/* ]]> */
May 142012
 

வழி எங்கிலும் திபெத்திய  பக்தர்கள் பிரார்த்தனைக் கொடிகளை கட்டுகின்றனர்.

வஜ்ரபாணி, அவலோகீஸ்வரம் குன்றுகளுக்கு இடையே காட்சி அளிக்கும் திருக்கயிலாயத்தின் வடக்கு முக தரிசனம் அர்ஜூனன்  ”பாசுபத அஸ்த்திரம்”  பெரும் பொருட்டு  சிவபெருமானை  நோக்கி  தவம்  செய்த  இடம்  திருக்கயிலாயம்  என்று கூறப்படுகிறது.

காமதேனு சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் கயிலாயம் எனக்கூறப்படுகிறது.பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது கயிலை யாத்திரை சென்றார்கள் என்று மஹாபாரதம் கூறுகிறது. 

காமாதேனு  சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம்  கயிலாயம் ஆகும்.  பஞ்சபாண்டவர்கள்  வனவாசசெய்த போது  கயிலை யாத்திரை  சென்றார்கள்  என்றும்,மஹா விஷ்ணு கயிலாயத்தில்  தவம்  செய்தார்  என்றும், செல்வத்துக்கு அதிபதியான குபேரனும், கயிலாயத்தில்தான்  வாசம்  செய்கிறார்  என்றும்  மஹாபாரதம்  கூறுகிறது.சிவபெருமான்  நெற்றிக்கண்ணால் மன்மதனை  எரித்த இடம்கயிலாயம்;அதனால்,கயிலை  யாத்திரை  செல்பவர்களின்  (”வீண் ஆசைகள்”) ஆசைகள்  அழிந்துவிடும்   என்றும்  கூறப்படுகிறது.

சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த இடம் கயிலாயம்.அதனால் கயிலை யாத்திரை செல்பவர்களின் வீண் ஆசைகள் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

கயிலைமலையின் உச்சி  சூட்சுமமாக மேலே  உள்ள  ஏழு  உலகங்களையும்,   கயிலைமலையின்  அடிபாகம்   கீழே  உள்ள ஏழு  உலகங்களையும்  வியாபித்திருக்கிறது   என்று   கந்த புராணம்   கூறுகிறது.

கயிலைமலையின் உச்சி சூட்சுமமாக மேலே உள்ள ஏழு உலகங்களையும், அடிப்பாகம் கீழே உள்ள ஏழு உலகங்களையும் வியாபித்திருக்கின்றது, என்றுகந்தபுராணம் கூறுகிறது.

மகாவிஷ்ணு கயிலாயத்தில் தவம் செய்தார் என்றும்,செல்வத்துக்கு அதிபதியான குபேரனும் கயிலாயத்தில் வாசம் செய்கிறார்என்றும்,மகாபாரதம் கூறுகிறது. வடக்கு முகம் ”லிங்க தரிசனம்” என்றும் கருதப்படுகிறது

முதல் நாள் பரிக்கிரமாவில்  வழியில்  காணப்படும்  மலைகளின் அமைப்பில் சில  –மஹா கணபதி  போலவும், (கணபதி மலை யானையைப்போலவும்,  வள்ளி தெய்வயானை  சமேதராக உள்ள முருகப்பெருமான்  போலவும்  கண்ணுக்குவியப்பளிக்கும்.(அவரவர்  விருப்பத்திற்கேற்ப).

நமது  அனுபவத்திற்கு   வருவோம்.மலை இறக்கங்களில்  வரும்போது, குதிரையின்  பின் புற சேணத்தைப் பிடித்துக்கொண்டு  பின்னுக்குசாய்ந்து  கழுத்தை  மேலே  தூக்கி  பார்க்க  வேண்டும்.  இல்லாவிட்டால்  விழுந்து  விடுவோம்.மலை  ஏற்றங்களில்   முன்னுக்கு  சாய்ந்து  குதிரையின்  பிடரியை  கெட்டியாகப் பிடித்துக்கொண்டு    இலேசாக  குதிரையின் மீது  படுக்க வேண்டும். இவ்வாறு  செய்யவேண்டும்என்பதை  குதிரை ஓட்டி, நமக்கு செய்கைகளால்  புரிய  வைத்து விடுவார்.   செங்குத்தான  சரிவு;
செங்குத்தான  உயரம்!   கிடைத்தற்கரிய  அனுபவம்.   குதிரையோட்டி,  அவர்  மலையோரமாக பாதுகாப்பாகத்தான்  செல்வார்;  ஆனால் குதிரையின்  கடிவாளத்தை  இடது  கையில்பிடித்துக்கொள்வார்;  அதனால்  குதிரை,  சரிவின்  விளிம்பில்  நடக்கும். குதிரையின்   மீதுஅமர்ந்து  இருக்கும்  நமக்கு  கலக்கமாக  இருக்கும்; வழியெல்லாம்   வீடியோ வும்   புகைப்படமும்எடுக்க  திட்டமிட்டிருந்தேன்.  ஆனால் பாதையைப்பார்த்தப்பிறகு  குதிரையின்  குதிரையின்  சேணத்திலிருந்து    கையை  எடுக்கவேயில்லை.  சேணம்  போட்ட  குதிரைதான். ஆனால்  உட்காரும்  இடம்,  எல்லாம் வலிக்கும்.  எப்படா  இறங்குவோம்   என்று  இருக்கும்.

”திராபக்” என்ற  இடத்தைஅடைவதற்குள்   வழியில்  சில   இடங்களில்  கூடாரம்   அமைத்து  கடைகள்   போட்டிருப்பார்கள்.
யாத்ரீகர்களுக்கு   தேவையான   பொருட்களை   விற்பார்கள்.   குளிர்பானம்,
தண்ணீர், பிஸ்கட்,சாக்லெட்  போன்ற   பல  பொருட்கள்    கிடைக்கும்.  அங்கு குதிரையோட்டிகள்   சிறிது   நேரம் ஓய்வு  எடுத்துக்கொள்வார்கள்.   நம்மையும்  இறக்கிவிடுவார்கள்.  நமக்கு   அளிக்கப்பட்டகாலை  சிற்றுண்டி,,  மதிய   உணவு   இவற்றை   சாப்பிட   ஏதுவாக   இருக்கும்.நாம்  உண்ணும்போது    குதிரையோட்டி–களுக்கும் சிறிது அளித்தால்   மிகவும்   சந்தோஷப்படுவார்கள்.ஒரு  வழியாக  ”திராபக்கை”  சென்று  அடைந்தோம்.

திராபக்–உயரம்-4,890 மீ. இங்கு பல அறைகள் கொண்ட கான்கிரீட் கட்டிடம்.கிரில் அமைப்பைப் பாருங்கள் திபெத்தியர்களின் கடின உழைப்பையா?(அ) சீனர்களின்அறிவு கூர்மையையா? எதை வியப்பது? மனித சக்தி அளவிட முடியாதது. எல்லாம் “அவன் செயல்”மிகவும்  தாமதமாகச் சென்றது  அடியேன்தான்  ‘ச்சூ,ச்சூ’   என்று   குதிரைக்கு   நன்றி   சொல்லியவாரே   பரிவாகனத்திலிருந்து  இறங்கினேன்.
இது  வரை  கண்ணுக்கெட்டிய   தூரத்தில்தெரிந்த  அந்தப்பரமனின்  இருப்பிடம்,   கைக்கெட்டிய   தூரத்தில்   இருப்பது   போன்ற
தோற்றம்.அனைவரும்   வணங்கினோம்.

திராபக்–உயரம்-4,890 மீ. இங்கு பல அறைகள் கொண்ட கான்கிரீட் கட்டிடம்.கிரில் அமைப்பைப் பாருங்கள் . திபெத்தியர்களின் கடின உழைப்பையா?(அ) சீனர்களின் அறிவு கூர்மையையா? எதை வியப்பது? மனித சக்தி அளவிட முடியாதது. எல்லாம் “அவன் செயல்”

ஆச்சரியம்!   அதிசயம்!  ஆனால்   உண்மை!    அங்கே  ஒரு  அழகான   காங்கிரீட் கட்டடம்.  யமத்துவாரத்தைத்   தாண்டி  எந்த  வாகனமும்    செல்ல   முடியாத   சூழ்நிலை.அப்படியிருக்க   இது   எப்படி   சாத்தியம்   என்று   வியந்தோம்.சீனர்களின்  திறமையையும் திபெத்தியெர்களின்    கடும்   உழைப்பையையும்,   நினைத்து   வியந்தோம்.   மேலும்,
உள்ளே   சென்றால்   ம்ற்றுமொரு     இன்ப   அதிர்ச்சி,     புத்தம்புது    கட்டில்   தலையணை,  மெத்தை ,  கம்பளி,    மரத்தினால்செய்யப்பட்ட   அலமாரி   சிறிய   மேஜை   என்று ஏக   அமக்களம்.  கடவுளுக்கும்,   மனிதர்களுக்கும்     நன்றி   சொல்லியவாரே   அனைவரும்    அவரவர்களுக்கு   என்று   ஒதுக்கப்பட்ட   அறைக்குள்    சென்றோம்.  மலைமகளின்  கணவரை
அறைக்குள்   இருந்தபடியே  துதிப்பாடல்களால்   துதித்தோம்.   ”விஷ்ணு  சகஸ்ரநாமம் ” பாராயணம்   செய்தோம்.வெளியே   செல்லமுடியாத   அளவுக்கு  குளிர்  பலமாக  இருந்தது.  யாரும்   வெளியெசெல்லவேண்டாம்   என்றார்கள்.  சாம்ராட்   அன்பர்கள்   இரவு   உணவை  அறைக்குள்
எடுத்து  வந்து  சுடசுட  வழங்கினர்.

கயிலையை நினைப்பவர்கள்,காசியில் எல்லாவித வழிபாடுகளையும் செய்பவர்களக்காட்டிலும்,உயர்ந்தவர்கள்ஆவார்கள்.பிறவிப்பிணியிலிருந்து விடுபடகயிலையாத்திரைசெல்பவர்கள்,தேவர்களாகவேகருதப்படுவார்கள் என்று சிவபெருமான் கூறியதாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. முதல் நாள்பரிக்கிரமாவில்,காணக்கிடைக்கும் வடக்கு முக தரிசனம்

மிகவும் கடினமான 2-ம் நாள்  பரிக்கிரமாவிற்கு  அனைவரையும்  மனதளவிலும்,  உடலளவிலும்  தயாராகும்படியும்,நன்கு  உறங்கும்படியும்  அனைவரையும்  கேட்டுக்கொண்டனர்.  பரமனை  தியானித்தபடியே  அனைவரும்  உறங்கச்சேன்றோம் .

தொடரும்

..பாபா நளினி…

tags

கயிலாயம் , காசி , விஷ்ணுபுராணம், பரிக்கிரமா , பரமன், சீனா , சீனர்கள் , யமத்துவாரம் , பயணக்கட்டுரை , ஆன்மீகப் பயணக்கட்டுரை , சிவபெருமான் , திபெத் , திபெத்தியர்கள் , குதிரை , மகா விஷ்ணு , மன்மதன்

kailash , manasarovar , mukthinath , parikrama, china, chinese , yamathuvaaram, tibeth , horse, horse ride

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>