/* ]]> */
Mar 072012
 

உபி தேர்தலும் நமிதா பதில்களும் -

ராகுல்ஜி டு ரசகுல்லாஜி

நமிதா ஜோக்ஸ் namitha jokes

நமிதா ஜோக்ஸ் namitha jokes

 

உபி தேர்தல்ல என்டிடிவி மாதிரி பிரபல சேனல் எல்லாம் ஹை லெவலா ராஹுல் கிட்டயும் சோனியா கிட்டயும் பேட்டி எடுக்குது. தமிழ் பத்திரிகைகள் எல்லாம் அட்லீஸ்ட் வாசன் லெவல்லயாவது பேட்டி எடுக்குது. நம்ம அரசியல் லெவலுக்கு எட்டின வரை தமிழ்நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கு, வருங்கால முதலமைச்சர் நமிதா தான் நம்ம மனக்கண்ணுக்கு வந்தாங்க. அவங்கள உபி தேர்தல் குறித்து ஒரு வேட்டி எடுக்கலாமனு சீ… பேட்டி எடுக்கலாம்னு நெனச்சோம்….

குறும்பு குப்பு : வணக்கங்க நான் மூன்றாம் கோணம் வலை பத்திரிக்கையிலிருந்து வர்ரேன்…

நமிதா : வண்க்கம் மச்சான்

குகு : இந்த உபி முடிவை பத்தி என்ன நெனக்கிறீங்க ?

நமிதா : ஏன் மச்சான் திட்டுது ?

குகு : அய்யோ உங்களப் போயி நானு … திட்டவேயில்லங்க…

நமிதா : ஏதோ கொஞ்சம் வெயிட் போட்டிருக்குது ஒத்துக்குறேன்… அங்க இங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா சதை போட்டிருக்கு … அதுக்காக உப்பி போயிருக்கேண்னு எப்டி மச்சான் சொல்லுது?

குகு : அய்யோ இது அந்த உபி இல்லங்க… உத்திர பிரதேச தேர்தல பத்தி நீங்க என்ன நெனக்குறீங்கன்னு கேட்டேன்.. இப்ப சமாஜ்வாடிக்கு தனி மெஜாரிட்டி கெடச்சுடுச்சே !

நமிதா : நல்லது தானே எனக்கு எப்பவும் மேஜர் தான் புடிக்கும் மைனர் புடிக்காது மச்சான் ! ஆனா தனியா ஏன் இருக்கணும் ? சேர்ந்து இருந்தாத்தான ஜாலி ?

நமிதா  namitha images

நமிதா namitha images

குகு :  இப்ப அடுத்த முதல்வர் முலாய…

நமிதா : சீ… அசிங்க அசிங்கமா பேசுது மச்சான் நீ…

குகு : அய்யய்யோ முலாயம் சிங் யாதவ் னு முடிக்க வந்தேங்க…

நமிதா : அப்டியா அவர விட எனக்கு அகிலேஷ் புடிச்சுருக்குது ஸ்மார்டா இருக்குது…

குகு : உங்களுக்கு புடிச்ச தலைவர்?

நமிதா : நான் குஜராத் பொண்ணு எனக்கு மோடிதான் புடிக்கும் !

குகு : ஆனா அவரு தேர்தல்ல பிரச்சாரம் செய்ய போகலையே மோடி ரொம்ப மூடி ஆயிட்டாரோ?

நமிதா : மூடி… எனக்கு மூடி வைக்கிறது பிடிக்கவே பிடிக்காது எல்லாத்தையும் திறந்து வச்சிட்டு ஓபனா இருக்கணும் ! என்ன மாதிரி !

குகு : அது சரி… அத விடுங்க ராகுல் காந்தி இவ்வளவு பிரச்சாரம் செஞ்சும் ஃபெயிலியர் ஆயிடுச்சே ? அதப்பத்தி

நமிதா : ராகுல்ஜி எனக்கு ரொம்ப பிடிக்கும் ! அவர மாதிரி இளைஞர்கள் நெறய பேரு பாலிடிக்ஸ் வந்தா என்ன மாதிரி நடிகைகள் மதிப்பு தானா கூடும்…

குகு : நீங்களும் அவரோட இணையும் திட்டம் இருக்கா ?

நமிதா : எந்த ஹோட்டல்ல ?

குகு : மேடம் , அரசியல் கட்சியில அவரு கூட இணையுறதப் பத்தி …

நமிதா namitha jokes

நமிதா namitha jokes

நமிதா : எந்த ஹோட்டல்ல இணையும் விழா பார்ட்டி வச்சுக்கலாம்னு கேட்டேன்…  பார்கலாம் நல்ல ஐடியாதான்…

குகு : ( ஜொள்ளுடன் ) நீங்க அவரு கூட ஜாயின் ஆயிட்டீங்கன்னா நாங்க ராகுல்ஜி யும் ரசகுல்லாஜி யும்னு போஸ்டர் அடிப்போம் … காங்கிரஸ் சின்னம் கூட வெறும் கை யிலேர்ந்து ஃபுல் பாடிக்கு மாதிடலாம்… ஏன்னா முழு பாடியுமே நம்ம அசட் தான ?

நமிதா : சீ நாட்டி ! ரசகுல்லால ஜீரா ரொம்ப இருக்கு தொடச்சுக்கோ மச்சான்!

குகு : (ஜொள்ளை கன்ட்ரோல் பண்ணியபடி) இனிமே பரியங்காவுக்குத்தான் அதிகம் செல்வாக்குன்னு சொல்றாங்களே ?

நமிதா : அவ ஃபேஷன்ல நடிச்சதுலேர்ந்து பெரிசா அலட்டிக்குறா … அவகிட்ட ஒரு பங்கு இருக்குரது எல்லாமே எங்கிட்ட ரெண்டு பங்கு இருக்கு !

குகு : மேடம்…

நமிதா : நடிப்புத் தெறமைய சொன்னேன்…

குகு : இல்ல மேடம் பிரியங்கா சோப்ரா இல்ல , ப்ரியங்கா வதேரா !

நமிதா : சோப்ராவோ வதேராவோ நான் ரா ரா பாடுனா எவளுமே தாங்க மாட்டா !

குகு : (பேட்டி அன்கன்ரோலா போவதை உணர்ந்தபடி ) ரொம்ப நன்றி மேடம் !

நமிதா : நான் ஸ்லிம்மா இருக்குர மாதிரி பழைய ஃபோட்டோ போடு மச்சான் !

குகு : புது ஃபோட்டோ போட நெனச்சாலும் முடியாது மேடம்…

நமிதா : ஒய் மச்சான் ?

குகு : எங்க மானிடர் சைஸ் பத்தாது மேடம், வர்ட்டா?

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>