/* ]]> */
Aug 182011
 

வேலாயுதம் விமர்சனம் – ப்ரிவ்யூ விமர்சனம் – ப்ரிவ்யூ சினிமா விமர்சனம் – ப்ரிவ்யூ திரைப்பட விமர்சனம்

வேலாயுதம் விஜய்

படம் : வேலாயுதம்

நடிப்பு : விஜய், ஜெனிலியா, ஹன்சிகா

இசை : விஜய் ஆண்டனி

இயக்கம் : ஜெயம் ராஜா

தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன்

வேலாயுதம் விஜய் ஜெனிலியா

விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

‘ வேலாயுதம் ‘ படம் முடிந்துவிட்டது. கிராமம், நகரம் என்று மாறி மாறி வரும் கதையைக் கொண்டது. விஜய் வரும் காட்சிகளில் பிரமாதமாக நடித்து ஒரு பிரம்மாண்டமான உணர்வை ஏற்படுத்துகிறாராம். காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாம். ‘ நகரத்தில் எழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் அப்பாவி இளைஞனாக விஜய். ஜெனிலியாவால்தான் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகிறது.

வேலாயுதம் விஜய் ஹன்சிகா

வேலாயுதம் கதை என்ன?

கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் வரும் போது சிட்பண்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுக்க சிட்டிக்கு வருகிறார். அங்கே வில்லன் அங்கங்கே பாம் வைத்து கலவரத்தை தூண்டுகிறான். இந்த சதிச்செயலை செய்வது யார் என்று கண்டுபிடிப்பதில் திணறுகிறது போலீஸ்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, இந்த சதிக்காரனை கண்டுபிடித்து சாகடிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரை மூலம் பரப்புரை செய்கிறார்.

வேலாயுதம்

இந்த சமயம் பார்த்து அப்பாவி விஜய் கோயிலில் வந்து அர்ச்சனை செய்யும் போது பெயர் என்ன என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று அவர் சொல்ல, அய்யர் உட்பட சாமி கும்பிட வந்தவர்கள் எல்லோரும்,,,,ஆ! வேலாயுதம்…வேலாயுதம்…என்று பிரமிக்கிறார்கள். வில்லன் வைத்த பாம் தற்செயலாக வெடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அங்கே வேலாயுதம் நிற்கிறார். இதனால் வேலாயுதம் பெயரும், முகமும் பிரபலமாகிவிடுகிறது.

வேலாயுதம்

கற்பனை பாத்திரம் நிஜமாய் வந்துவிட்டது என்று சந்தோசப்படுகிறார் ஜெனிலியா. இந்த சந்தோசத்தை விஜய்யை நேரில் சந்தித்தும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் விஜய் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்குகிறார்.

ஊருக்குப்போகும் முடிவில் பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார். பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்றுகிறது. தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என்று கொதிக்கிறார் விஜய். அப்புறமென்ன…ஜெனிலியா விரும்பும் வேலாயுதமாக மாறுகிறார். இதனால் வில்லன் வேலாயுதத்தை பலிவாங்க துடிக்கிறார். இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமணம் நடக்கிறது. சமயம் பார்த்து வேலாயுதத்தை பலிவாங்கத்துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் பாம் வைத்து விடுகிறார். இதில் தங்கை இறந்துவிட இன்னும் வீரியமாக புறப்படுகிறார் வேலாயுதம்.

 

வேலாயுதம் விஜய் ஹன்சிகா

வேதம் ஓதும் இந்து வேடத்தில் இருந்து கொண்டு நாசவேலைகளில் ஈடுபடுவதை மக்களுக்கு அம்பலப்படுத்தி வில்லனை பலிவாங்குகிறார் வேலாயுதம்.

ஜெனிலியாவை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரின் அத்தை மகளான ஹன்சிகாவைத்தான் கடைசியில் திருமணம் செய்துகொள்கிறார்.

velayudham
இதுவரைக்கும் இவ்வளவுதான் தெரிஞ்சுருக்கு. பார்க்கலாம் வேலாயுதம் வெற்றி வேலா இல்லை விஜயின் வெந்த புண்ணில் வேலா என்று…

 

English summary : A detailed cinema review of vijay starrer tamil movie velayudham or velayutham where genelia and hansika motwani have actred with tamil actor vijay in this latest vijay movie velayutham. this also has velayutham story and velayutham vimarsanam and about velayutham mp3 songs release and velayutham mp3 songs download

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>