காலை வணக்கம்
இன்றைய பாடல்: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
படம்:வறுமையின் நிறம் சிவப்பு(1980)
இசை:எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியது:எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
எண்பதுகளில் கொடி கட்டிப்பறந்த ஜோடி ஸ்ரீதேவி, கமலின் மிகப் புகழ் பெற்ற டூயட் “சிப்பி இருக்குது” . ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இதை விடவும் அருமையான முறை ஒன்று உள்ளதா? வாட் எ வே டு ப்ரொபோஸ்? அருமையான மெலடி, அழகான லொகேஷன், பிரமாதமான வரிகள்..என்றென்றும் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஆல் டைம் ஃபேவரட் பாடல்..(உனக்கு டெடிகேட் செய்கிறேன் இந்து..நம் சீனியர்களுக்கு ட்ரீட் கொடுத்த சமயம் பாதியில் பாட்டை நிறுத்தி அபியிடம் கடி வாங்கியது நினைவிருக்கிறதா?)
சிப்பியிருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குத் சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சிப்பி இருக்குது…
ம்ம்..சந்தங்கள்.. நனனனா ..நீயானால்.. ரிசரி.. சங்கீதம்.. ம்ஹூம்..
நானாவேன்சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
சிப்பியிருக்குது…
நனனனன கமான் சே இட் ஒன்ஸ் அகெய்ன் நனனனனன..ம்ம்ம்..சிரிக்கும் சொர்க்கம் நனனனனனன..தங்கத்தட்டு எனக்கு மட்டும் ஓகே
தானே தானே தானா.. அப்படியா.. தேவை.. பாவை ..பார்வை..
தத்தன்ன தன ..நினைக்க வைத்து ..தனனன னனன ..நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
தனன ந நனனா தன நா தன நா லாலாலா..பியூடிஃபுல்! மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ?
சிப்பியிருக்குது முத்துமிருக்குது…
இப்போ பாக்கலாம் தனன தனனனன்னா.. ம் மழையும் வெய்யிலும் என்ன
தன்ன நான தனன நனன னன்ன உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனன்னான தனன்னான தன்னா! அம்மாடியோ!! தனன்னான தனன்னானா தானா ஆங்..ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
சபாஷ் ..
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன் (2)
சிப்பி இருக்குது…
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments