தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் 2013 - ஆண்டு
பலன்
தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் 2013 – முன்னுரை:
வருகிற புத்தாண்டு விஜய வருஷம் என அழைக்கப்படும். இந்த விஜய வருஷம் , இப்போது நடந்துகொண்டிருக்கும் நந்தன வருஷம் பங்குனி மாதம் 31-ம் தேதி அதாவது, 13.4.2013 சனிக்கிழமையன்று சுக்ல பக்ஷம் அமிர்தயோகம் கூடிய சுப தினத்தில் இரவு மணி 11.52-க்குதனுசு லக்னத்தில் ரிஷப ராசியில் சூரியன் ஓரையில் சூரியன் திசை செவ்வாய் புத்தி புதன் அந்தரத்தில் இந்த விஜய வருஷம் பிறக்கிறது. இந்தப் புத்தாண்டுக்குரிய பலனை அனைத்து ராசிகளுக்கும் விரிவாகவும் துல்லியமாகவும் சொல்லியிருக்கிறோம். வருகிற மே மாதம் , குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்களை ஆதாரமாக வைத்தும், மற்ற கிரகங்களான சனி, ராகு மற்றும் கேது முதலிய கிரகங்களின் சஞ்சார பலன்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப் புத்தாண்டு பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புது வருடத்தில், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் மிகுந்த நற்பலன்களை அடையப் போகிறார்கள். ஏனையோர், ஒவ்வொரு ராசிக்கும் கீழே சொல்லப்பட்டிருக்கும் பரிகார பூஜைகளை முறைப்படி செய்து வந்தால், கஷடங்களிலிருந்து விடுபடலாம். அருகிலுள்ள பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று உரிய சாந்திகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால், தொல்லைகள் நீங்கும். சில பரிகார ஸ்தலங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
குருபகவானின் பரிகார ஸ்தலங்கள்:
- தஞ்சை மாவட்டம்,வலங்கைமானுக்கு அருகில் உள்ள ஆலங்குடி
- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை
- நெல்லை மாவடட்ம் செங்கோட்டை அருகே உள்ள புளியறை
- தூத்துக்குடி மாவடட்ம் திருச்செந்தூரில் உள்ளசுப்ரமணியஸ்வாமி திருக்கோயில்
- சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம்
- குருபகவான் ஸ்தலங்களைத் தவிர கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்
- மற்றும் , கேது ஸ்தலமான மயிலாடுதுறை அருகில் உள்ள கீழ்ப்பெரும்பள்ளம் முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று அந்தந்த ஸ்தலங்களுக்குரிய பரிகார பூஜைகளைச் செய்து வழிபாடு செய்து வரவும். .
இங்கே சில ராசிகளுக்கு அசுப பலன்களாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொருவர் ஜாதக அமைப்பும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்பதால், பலன்கள் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஜாதகப் பிரகாரம் உங்கள் திசாபுத்தியும் கிரக நிலைகளும் யோகமானதாக இருந்தால், இந்த அசுப பலன்கள் மிகவும் குறைந்து போய் உங்களுக்கு பாதிப்புகள் மிகவும் சிறிதளவே இருக்கும். எனவே உங்கள் பிறந்த ஜாதகத்தை ஒருமுறை பரிசீலித்துக்கொள்ளவும்.
இனி உங்கள் ராசிக்குரிய பலன்களைப் படித்தறியவும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
Sorry, the comment form is closed at this time.