காலை வணக்கம்
இன்றைய பாடல் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
படம் : வீரத்திருமகன்
இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : பி .பி .ஸ்ரீநினிவாஸ்
ரொம்பவே இனிமையான, பாப்புலர் பாடல் .ஒரு பாடலுக்குள் நடக்கும் ஒரு ட்ராமா … ஆனந்தன் அழகாக தான் இருக்கிறார் . அவர் மகள் டிஸ்கோ சாந்திக்குக் கிடைத்த வரவேற்புக்குக் கூட இவர் தான் முதலில் காரணமாக இருந்திருக்கக் கூடும் . ஆனால் பிரமாதமாக சோபிக்கவில்லை இவர் .
தன் காதலி சச்சு தான் வந்திருக்கிறார் என்ற நினைப்பில் பாடுவது போல் அமைந்திருக்கிறது சீக்வென்ஸ் .. அதெப்படி தெரியாமல் போகும் ? கண்களுக்கு மட்டும் புலப்படும் உணர்வா காதல் ? ஈ. வி. சரோஜா சச்சு வை விட அழகாக இருக்கிறார் ..அட்டகாசமான டான்சரும் கூட . இத்தனை காலத்துக்கு அப்புறமும் ரசிக்கப்படுகிறது இந்த பாடல் என்றால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை !இசையமைப்பு அப்படிப்பட்டது . வாரணம் ஆயிரம் படத்தில் கூட சூர்யா இதைப் பாடுவது போல் ஒரு காட்சியமைப்பு உண்டே !
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
மேலாடை தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ம்ம்ம்ம்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
மிச்சமா மீதமா இந்த நாடகம்
மென்மையே பெண்மையே வா வா வா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
அருகிலே அருகிலே வந்து பேசம்மா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
ஆங்கிலத்தில் :
paadaatha paatellam paada vandhaaL
kaaNaatha kaNgaLai kaaNa vandhaaL
pesaatha mozhiyellam pesa vandhaaL
peN paavai nenjile aada vandhaaL
peN paavai nenjile aada vandhaaL
mElaadai thendralil aahaahaa
poovadai vandhadhe hmmhmmhmm
kayyOdu vaLayalum jal jal jal
kaNNOdu pesavaa sol sol sol
paadaatha paatellam paada vandhaaL
kaaNaatha kaNgaLai kaaNa vandhaaL
pesaatha mozhiyellam pesa vandhaaL
peN paavai nenjile aada vandhaaL
achamaa naaNamaa innum veNdumaa
anjinaal nenjile kaadhal thOndrumaa
michamaa meedhamaa indha naadagam
menmaye peNmaye vaa vaa
paadaatha paatellam paada vandhaaL
kaaNaatha kaNgaLai kaaNa vandhaaL
pesaatha mozhiyellam pesa vandhaaL
peN paavai nenjile aada vandhaaL
nilavile nilavile sedhi vandhadhaa
uravile uravile aasai vandhadhaa
maraivile maraivile aadalaagumaa
arugile arugile vandhu pesammaa
paadaatha paatellam paada vandhaaL
kaaNaatha kaNgaLai kaaNa vandhaaL
pesaatha mozhiyellam pesa vandhaaL
peN paavai nenjile aada vandhaaL
தொகுப்பு
..ஷஹி..
tags
anandhan , e.v.saroaja, p.b. srinivas, veerathirumagan, paadatha paatellaam , kannadasan
ஆனந்தன் , ஈ. வி. சரோஜா , பி. பி. ஸ்ரீநிவாஸ், வீரத்திருமகன், பாடாத பாட்டெல்லாம், கண்ணதாசன்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments