/* ]]> */
Feb 042012
 

கனடிய தமிழ் இலக்கியத்தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக்கழகமும் இணைந்து வழங்கும் 2011 க்கான இயல் விருது எஸ்.ராமகிருஷணனுக்கு வழங்கப்பட்டிருகிறது .
2001 – சுந்தர ராமசாமி
2002 – கே. கணேஷ்
2003 – வெங்கட் சாமிநாதன்
2004 – இ. பத்மநாப ஐயர்
2005 – ஜோர்ஜ் எல். ஹார்ட்
2006 – ஏ. சி. தாசீசியஸ்
2007 – லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்
2008 – அம்பை
2009 – கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன்
2010 – எஸ். பொன்னுத்துரை

இப்படியான வரிசையில் எஸ். ரா இணைந்திருக்கிறார் .

உயிர்மை பதிப்பகம் நடத்திய பாராட்டு விழாவில் திரு. மனுஷ்யபுத்திரன் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார் ,  கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தம், எழுத்தாளர் ஏ.பெருமாள், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான இறையன்பு, விஜயசங்கர் ஆகியோர் எஸ். ரா வை வாழ்த்தி பேசினார்கள். கவிஞர் வைரமுத்து , பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் வழக்கம் போல் இனிமையாகப் பேசினர் .

நன்றி தெரிவித்துக்கொண்ட எஸ். ரா ,ரஜினிகாந்த் அவர்களின் அன்பையும் ,உயர்பண்புகளையும் புகழ்ந்துரைத்தார் .

சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு பேசியது குறித்து பேசியவர்கள் அனைவரும் பெரு மகிழ்வு தெரிவித்துக்கொண்டுள்ளனர் .

ரஜினி உரையின் விடியோ பதிவு

எஸ். ரா வும் ரஜினி யும் நீண்ட கால நண்பர்கள் எனவும் , எழுத்தாளர்களை பாராட்டியும் தக்க சன்மானம் , கௌரவம் அளித்து அவர்களை அங்கீகரித்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் ரஜினி பேசினார் .

பத்தாவது மட்டுமே படித்துள்ள தாம் புத்தகங்கள் வாசித்ததன் வாயிலாகத் தான் பல நன்மைகள் அடைந்துள்ளதாகவும் இன்றைய இளைஞர்கள் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்திக்கொள்வதே அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது என்றார்.

தனக்கு அத்தனை மொழி வல்லுனம் இல்லாத காரணத்தால் எஸ். ரா வின் உதவியோடு தன்னுடைய சுயசரிதை எழுதப்பட்டிருப்பதாகவும் பலர் வாழ்வின் உண்மைகள் வெளிவரக்கூடிய அபாயம் இருப்பதால் அதை வெளியிடுவதில் தனக்கு தயக்கம் இருப்பதாகவும் ரஜினி தெரிவித்தது புதிய செய்தி .

“உயிர்மை கூட்டங்களில் அந்தந்த எழுத்தாளர்களின் மேல் உள்ள அன்பு கருதியும் நட்பு கருதியும் வந்து பேசுகிறவர்களே அதிகம். உயிர்மை என்ற இதழின் அடையாளமும் புத்தகங்களை கவனப்படுதுவதற்காக செய்கிற முயற்சிகளும் வேறு வேறானவை. மேலும் என்னால் கடுமையாக விமர்சிக்கபட்ட வெகுசன ஆளுமைகள்கூட உயிர்மை மேடைகளில் வந்து பேசியிருக்கிறார்கள். இந்த பெருந்தன்மை எதையும் வேறு இடத்தில் காணமுடிந்ததில்லை “என்று தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன் .

அந்த விழாவின் காணொளி சுட்டிக்கு இங்கே சொடுக்கவும்

தமிழுக்கு ஒருவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் இந்த விருதை தனது 46 வது வயதில் பெற்றிருக்கும் எஸ். ரா அவர்களுக்கு மூன்றாம்கோணத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.இப்படி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து மிகச்சிறப்பான முறையில் அதை நடத்தியிருக்கும் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

 

தொகுப்பு

..ஷஹி..

 

tags

manshyaputhran, rajini, sra , vairamuthu, iyal awards, canada,

- சுந்தர ராமசாமி,கே. கணேஷ்,வெங்கட் சாமிநாதன்,இ. பத்மநாப ஐயர்,ஜோர்ஜ் எல். ஹார்ட்
ஏ. சி. தாசீசியஸ்,லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்,அம்பை,கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன்
எஸ். பொன்னுத்துரை , எஸ். ரா , எஸ். ராமகிருஷ்ணன் , வைரமுத்து , ரஜினி, ரஜினிகாந்த், உயிர்மை , மனுஷ்யபுத்திரன் , இயல் விருது கனடியதமிழ்இலக்கியத்தோட்டம்,ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக்கழகம்

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>