/* ]]> */
Apr 252012
 

பர்யங்கிலிருந்து மானசரோவர் என்கிற புனித  ஏரியை நோக்கிப்புறப்பட்டோம்.

மானசரோவர்

பிரம்மதேவர் தமது மனதிலிருந்து உருவாக்கியதுதான் மானசரோவர். மனஸ் என்றால் மனது.சரோவர் என்றால் குளம். கடல் மட்டத்திலிருந்து சுமார்4,500 மீட்டர் உயரத்தில்,320 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 110கிலோ மீ. பிரம்மாண்டமான ஏரி.

கயிலாயத்தின் தெற்கே 30கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மானசரோவர் தடாகம்.இதன் தென்புறம் இன்னொரு வெள்ளிப்பனிமலையான “குர்ல மந்தாதா” மலைத் தொடர்.

மானசரோவரில் குர்ல மந்தாத மலைத்தொடர்

நீலவண்ணத்தில் மின்னும் இத்தடாகம் நிமிடத்திற்கு நிமிடம் வர்ணம் மாறுகிற அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கோடானு கோடி நட்சத்திரங்களை தண்ணீரில் பிரதிபலிக்கும் அழகே அழகு. இதுவரை வாழ்வில் காணாத வகையில் அதிக எண்ணிக்கையில் நம்மால் இங்கு நட்சத்திரங்களைக் காண முடிவது மற்றுமொரு அதிசயம்.மானசரோவரை சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதுவர். தேவியின் இடது குதிகால் பாகம் விழுந்த பீடமே மானசரோவர் சக்தி பீடம்.
திபெத்தியர்கள் இத்தடாகத்தை “சோ-மஃப்ம்” என்று அழைக்கின்றனர். இரவிலே பிரம்மமுகூர்த்தத்திலே தேவர்களும், தேவதைகளும் நட்சத்திர ரூபத்தில் இத்தடாகத்தில் நீராடுவதாக நம்பப்படுகிறது . திருக்கயிலாய யாத்திரை செல்லும் பல்வேறு யாத்ரீகர்கள் இந்த அற்புதத்தை நேரில் கண்டுள்ளனர். இக்கரையில் கிடைக்கும் கல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பது ஐதீகம்.இன்றும் மானசரோவரில் ராஜ அன்னப்பறவையைக் காண்பவர்கள் பிரம்மாவைக் காண்பதாக ஐதீகம்.

மேலும், நீலத்தாமரைமலர்கள் இத்தடாகத்தில் பூக்கின்றன.மானசரோவரில் நீராடுவது,புண்ணியமானது;உடலும்,மனமும் புனிதமடைகின்றது.

அந்த அசதியிலும்,கனவு ஏரியைக் காணப்போகிறோம் என்று  மனது குதூகலித்தது.எப்போதோ எங்கோ சிறுவயதில் படித்த ஞாபகம் . அவ்வளவு உயரமான  இடத்தில் பெரீய்ய்ய்ய்ய    ஏரியா? தண்ணீ  எப்படி மேலேயே  நிக்கும்?கீழே கொட்டாதா?நம்மால்  அங்கெல்லாம் போக  முடியுமா? இப்படி பலப்பல எண்ணங்கள் ;பலப்பல  கனவுகள்!– அந்த அறியாத வயதில்! வயது  ஏற ஏற  எப்படியும்  மானசரோவரை தரிசிக்க  வேண்டும் என்று  மனதில் உறுதியும்  வேர் விட ஆரம்பித்தது .  பாபாவின்  வழிகாட்டுதலாலும்,ஈசனின் கருணையாலும்,எனது ஏக்கம்  இன்னும் சிறிது நேரத்தில் நிறைவேறப்போவதை நினைத்து   மனம் குதூகலித்தது.ஆஹா! அதோ,அதோ, அங்கே ஏரி தென்படுகிறது.

களைப்பெல்லாம்  போயே போச்!  ஆஹா,அங்கே மற்றுமொறு இன்ப அதிர்ச்சி—திருக்கயிலாயமலை தரிசனம் – தெற்கு முகம்;  அருமையான தரிசனம்.

மானசரோவரில் காட்சியளிக்கும் தெற்கு முக கயிலாய தரிசனம்.சில யாத்திரிகர்கள் தெற்கு முக தரிசனமே போதுமானது என்று திரும்பி விடுகின்றனர். பரிக்கிரமா செய்ய பயப்படுபவர்கள், திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், மேற்கொண்டு சிரமம் எதிர்னோக்க விரும்பாதவர்கள்,தங்கள் பயணத்தை முடித்துக்கொள்கின்றனர்.

கற்பூர தீபாராதனை செய்து நமஸ்கரித்தோம். பிறகு ஏரியை நோக்கிப்புறப்பட்டோம்.பாதை மிகவும் அருமையாகப் போடப்பட்டிருந்தது.(சீனர்களுக்கு நன்றி)

.

இப்படத்தில்  தெரிவது இராட்சஸ (அ) இராவணன் ஏரி. விஷத்தன்மை கொண்டதாம்.அருகே  செல்ல வேண்டாம்  என்றார்கள்உடனிருப்பவர்  மலேசியாவிலிருந்து வந்த நண்பர்.

பிறகு    ஏரியை வலம் வந்தோம்.   மானசரோவர் ஏரிக் கரையில் ஜீப்பை நிறுத்தினார்கள்  கதிரவனின் கதிர்கள்  நீரில் வைரங்களாய்  மின்னின.

