/* ]]> */
Apr 032012
 

 

நேபாள மலைத்தொடர் – விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

 

திருக்கயிலாயத்தில்கோவில் எதுவும் இல்லாததால் நாம் மனப்பூர்வமாகவே அந்த பரமனை வனங்கமுடியும். கைலாயகிரிவலமே மிகவும்உத்தமமானது. இது ” பரிக்ரமா “ என்று அழைக்கப்படுகிறது. 3 நாட்கள் தொடரும் இக்கிரிவலமானது 57கி.மீ. தூரமானது. திபெத்தியர்கள் கிரிவலத்தை ” கோரா” என்று அழைக்கின்றனர். திபெத்தியெர்களில் சிலர் ஒரே நாளில் கோராவைமுடிக்கின்றனர் .இந்த பரிக்ரமாவின் மிக மிக உயரமான இடம் “டோல்மா” கணவாய்.—-உயரம்–19,500 அடி(சுமார்-6714மீ ).டோல்மாவிலிருந்து கீழே இறங்கும்போது “கௌரி குளம்” என்கிற மரகதப்பச்சை நிறத்தில் காணப்படும் குளத்தை தரிசிக்கலாம். இந்துக்கள் பார்வதி தேவியின் இருப்பிடமாக இவ்விடத்தை வழிபடுகிறார்கள்.

இந்திய குடிமக்களுக்கு திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள தற்போது 2 வழிகள் மட்டுமே உள்ளன.

முதலாவது இந்திய அரசு நடத்தும் யாத்திரை, மொத்தம் சுமார் 31 நாட்கள். 200கி.மீ நடைப்பயணம்.(அ) மட்டக்குதிரை பயணம்.

இரண்டாவது நேபாளதேசம் வழியாகச் செல்வது .  இது தனியார் நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படுகிறது.

அடியேன் தேர்ந்தெடுத்தது சாம்ராட் ஹாலிடேஸ் பிரைவெட் லிமிடெட்
பயணம் மொத்தம் 21 நாட்கள். விமானம் மூலம் 18 நாட்கள். நடைப்பயணம் குறைவு.
விமானம் மூலம் டெல்லி சென்று பின் அங்கிருந்து காட்மாண்ட் சென்றேன். நம்மை வரவேற்க விமானநிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்கின்றனர். தனியாகத்தான் சென்றேன். காரில் அமர்ந்த போதுதான் தெரிந்தது இன்னும் சில பெண்மணிகளும் தனியாக வந்திருக்கிறார்கள் என்று.அனைவரும் தோழமையுடன் பழக ஆரம்பித்தோம் . (இன்றும் நட்பு தொடர்கிறது ) .

 

நேபாளம் மிகவும் அழகான நாடு. இந்துக் கோவில்கள் அதிகம்.மக்களும்
எளிமையாகக் காணப்படுகிறார்கள். கடின உழைப்பாளிகள்,.தெய்வபக்தி அதிகம் , தன்மையானவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.யாத்திரை முடியும் வரை அருமையான கவனிப்பு.

ஹோட்டல் வரவேற்பறை


நேபாளின் தலைநகரமான காட்மாண்டுவில்  ஒரு அருமையான,
சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டோம். இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.சுவை நன்றாக இருந்தது. இரயில் பயணம் மேற்கொண்டவர்கள்
7 மணி அளவில் வந்து சேர்ந்தனர். இரவு உணவுக்குப்பின் அடுத்த நாள் மேற்கொள்ளவேண்டிய எவெரெஸ்ட் பயணம் பற்றிய பயணக்குறிப்புகளைப் பற்றி தகவல் அளித்தார்கள.

”டென்சிங்கின் ” உடன் பிறவா சகோதரியாக என்னை கற்பனை செய்து கொண்டு உறங்கச் சென்றேன்…

 

தொடரும்

..பாபா நளினி…

 

tags

tensing, nepal, mukthinath, himalayas , katmand, dolma, parikrama, kora

டென்சிங், முக்தினாத் , இமயமலை , காட்மண்ட் , பரிக்ரமா, கோரா

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>