/* ]]> */
Nov 012011
 

vijay ajith surya

தீபாவளி படங்கள் ரிலீசாகிவிட்டன. ஏழாம் அறிவு பல தியேட்டர்களில் ரிலீசாகி சிலருக்கு பிடித்தும் சிலர் எதிர்பார்த்த அளவு இல்லையென்றும் பேசிக் கொள்கிறார்கள். விஜய் வேலாயுதம் மூலம் தன் மாஸை தக்க வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பரவலாக வேலாயுதம் நல்ல மசாலா என்டர்டெய்னர் ஆக அங்கீகரிக்கப்பட்டாலும் ஏழாம் அறிவு கலக்ஷனில் வேலாயுதம் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் உண்மை. ஏன்?

ஏனெனில் ஏழாம் அறிவு 1000 பிரின்டுக்களுடன் ரிலீசானது. அதோடு எல்லா ஊர்களிலும் சொகுசு தியேட்டர்களில் ரிலீசானது. வேலாயுதம் கிட்டத்தட்ட 300 பிரின்டுகள் மட்டுமே போடப்பட்டு அவ்வளவாக முக்கியமல்லாத தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு முந்தைய விஜய் படங்கள் வாங்கிய அடியும் இதற்கு ஒரு காரணம்.

vijay ajith surya

பொதுவாக இப்போதெல்லாம், முன்னணி ஹீரோக்கள் தங்கள் படங்களை இந்த தியேட்டர் பிரச்சினை காரணமாகவே சேர்ந்தாற்போல் ரிலீஸ் செய்வதில்லை. ரஜினி கமல் இதற்கு நல்ல உதாரணம். ஆனால் விஜயும் சூர்யாவும் இன்னொரு தரப்பிற்கு இழப்பிருக்கும் எனத் தெரிந்தே ஒரே நாளில் ரிலீஸ் செய்தது ஏன்?

இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. அது ஜூலை மாதம். வருடம் 2011. அப்போது அபிராமி ராமநாதன் அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று பேரும் நடிக்கும் மங்காத்தா, வேலாயுதம், ஏழாம் அறிவு மூன்று படங்களின் தயாரிப்பு ஷெட்யூல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி போவதையும் இதனால மூன்றுமே ஒரே நேரத்தில் ரிலீசுக்கு வரலாம் என்றும், தியேட்டர் காரர்களுக்கு இதன் மூலம் பிரச்சினை வருமென்றும் முதலில் கோடம்பாக்கத்தில் குரல் கொடுத்தார்.

vijay ajith surya

உடனே , சில மூத்த கலைஞர்களின் அறிவுரைப்படி, சூர்யா , அஜித், விஜய் மூவரும் சந்திக்க ஏற்பாடாயிற்று. கடைசியில் , சூர்யா வர முடியாத காரணத்தால் , சூர்யா அந்தசசந்திப்பில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்து கொண்டார். விஜயும் அஜித்தும் சந்தித்தார்கள். மூன்று படங்களும் ரிலீஸ் தேதிகளும் விவாதிக்கப்பட்டன. திரையுலகில் பொதுவாய் சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே அஜித் படம் முதலிலும் விஜய் படம் அடுத்தும் அதன்பின் சூர்யா படமும் ரிலீஸ் செய்வதாய் பேசினார்கள். ஒவ்வொரு ரிலீசுக்கும் இடையே மூன்று வார இடைவெளி விடுவதெனவும் முடிவானது. ஆனால் விஜய் சூர்யா இருவருமே தங்கள் படம் தீபாவளி ரிலீஸாக வேண்டும் என விரும்பினார்கள். கடைசியில் , வேலாயுதம் தீபாவளிக்கும், ஏழாம் அறிவு நவமப்ர் இறுதியிலு, ரிலீஸ் என பேசினார்கள். சூர்யா , தான் டைரக்டர் முருகதாசையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும் இருந்தாலும் சீனியாரிடி கருதி தான் சம்மதிப்பதாகவும் பட்டும் படாமலும்  தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்து இதைப்பற்றி யோசித்த சூர்யாவும் முருகதாசுக்கும் தீபாவளி படம் என்ற ஸ்பெஷல் அந்தஸ்தையும் அதன்மூலம் கிடைக்கும் சில கோடிகளையும் இழக்க விருப்பமில்லை. அதோடு , தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுக்கும் விஜய் படம் அவ்வளவாக தியேட்டர்களை அள்ளாது என அவர்கள் சரியாக கணித்தார்கள். ஆகவே துணிந்து தீபாவளிக்கு ரிலீஸ் என முடிவு செய்தார்கள்.

ajith surya

அஜித்தோ, பேசியபடி தன் படத்தை வேகமாக முடித்தார், வெங்கட் பிரபு இன்னொரு பாடல் எடுக்க முனைந்த போது கூட வேண்டாமென நிறுத்தி தான் சொன்ன வாக்கை காப்பாற்றி தன் படத்தை ரிலீஸ் செய்தார். படமும் மெகா வெற்றி. அவரைப் பொறுத்தவரை தனிக்காட்டு ராஜாவாய் கலக்ஷன்அ ள்ளிவிட்டார்.

ஆனால், விஜய் தரப்புக்குத்தான் பிரச்சினை. ஏழாம் அறிவோடு போட்டி போட்டால் தியேட்டர்கள் கிடைக்காது. இருந்தும் விஜயால் தன் செல்வாக்கு சரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதோடு , சூர்யா படத்தோடு தன் படம் வந்து தன் படம் வெற்றி பெற்றால் தன் செல்வாக்கு உயரும் என நினைத்தார். ஆகவே அவரும் தீபாவளி ரிலீஸ் என முடிவு செய்தார்.

விஜய் சூர்யா

இவர்கள் ஈகோ பிரச்சினையில் ஒரு நல்ல மசாலா படத்தை தந்த வேலாயுதம் தயாரிப்பாளர் தான் பாவம். அவரால் தான் எதிர்பார்த்த அளவு வசூல் செய்ய முடியவில்லை.

ஆக, சூர்யா , விஜய் , இருவருமே தங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டார்கள். இந்தப் போட்டி எதில் போய் முடியுமோ?

tags : ajith vijay surya, surya ajith, surya vijay, vijay surya, vijay ajith, ajith vijay, velayutham, ezham arivu, ezham arvu velayutham, velayutham ezham arivu, vijay, ajith, surya, ஏழாம் அறிவு, விஜய், அஜித், சூர்யா, வேலாயுதம், வேலாயுதம் vs ஏழாம் அறிவு,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>