புனித ஏரி (கனவு ஏரி)கதிரவனின் ஒளி நீரில் வைர கற்களை தூவி விட்டாற் போல் இருக்கும். ம், ஒரு முறை சென்று தான் வாருங்களேன்,அடியேன் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

நல்ல வெயில்.குளிர்ந்த காற்று  நம்மை  கீழே   சாய்த்துவிடும் அளவிற்கு இருந்தது.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள், ஆனால் மானசரோவரில் வீசும் காற்று நம்மை சென்னைக்கே தூக்கிக்கொண்டு விட்டுவிடும் போலிருக்கும்,ம், தலையணி பறப்பதை பாருங்கள்.

அதிக பட்ச வெய்யில்,குளிர்ந்த மிக வேகமாக வீசும் காற்று,இரவில் பிரமிக்க வைக்கும் நட்சத்திரக்கூட்டம்,என்று சென்னைவாசிகள் புதுமையாக அனுபவிக்கலாம்

சில ஆண்கள் அப்பொழுதே  நீராடினர்.இரவு நெருங்க நெருங்க குளிர் காற்று  பற்களை  தாளமிட  வைக்கும். அண்ணாந்து பார்த்தால்  நட்சத்திரத்திருவிழாதான்,இதுவரை காணாத நட்சத்திரக்கூட்டம்.பிரமிப்பாக இருந்தது .

பிறகு கெஸ்ட் ஹவுஸ்  சென்றோம். மிகவும் தூய்மையாக இருந்தது. கட்டில்கள்  போடப்பட்டிருக்கும்.

பின்னால் தெரிவது மண்ணால் கட்டப்பட்ட(mudhouse)பெரிய அறைகள்.கண்ணாடி ஜன்னல்கள்,திரைச்சீலைகள் எல்லாம் இருக்கும். இராஜஸ்தானிலிருந்து புண்ணியபூமிக்கு வந்திருந்த இராம் என்கிற இந்த இளைஞர் அடியேனை சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அக்காவிற்கு அன்புடன் அளித்த 500/.ரூபாயுடன், இன்றும் சகோதரப்பாசம் தொடர்கிறது.

மெத்தை,  ,தலையணை கம்பளி   என்று  வசதியாக  இருக்கும். நமக்குதான் தூக்கம்  வராது . எத்தனை அடுக்கு உடைகள்? தெர்மல் உடை,மேலே சாதாரண உடை, அதற்கு மேல்  ஸ்வெட்டர், அதற்கு  மேல் ஜெர்கின்,  கையுறை,  காலுறை,  தலையில் மஃளர்,(  போதுமா ? )  சென்னை வாசி களுக்கு பழக்கமில்லாத உடைகள் . தூங்குவதற்கு நேரம் பிடிக்கும்.

 எங்கள் சாம்ராட் ட்ராவெல்ஸ் குழுவினர் மானசரோவர் நீரை அண்டாக்களில் நிரப்பி கேஸ் அடுப்புகளில் சுட வைத்துக் கொடுத்தனர்.ஏரியின் நீர் மிகவும் குளிர்ந்ததாக இருந்தது.விறைத்துக்கொள்ளும் அளவிற்கு  ஜில்லென்று  இருந்தது . எனது பாபாவை மனதில் நினைத்துக்கொண்டு, நமச்சிவாய,நமச்சிவாய என்று கூறிக்கொண்டேஅடியேன் ,அந்தப் புனித நீரில், படுத்து எழுந்தேன் , முழுவதுமாக நனைந்தேன். ( அடியேனின் சிறு   வயது  கனவுகளில்  ஒன்று  நிறைவேறியது ) .  ஒன்றும் புரியவில்லை.  தோலெல்லாம்  வெளுத்து விட்டது .ரோபோவைப்போல்  நடந்து  கரைக்கு வந்தேன். சுடு நீரை த்தலையில் ஊற்றிக்கொண்ட பிறகே சுரணை வந்தது.

 படத்தில் கானப்படுவது மண்ணால் அமைக்கப்பட்ட திபெத்தியன் கழிப்பறை.மேற் கூறை கிடையாது, கதவுகளும் கிடையாது.ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிதான்.மறைவாகத்தான் இருக்கும், ஆனால் மணக்கவும் இருக்கும். மானசரோவரில் நீராடுவதும்,கயிலைமலையானை தரிசிப்பதும்தான் வாழ்வின் முக்கிய லட்சியம் என்று நினைக்கும் பக்தர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகத்தெரியாது.

சாம்ராட் குழுவினர்கள் பெண்கள்  உடை மாற்றுவதற்காக  டெண்ட் அடித்துக் கொடுத்திருந்தனர். அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டே  உடை மாற்றிக் கொண்டோம் . பிறகு ஹோமம் வளர்த்தார்கள்.

மானசரோவரில் ஹோமம் வளர்த்து பூஜை செய்வார்கள்

அது வரை பனிமூடியிருந்த திருக்கயிலாயமலை தீபாராதனை செய்யும்  போது ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்தது.

அனைவரும் “ஓம் நமச்சிவாய” என்று உணர்ச்சிப்பெருக்கோடு,பக்திப் பரவசத்தோடு  கோஷம் எழுப்பினர்.அந்தப் பரமனை நமஸ்கரித்தோம். 5 லிட்டர் கேன்களின்  மனசரோவரின் தீர்த்தத்தை நிரப்பிக்கொண்டோம்.சிலர் கற்களையும்  சேகரித்துக்  கொண்டார்கள்.

மேற்காணும் காட்சிக்கு யாராவது கவிதை எழுதுங்களேன். உங்கள் மீது கருணை காட்ட கயிலை நாதருக்கு சிபாரிசு செய்கிறேன் …

தொடரும்..

..பாபா நளினி ..

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>