/* ]]> */
Sep 122012
 
vijay-thuppaki review vijay thuppaki vimarsanam - துப்பாக்கி விமர்சனம்

தீபாவளிக்கு வரப்போக்குது  விஜய்யின் துப்பாக்கி

vijays-thuppakithuppaki-vijaythuppaki

vijays-thuppakithuppaki-vijaythuppaki

இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது. விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’  தீபாவளியன்று ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ,ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் படம்  வெளிவர இருக்கிறது. இன்னுமொரு கூடுதல் தகவல் என்னவென்றால், ‘துப்பாக்கி’ படம் முடிவானதும்,  விஜய், தனது அடுத்த படத்துக்கான வேலைகளைத் துவக்கிவிட்டார். இயக்குனர் ஏ.எல். விஜய்  மற்றும் நடிகை சமந்தாவுடன் ஜோடி சேருகிறார். டைரக்டர் ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிக்க முடியாமல் போன சமந்தா இந்தப் படத்தில் விஜயுடன் கதாநாயகியாகிறார்.
‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ படம் வெளியாகி மூன்றே நாட்களில் வலை தளத்தில்  10 லட்சம் ஹிட்ஸ் பதிவாகியுள்ளது. . இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவனின் இயக்கமும் இளையராஜாவின் இசையும் முதன்முதலாக இணைந்துள்ளது ஒரு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தின் ஆடியோ பிரம்மாண்டமான  இசைவிழாவில் சமீபத்தில் சென்னையில் வெளியானது. படத் தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பையும் மீறி, ஆடியோ வெளியாகும் முன்பே 1லட்சம் ஆடியோ கேசட்டுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்-தெலுங்கு என்று இரு மொழிகளில் ஜீவனின் இயக்கத்தில்  உருவாகும்  ‘தாளம்’ என்ற  படத்துக்காக  ஷூட் பண்ணப்பட்ட  பாடல் காட்சிதான் இதுவரை நான நடித்த எண்ணற்ற காட்சிகளில் மிகவும் த்ரில்லானது என்கிறார்  படத்தின் நாயகி பியா பாஜ்பை. “அருப்புக்கோட்டையில்  3500 அடி உயரத்தில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது மழைதூறிக் கொண்டிருந்ததால், பாறையில் கால் வைக்கமுடியாமல் வழுக்கியது. காற்று வேறு பலமாக வீசி நிலைமையை மேலும் மோசமாக்கியது.  நான் தாவணி அணிந்திருந்ததால், அந்தக் காட்சியில் நடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. நான் பாறைக்குப் பாறை தாவுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் பயந்து போயிருந்த எனக்கு மிகவும்  உதவியாக  இருந்த சப்போர்டிங் டீமுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். ஒரு வழியாக அந்த்க் காட்சி முடிந்தது.”என்கிறார் பியா. ‘சட்டம் ஒரு இருட்டறை’ யின்  தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார், பியா. ” செப்டம்பர் 10ம் தேதி எங்கள் டீம் ஹாங்காங் புறப்படவுள்ளது. . சட்டம் ஒரு இருட்டறைக்காக  பல முக்கியமான காட்சிகள் படமாகவுள்ளது. ” என்று   மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார் பியா.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>