/* ]]> */
Sep 132011
 

வாஸ்து:

வாஸ்து மூலை

வாஸ்து மூலை

 

இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், மக்கள் நாள், நட்சத்திரம், ஜோதிடம், என்று பார்த்து எதையும் செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதுபோல ‘ வாஸ்து ‘ என்பதும் ஒரு முக்கிய விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. இதையே தொன்றுதொட்டு, நமது முன்னோர்கள்,  ‘ மனையடி சாஸ்திரம் ‘  என்று அழைத்தனர். வீடு கட்டுவதற்கு, செங்கல், சிமெண்டைப் போல இந்த ‘ மனையடி சாஸ்திரமும் ‘ ஒரு முக்கிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. முற்றிலும் பார்க்கத் தெரியாதவர்கள்கூட ,   சில முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறுவதில்லை.

முற்றிலும் வாஸ்துவைக் கடைப்பிடித்தால், உங்கள் எதிர்காலம் மற்றும் புதிய தலைமுறைகள் சிறப்பான நன்மக்களாகப் பிறப்பார்கள் .

ராஜாஜி எப்பேற்பட்ட மூதறிஞராகத் திகழ்ந்தார் என்பதும். இந்தியாவின் கவர்னர் ஜெனெரல் பதவி அவரைத் தேடி ஓடி வந்ததற்கும், தனது கடமையை எப்படி அவர் செவ்வனே ஆற்றி ஒப்பற்றவராகத் திகழ்ந்தார் என்பதற்கும்,  அவருடைய தாத்தாவினால் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட அவரது மனை ஒரு முக்கிய காரணமாகும். ராஜாஜி அவர்கள் நமது கவர்னர் ஜெனரல் மட்டுமில்லை.  வெள்ளையர்களால், மிகவும் மரியாதைக்குரியவராக நடத்தப்பட்டவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.  இனி , திரு. ராஜாஜி அவர்களின் இல்ல அமைப்பைக் கவனிப்போம்.

தொகரப்பள்ளி என்ற சிற்றூர் ஓசூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராஜாஜி அவர்களுக்கு சிறந்த புகழைப் பெற்றுத் தந்த  அவரது பிறந்த ஊரானது சிறப்பான வாஸ்து அமைப்பைப் பெற்றுள்ளது. அந்த ஊரின் வடக்கிலிருந்து கிழக்க நோக்கி தென்பெண்ணை ஆறானது ஊரைவிட 20 அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ராஜாஜி அவர்களின் தாத்தா வாஸ்து மீதுகொண்ட நம்பிக்கையால், ஊரின் தென்மேற்கில் உள்ள இடத்தில், மண்ணை வெட்டி மேடாக்கி, ஒரு சரியான் இடத்தில் 1850-ம் ஆண்டு வீட்டை முற்றிலும் வாஸ்து முறைப்படி கட்டினார். இந்த அமைப்பை அவர் உருவாக்கியபோது மிகத் தெளிவாகத் திட்டமிட்டதால், வாஸ்து அமைப்பில் வடகிழக்கில் வீட்டின் அருகே கோவில், வடக்கும் கிழக்கும் அழகான சாலை, வீட்டைவிட பள்ளமான தெருத்தாக்கம், ஈசான்ய நடை, எல்லாவற்றையும் விட  வடகிழக்கில் வீட்டிற்கு வாசல், சிறப்பான அமைப்புடன் , நல்ல காற்றோட்ட வசதியுடன் தொட்டி, கட்டுவீடு கட்டப்பட்டுள்ளது.

திரு ராஜாஜி அவர்கள் பிறந்துள்ள வீட்டை நாம் கவனித்தால், மொத்த ஊரின் அமைப்பில் தென்மேற்கில் மிகவும்  துல்லியமான முறையில் ஒரு சரியான அறிவாளி பிறக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் வீடு கட்டப்பட்டுள்ளது, என்பது தெளிவாகப் புரிகிறது.

திரு. ராஜாஜி அவர்கள் சட்டம் படித்து வழக்கறிஞரானபிறகு,  தேசப்பிதா காந்திஜியுடன் தொடர்பு ஏற்பட்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் மிகப்பெரும் புகழைப் பெற்றார். படிப்படியாக அரசியலில் உயர் பதவிகளைப் பெற்று  இந்திய அரசியலில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி, ராஜாஜி அவர்களைத் தேடி தானாக ஓடி வந்தது. அந்தப் பதவியிலும் தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்து தமிழகத்திற்கு தனி மரியாதையை உண்டாக்குகிறார்.

அரசியல் மட்டுமல்லாது, உற்றார் உறவினரிடமும் மாறாத நன்மதிப்பைப் பெற்று விளங்குகிறார். இதன்மூலம் கூற வருவது என்னவென்றால் ஒரு குழந்தை பிறக்குமுன்பே இங்கு ஒரு அறிவாளிதான் பிறக்கவேண்டும் என்ற சீரிய திட்டத்தோடு  மூதாதையரால் பார்த்து அமைக்கப்பட்ட வீடு எதிர்பார்த்த பலனைத் தப்பாது கொடுத்தது என்பதுதான்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>