/* ]]> */
Feb 022012
 
விஜய்காந்த் ஜெயலலிதா ஜோக்ஸ் Vijayakanth jayalalitha jokes

விஜய்காந்த் ஜெயலலிதா ஜோக்ஸ் Vijayakanth jayalalitha jokes

 

விஜய்காந்த் : பால் விலையை ஏத்திபுட்டீங்க!

ஜெயலலிதா : என்னமோ பீர் விலைய ஏத்துன மாதிரி ஃபீல் பண்றீங்க !

—————–

ஜெயலலிதா : என்னை எதிர்த்து நிக்க திராணி இருக்கா ?

விஜய்காந்த் : சரக்கடிச்சதுல அந்தம்மா திராணிங்கறது பிரியாணின்னே காதுல விழுகுது ! ஹி ஹி !

—————————-

ஜெயலலிதா : சங்கரன் கோயிலில் தனித்து நிற்க முடியுமா ?

விஜய்காந்த் : ஏன் நிக்க முடியாது ? ஆறு ஏழு ரவுண்டுக்கு அப்புறமும் அண்ணன் ஸ்டெடியா நிப்பேன் !

—————————-

ஜெயலலிதா : தனித்துப் போடியிட்டிருந்தால் ஒரு இடம் கூட ஜெயித்திருக்க முடியாது

பன்னீர்செல்வம் : ஏம்மா, இப்படி சொல்லிட்டீங்க , தேமுதிக கூட்டணி இல்லாம நாம் தனித்து நின்னிருந்தா ஒரு ஐம்பது இடமாவது கிடைச்சிருக்காது ?

ஜெயலலிதா : பன்னீரு ! நான் தேமுதிக தனித்து நின்னிருந்தான்னு சொன்னேன்!

———————————

அதிமுக : சட்டசபையில் நாக்கை மடிப்பது குற்றம் …

தேமுதிக : நாற்காலிய மடிச்சு அடிக்குறது மட்டும் ஓகேவா ?

——————————–

ஜெயலலிதா : எதிர்கட்சி தலைவரின் அருவருக்கத்தக்க செயல்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்…

விஜய்காந்த் : எனக்கே தெரியாம நம்ம பட ஷூட்டிங்குக்கு வந்திருப்பய்ங்க போலிருக்கு

———————-

ஜெயலலிதா : தகுதியில்லாதவருக்கு பெரிய பதவி கிடைத்தால் என்ன நடக்கும் என இன்று சட்டமன்ற நிகழ்ச்சி உணர்த்தி விட்டது …

பன்னீர்செல்வம் : மனதிற்குள் ( நம்ப அம்மாவுக்கு சேம் சைடு கோல் போடுறதே பொழப்பாயிடுச்சி)

————————–

ஜெயலலிதா : எனக்கு இந்தக் கூட்டணியில் உடன்பாடு இல்லை. கட்சிக்காரர்கள் சொன்னதாலேயே விஜய்காந்துடன் கூட்டணி போட்டேன்..

பன்னீர்செல்வம் : சோ சொல்லித்தான் இவருகூட இந்தம்மா சேர்ந்தாங்கன்னு சோடா கட காரனுக்கு கூட தெரியுமே ! ஆமா சோ எப்ப நம்ம கட்சிகாரன் ஆனாரு ?

———————

ஜெயலலிதா : மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார் .

விஜய்காந்த் : ( டென்ஷனாகி ) சைடுல கட்சிக்காரன் எவனும் இல்ல இருந்தா அவனயாவது ரெண்டு சாத்து சாத்தலாம்… அம்மா பக்கம் திரும்பி

ஆங்க்… பென்னகரத்துல நீங்க ஏன் தோத்தீங்க ?

——————-

தேமுதிக பேச்சாளர் : இடைத்தேர்தல் பார்த்து பயப்படுபவர் அல்ல எங்கள் அண்ணன்.

சிம்ரன் இடை, குஷ்பூ இடை, ராதா இடை , ராதிகா இடை என பல இடைகள் பார்த்தவர் எங்க அண்ணன்!

——————-

அதிமுக : கை நீட்டி பேசாத , இது சினிமா இல்ல…

விஜய்காந்த் : யோவ்… சினிமால பேச முடிஞ்சிருந்தா நான் ஏன்யா மார்கெட்டு போயி உங்க கிட்ட எல்லாம் வந்து மாரடிக்குறேன்?

—————–

அதிமுக : சீட்டுல உக்காரு !

விஜய்காந்த் : மவனே , இங்க மட்டும் ஒரு சுவரு இருந்துருந்தா இந்நேரம் அதுல கால வச்சு ஒரு லெக் ஃபைட் குடுத்திருக்கலாம் !

———————–

-

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>