/* ]]> */
Apr 182012
 


திபெத்-உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி

இந்தப் பிரயாணத்தில்  முதுகில்  சுமப்பதற்கு  ஏதுவாக ( பள்ளிக்குழந்தைகள்  மாதிரி)   ஒரு பை  கட்டாயம்   கொண்டு  வரவேண்டும். அதில்  3 நாள் பரிக்கிரமாவிற்குத்  தேவையான  பொருட்கள் (  மாத்திரைகள்,  குடிநீர், பாதாம்  போன்ற  பருப்பு  வகையறாக்கள்,பிஸ்கட்,சாக்லேட்  ,டார்ச்   லைட் போன்ற   இன்னும்   சில அத்தியாவசியப் பொருட்கள் )     வைத்துக்கொள்ளவேண்டும்.  அந்த  “ஆனை  முகத்தானை”  வணங்கிவிட்டு,  “ஓம்   நமசிவாய”     என்று   கோஷமிட்டு அனைவரும்  டூரிஸ்ட்  கோச்சில்   ஏறினோம்.  5மணி  நேர  பிரயாணத்திற்குப் பிறகு  திபெத்—சீனா வின்  எல்லையை அடைந்தோம்.


நேபாள எல்லைக்கு அப்பால் திபெத்தின்ஆரம்பம்; சீனர்களின் ஆதிக்கம்

ஏகப்பட்ட கெடுபிடி. மரியாதையில்லாமல்  விரட்டுகிறார்கள்.  கேமராவை  வெளியே  எடுக்கக்கூடாதாம். காளை வாகனனை  மனதில்  இருத்தி  அமைதி  யாக  இருந்தோம்.  உள்ளே  அனுமதித்தார்கள்  . சல  சலத்து   ஓடும் நதி நீர் —   ஒரு பக்கம்  மலை,  சில்லென்ற  காற்று ,  என்று   சூழநிலை  ரம்மியமாக  இருந்தது.


ம்,ம், நேரில் காண்பதற்கு எப்படி இருக்கும்,நினைத்துப்பாருங்கள்

லேண்ட்  க்ரூஸர்   எனப்படும்  ஜீப்புகள்   தயாராக  இருந்தன. ஒரு  வண்டிக்கு  4  பேர்  என  அமர்ந்தோம்.  சௌகர்யமாக இருந்தது.  திபெத்தின்  ‘நியாலம்’    என்ற  ஊரை அடைந்தோம். உயரம்–3700 மீட்டர்.  குளிர்ந்த  காற்று   பலமாக வீசியது.   சிலர்   வாந்தி  எடுத்தனர்.  சிலர்  தலைவலியால்  துன்பப்பட்டனர்.   எல்லாம்   சிறிது  நேரத்திற்கு தான்.  பிறகு சரியாகி விடும்.


நமது சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்பட்ட வர்களுக்கு
உயர் அழுத்தமும், குளிரும் புதியது —– நியாலத்தில் தங்கும்விடுதியில்

மறுநாளும்  அதே  இடத்தில்தான்  தங்கினோம்.  எல்லோரும்  நலமாக  இருந்தனர் . அடுத்தநாள்   ‘சாகா’   என்ற  இடத்திற்குப் புறப்பட்டோம்.


 நியாலத்திலிருந்து சாகா (4,500) மீ உயரம் செல்லும் வழியில் சிறிய குளம்.இந்த குளத்திற்க்கு திபெத்தியர்கள் அளித்த விளக்கம் பின் வருமாறு—மக்கள் தண்ணீர் இல்லாமல் வறட்சியால் தவித்த போது சிவ பெருமானை நோக்கி பூஜை செய்தனராம்.ஈசன் மகிழ்ந்து 21 குளங்களை உருவாக்கினாராம். தற்போது ஒரு குளம் தான் உள்ளது.

220 கிலோ தூரம்,     உயரம்–4,500 மீட்டர். பாலைவனத்தில்   பிரயாணம்   செய்வது   போல்   இருக்கும். புழுதி, வெய்யில், குளிர்ந்த  காற்று    என்று வித்தியாசமாக இருக்கும்.

புழுதி மிக அதிகம்  என்பதால் மூக்கைப்பாதுகாப்பதுஅவசியம் – திபெத்தியர்களுடன்

7மணி  நேரப்பிரயாணம்.


பாதை, திசை, எதுவும் தெரியாது. ஈசன் ஓட்டுனர் ரூபத்தில் நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்வார்.

அங்கு  ஒரு  அருமையான  ஓட்டலில்   தங்கினோம்.  மிகவும்சௌகரியமாக
இருந்தது.  குளிக்கும்   அறை   ஸ்டார்   ஓட்டலில்  இருப்பது  போல்  இருந்தது.  கண்ணாடி தடுப்புக்குள்  அருமையான குளியல்.  அந்த  இடத்தில்   சீனர்களின்  ஆர்மி  கேம்ப்பஸ்   இருந்ததால்   புகைப்படம்    எடுக்கக்கூடாது  என்று  உத்தரவு   வந்தது.
மறுநாள்   ஸாகாவிலிருந்து   பர்யாங்க்   என்ற  இடத்தை  நோக்கிப் புறப்பட்டோம். 4,450மீட்டர்   உயரம்.  195 கிலோ மீட்டர் தூரம், 6.30 மணி  நேரப்பிரயாணம்.


பயணம் முழுவதும் இப்படித்தான் இருக்கும்

இரவு   விடுதியில்  தங்கினோம்.  மிகவும்  சோர்வாக  இருந்தது.   இருந்தாலும் மறுநாள்  மானசரோவரை  தரிசிக்கப்போகிறோம்  என்ற   நினைப்பு   சோர்வை   விரட்டியது.

 

 நளமகாராஜாவின்மைந்தர்கள்.அருமையானகவனிப்பு,எப்பொழுதும் முகத்தில் புன்சிரிப்பு,ருசியான சமையல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்

இந்தப் பிரயாணத்தின்  போது   ஒவ்வொரு நாளும்    அதிகாலை  5 மணிக்கே  (சீன  முறைப்  படி)   ‘வெந்நீர்’   ரெடி என்று  கதவைத்தட்டுவார்கள்.  வெந்நீரில்  தான்  பல்  தேய்க்கவேண்டும்.  பிறகு 10 நிமிடத்தில்  சுடச்சுட  காபி,  டீ, டிபன்  எல்லாம்  தயாராக  வைப்பார்கள்—அதுவும்  இன்முகத்தோடு.  ஒவ்வொருவரையும்   தனித்தனியாகவும் கவனிப்பார்கள்.  பர்யாங்கிலிருந்து  மானசரோவர்  ஏரியை   நோக்கிப் புறப்பட்டோம்.  225 கிலோ மீட்டர்,  8 மணி  நேரப்பிரயாணம்…

 

தொடரும்

..பாபா நளினி ..

 

 

tags

tibeth , niyalam , china, himalayas, pilgrimage, manasarovar, mukthinath, baryang, saga, army , army campus, nepal

 

திபெத் , நியாலம், சைனா , சீனா , யாத்திரை , மானசரோவர் , முக்தினாத் , பர்யங் , சாகா, நேபாளம்

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>