/* ]]> */
Oct 022011
 

வெடி விமர்சனம் வெடி சினிமா விமர்சனம் வெடி திரைப்பட விமர்சனம்

வெடி சினிமா விமர்சனம

வெடி திரை விமர்சனம் :

நடிப்பு : விஷால், சமீரா ரெட்டி, விவேக், பூனம்

Starring: Vishal, Sameera Reddy, Vivek

இசை : விஜய் ஆண்டனி

Music: Vijay Anthony

vedi movie review

இயக்கம் : நயன் புகழ் (!) பிரபு தேவா
Director: Prabhu Deva

தயாரிப்பு : விக்ரம் க்ருஷ்ணா
Producer: Vikram Krishna

 

வெடி சமீரா ரெட்டி
கதை : ரவுடிகள் துரத்த ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகும் விஷால்

( ஐ புதுசா இருக்கேன்னு யாராவது சொன்னாங்கன்னா கூட்டிட்டு வாங்க !)

கல்கத்தாவில் காலேஜ் சேருகிறார். அங்கே பூனம் என்ற பெண்ணுக்கு ஏர்படும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுகிறார் ( இந்த டீடெயில் போதும் ) .

அதே காலேஜில் அவரை ராக்கிங்க் செய்யும் சமீரா ரெட்டியை பாத்ரூமில் ரோஸ் கலர் டர்கி டவல் கட்டிக் கொண்டிருக்கையில் கட்டிப்பிடித்து காதல் வயப்படுகிறார் ( இத மட்டும் நல்லா வெவரமா எயுது !) .

அப்புறம் இன்டெர்வெல்ல ஒரு ட்விஸ்ட். இன்னான்னா அண்ணன் … இல்லை புரட்சி தளபதி விஷால் ஒரு அண்டர் கவர் போலீஸ் ( அண்டர் கவர்னா அண்டர் த டேபிள் கவர் வாங்கிக்கற போலீசா … டவுட்டு ! ) இன்னானா அவரு தங்கச்சி பூனம். அவனகள காப்பாத்த புரட்சி தளபதி வந்திருகாரு! ( யப்பா மே ஹூன் நா படத்த இன்னும் எத்தினி வாட்டி உல்டா பண்ணுவீங்க?)

vedi movie review

நடிப்பு :

விஷால் :

புரட்சி தளபதி பின்னி பெடலெடுக்குறாரு… ஆனா அவரு பெடல எடுத்துட்டதால சைக்கிள் நகரவே மாட்டேங்குது… அவரு முகபாவமும் தான் ! சண்டைக் காட்சிகள்ள ஏதோ பரவாயில்ல !

விவேக் :

பலூனை உள்ளுக்கு வச்சிக்கிட்டு செவன் பேக் காட்டும் போலி தாதா… ஆரமப்த்துல சிரிக்க வச்சாலும் போக போக அலுப்பு தட்டுது… விவேக் உங்க பழைய ஸ்பார்க்க பாக்கணும்ங்க ! டிஃபரண்டா ஏதாவது ட்ரை பண்ணுங்க!

 

பூனம் : அழகான தங்கச்சி நம்ப விஷால் மச்சானுக்கு !

 

vedi movie review

சமீரா ரெட்டி : வெடியில வெடிக்குற ஒரே விஷயம் சமீரா ரெட்டியின் அதிரடி கில்மாவும் விஷாலோட அவரு நெருக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கமா நடிச்சிருக்குற காட்சிகளும் தான் ! சும்மா தூள் கிளப்புறாரு … அந்த பாத்ரூம் சீனு, பனியன் சீனு, முந்தானை காத்தாடுற பாவாடை தாவணின்னு எந்த காஸ்ட்யூமில வந்தாலும் சீனு காட்டுறாங்க ! புண்ணியமா போவட்டும் ! இல்லன்னா வெடி நம்ப மண்டையில்தான் வெடிச்சிருக்கும் !

vedi movie review

 

இசை : படத்துக்கேத்த இசை தர்ரதுல விஜய் ஆண்டனி கில்லாடி. ஒரு டப்பா படத்துக்கு எப்படி டப்பாவா ம்யூசிக் போடணுமோ அப்படி போட்ருக்காரு!

 

கேமரா : நல்ல மனுஷன்! சமீரா ரெட்டிய நல்லா காட்டியிருக்காரு ஹி ஹி !

 

இயக்கம் : பிரபு தேவா …

புது மாப்பிள்ளைக்கி ஆயிரம் வேலை இருக்கும்… அவரப் போயி டைரக்ஷன் எல்லாம் பண்ண சொன்னா இப்படித்தான் ஆஃப்பாயிலா இருக்கும் ! விரைவில் டைரக்டர் பிரபுதேவாவை நீங்க ஃபுல் டைம் டேண்ஸ் டைரக்டரா பாக்கலாம்… அம்மிணி வந்த ராசி அப்பிடி !

பார்க்கலாமா ? :

ம்ம்ம்ம்ம்ம்ம் வர்ர பொங்கல் அன்னிக்கு சன் டிவில !

ஃபைனல் வெர்டிக்ட் :

வெடி…….. புஸ்ஸூ !

Tags : Vedi Tamil Movie Review, Vedi Movie review, vedi + vishal + sameera reddy , Vishal + sameera reddy, sameera reddy, vishal, prabhu deva, விஷால், வெடி விமர்சனம், வெடி சினிமா விமர்சனம், வெடி திரைப்பட விமர்சனம், வெடி + விஷால் + சமீரா ரெட்டி, வெடி,vedi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>