இன்றைய பாடல்: பூங்காற்று உன் பேர் சொல்ல
படம்: வெற்றி விழா(1989)
பாடியது : எஸ்.பி.பி , சித்ரா
இசை: இளையராஜா
பிக்ச்சரைசேஷன் பிரமாதம், அட்டகாசமான லொகேஷன், இனிமையான ட்யூன், அர்த்தமுள்ள பாடல் வரிகள் ..என்ன அமலா தான் ஏதோ சிக்காக இருந்து எழுந்து வந்தார் போன்ற ஒரு தோற்றத்துடன் பரிதாபமாக இருக்கிறார்..கமல் எப்போதும் போல் ஹாண்ட்ஸம்…”ஈரச்சிறகோடு இசை பாடித்திரியும் நேரம் இதுவல்லவா”..வாவ் கிளாசிக்..பாடல் ஆசிரியர் யார்? உங்களுக்குத் தெரியுமா?
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக்கரை ஓரத்திலே தேன் சிட்டுக்கள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்
நீரூற்று ..
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண்பாடுதே
மேலை காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே
ஆலம் விழுதோடு கிளிகூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச்சிறகோடு இசைபாடித்திரியும் நேரம் இதுவல்லவா
ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும் நீ தானே அன்பே
வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்
பூங்காற்று…
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடு தான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் தூவ
தேவன் உன்னோடு தான்
நீல வான் கூட நிறம் மாறிப்போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா?
ஓயாமல் உன்னைக்கொஞ்சும் ஊதாப்பூவண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம்
வாடை தீண்டாத வாழைத்தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்
பூங்காற்று ..
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments