/* ]]> */
Apr 112012
 
காட்மண்டுவில் இது போன்ற பாலங்கள் அதிகம்

…….. பிறகு  காட்மாண்டுவில் உள்ள சில முக்கியமான இடங்களை சுற்றிக்காண்பித்தார்கள் .. பசுபதினாத் ஆலயம் (சிவஸ்தலம்), சுயம்புனாத் — புத்தர் கோவில், சக்தி பீடம் — தட்சிணகாளி (தொப்புள் விழுந்த இடம்) என்று .

 

புத்தா  நீல்  கண்ட  பெருமாள்

புத்தா  என்றால்   நேபாளத்தில்    பழைய  என்று  அர்த்தம்.

சுயம்பு  என்றும் சொல்கிறார்கள்.  பெருமாள்  தோன்றியவிதம்   ஒருவருக்கும்   தெரியவில்லை . சுற்றியுள்ள  நீரில்  பாசி  பிடிக்காதாம். அதிசயம் ; ஆனால்  உண்மை.    

….தங்குமிடம் வந்து சேர்ந்தோம் .

மதிய உணவுக்குப்பின் அனைவரும் ஒன்று கூடினோம். சாம்ராட் ட்ராவல்ஸ்–ன் தலைவர் திருக்கயிலாயத்தின் சிறப்புகளையும், பயணத்தின் போது ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளை (தலைவலி,வாந்தி, மூக்கில் இலேசாக இரத்தம் வருவது, சோர்ந்து போதல்) எப்படி எதிர்கொள்வது, போன்ற பல குறிப்புகளைக் கொடுத்தார்.

பிரயாணத்தின் போது எங்களுக்கு வழிகாட்ட, சமையல் செய்ய, பிராணவாயு சிலிண்டரை தூக்கிவர, உதவி செய்ய என்று 9 பேர் கொண்ட குழுவை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

இந்தியாவின் பல்வேறு  பகுதிகளில் இருந்து யாத்திரீகர்கள் வந்திருந்தனர்அறிமுகப்படுத்திக்கொண்டோம் . சாம்ராட் என்று பெயரிடப்பட்ட பெரிய பையும் (டிராவல் பேக்) ஜெர்கினும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பைக்கும் தனித்தனி எண்கள். அடையாளம் காண்பதற்கு . நமது உடைகளை அந்தப் பையிற்குள் வைத்து விட்டு, நாம் கொண்டு சென்ற சூட்கேஸை ஓட்டல் லாக்கரில் வைத்துவிட வேண்டும்.

தொடரும்..

..பாபா நளினி..

 

tags

katmand , shiva , shiva temple, budha, mukthinath, nepal, neel kand perumal , pasupathinath temple, dhakshinakali

 

காட்மண்டு , சிவன் கோவில், ஷிவா , ஷிவ ஆலயம் , முக்தினாத் , நீல் கண்ட் பெருமாள் , பசுபதினாத் ஆலயம் , தக்ஷினகாளி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>