தக் கடிதத்தில் அவரது நண்பர்கள் 10 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல். இந்தப் பிரச்சினையில் சரத் குமாருக்கு எதிராக நடிகர் நாசரும் விஷாலுடன் கைகோர்த்துக் களம் இறங்கியிருப்பதாகவும், இருவரும் கையெழுத்து வேட்டையில் இறங்கியிருப்பதாகவும்  சினிமா வட்டாரத்தில் செய்தி உலவுகிறது. நாசர் வெளிநாடு சென்றிருப்பதால், அவ்ருடைய மனைவி இந்த தகவலை  மறுத்துள்ளார்.
                  இந்த விஷயத்தில் காமெடி நடிகர் ஒருவரும், இன்னும் பல இளம் நடிகர்களும் விஷாலின் முயற்சிக்குத் தூண்டுதலாகவும், ஆதரவாகவும் இருப்பதாகத் தகவல். இதுபற்றி ராதாரவி “விஷாலிடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை. வந்ததும் சரத்குமாருடன் கலந்து பேசி விளக்கம் கொடுப்போம்”என்றார்.
விஷால் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி சரத்குமாருடன் மதஜராஜா படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>