
மெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் அமைத்து கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பு .அது ஒரு சிறிய பிளாட்.ஒரே ஒரு படுக்கை அறையும்,சிறிய ஹாலும்,மிக சிறிய கிச்சென்னும் உள்ள 10 X 10 வீடு .இது தான் நம் கதை களம் .
அங்கே குடி இருக்கும் சுந்தரம்பாள்,ராஜரெத்னம் தம்பதியர்,இவர்களின் பிள்ளைகள்
இவர்களுடன் அந்த வீட்டு மருமகள் சத்யா…… அவளை பற்றி சொல்லாமல் கதைக்குள்
இனி கதைக்குள் போவோமா ?
அன்று காலை முதலே ,சென்னையின் பரபரப்புக்கு சற்றும் குறையாத மாமியாரின் பரபரப்பை பார்த்து கொண்டு தான் இருந்தாள் சத்யா .மாமனாரிடம் ” என்னங்க! பொண்ணு வர போறா,மச மசனு நின்னுகிட்டு இருக்கிங்க.
அடுத்து சமையலறையிலிருந்து குரல் கேட்டது, ” தோ பாரு….இப்போ தானே சொல்லிட்டு போனேன், வாழக்கா பஜ்ஜிக்கு மெலிசா சீவுனு .மாப்பிள்ளைக்கு மொத்தைமொத்தையா இருந்தா பிடிக்காதாம்
டிவி பார்ப்பதும் , விரிப்பை சரி செய்வதும் , கிச்சென் உள்ளே போவதும் வருவதுமா இருந்தார். அவரால் ஒரு இடத்தில் உக்கார முடியவில்லை .
சற்று நேரம் கழித்து ” அம்மா முடுச்சிட்டேன், நைட்டுக்கு சப்பாத்தி குருமாவா
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், சாயங்காலம் காபி டிபன் மட்டும் முடுச்சிட்டு, உடனே கிளம்பி சினிமாக்கு போய்டுவாங்க, நைட்டுக்கு வெளியே பாத்துக்குறோம்னுட்டாங்க.
” வந்துட்டிங்களா ! மாப்பிளைக்கு இந்த மாதம் தான் பிறந்த நாளாம்.பிரியா சொன்னா. புரஷவாக்கம் மதர்ஷா போய் ஒரு சூட் எடுக்கணும் . நம்ப வீட்டு மாப்பிள்ளை. நம்ப பொண்ணே அசந்து போற மாதிரி எடுக்கணும் , வெல எவ்ளோனாலும் பரவாயில்லை . அப்படியே இந்த ப்ரியாவுக்கும் இரண்டு ஜீன் பா
அவர் திரு திரு என்று விழித்த படியே….. “அதெல்லாம் அவ போடுவாளா ? அதுவும் இல்லாம இப்போ தானே கல்யாணம் எடுத்தோம் ? தி
அதற்கு அவள் , “ஏன் சொல்றேன்னா மாப்பிள்ளைக்கு மாடர்ன் டிரஸ்
“நீ சொன்னா எல்லாம் சரியாய் தான் இருக்கும் ” என்று ஆட்டோ பிடிக்க சென்றார் ராஜரெத்னம் .
பார்த்துகொண்டு இருந்தசத்யாவுக்கு சிரிப்பதா ? அழுவதா என்றே புரியவில்லை.
அவள் தன் ஐந்து மாத குழந்தையை எடுத்து கொண்டு குளிப்பாட்ட சென்றாள்.
குளிப்பாட்ட குளிப்பாட்ட நினைவுகள் பின் சென்றன.
மூன்று வருடங்களுக்கு முன் ,
சத்யாவுக்கு நேற்று தான் திருமணம் முடிந்து இருந்தது. புதுத் தாலியின் பொலிவோடு சேர்த்து முகமும் மின்னியது .மகிழ்ச்சியின் மிச்சங்கள் முகத்தில் ஒட்டி கொண்டு இருந்தது.முந்தைய இரவில் கணவன்
“என்னத்த பழக்கமோ போ, அதெல்லாம் உங்க வீட்டோடு விட்டுடு .உங்க அம்மா இதெல்லாம் சொல்லி குடுத்து வளர்கல போலிருக்கு . இந்த காலனில எங்களுக்குன்னு ஒரு பேரு இருக்கு.சரி .. சரி.. போய் துணிய துவச்சி போடு…. “
ஒன்றும் புரியவில்லை சத்யாவுக்கு
கல்
திருமணத்துக்கு ஊரிலிருந்து வந்து இருந்த நெருங்கிய உறவினர் கூட்டம் இன்னும் வீட்டில் மிச்சமிருந்தது . அதில் ஒரு புது மண தம்பதியர் .
தன் அக்கா மகளையும் , மருமகனையும்
ஆனால் அந்த வீட்டில் யாரும் இவளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.ஏன்?அவள் கணவனே கூட அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை.ஆனால் இவளுக்கு மட்டும் ஏனோ ஏமாற்றமாய் இருந்தது.”ஏன் நாங்க எல்லாம் பு
“யேய் ! என்ன நீ?அவங்க எல்லாம் எப்போவாவது ஊருலருந்து வீட்டு விசேஷத்துக்கு வரவங்க”,நம்ப அப்படியா ? இங்க,இதே மெட்ராஸ்ல தான் இருக்க போறோம் , மகாபலிபுரம் எங்கயும் ஓடிடாது . அப்பறமா பாத்துக்கலாம்” என்றான் பிரேம் .
அன்றே தானா வர வேண்டும் அந்த
மாமியார் ” சத்யா . எல்லாருக்கும் தோசை ஊற்று ” . ” அத்தே ! “ எனக்கு கொஞ்சம் முடியல”என்றாள். பதிலில் தேள்
“ புதுசா கல்யாணம்
அதற்கு மேல் ஏதும்தோன்றாது , உடனே எல்லாருக்கும் தோசை ஊத்த ஆரம்பித்தாள் .ஊத்தும் போது நிற்க கூட முடியவில்லை. முடித்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
பெட் ரூமில் ஒரே ஒரு கட்டிலுக்கு மட்டுமே இடம் இருக்கும். அதை தான் இவர்களுக்கு தாராளமாக விட்டு தந்து இருந்தார்கள் அந்த வீட்டு பெரியவர்கள். ஆனாலும் அனைவருடைய படுக்கை விரிப்பு, தலையணை எல்லாமே அந்த கட்டிலில் தான் இருக்கும். அவர்கள் அதை எடுத்து சென்றால் தான் , இவர்கள் படுக்க இடம் கிடைக்கும். வெளியே புது மாப்பிளை பெண்ணோடு கும்பலே கேலியும் கிண்டலுமாய் சிரித்து விளையாடியபடி இருந்தது. இப்போது எல்லாம் படுப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்து
பிரேமுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “ பிரியா ! அண்ணிக்கு படுக்கணும் ….பெட்ஷீட் எடுத்துட்டு போயேன் . பதில் வந்தது . ” உங்க பொண்டாட்டி அவசரத்துக்கு எல்லாம் நாங்க படுக்க முடியாது, எங்களுக்கு எப்போ படுக்கணுமோ அப்போ தான் எடுக்க முடியும் “ சுரீர் என்ற பதிலில் சுருண்டு தான் போனாள். அந்த வீட்டு பெரியவர்கள் யாரு
” செல்ல குட்டி! மூட் அவுட் ஆ? என்றான்.” இல்லையே “ என்றாள் .” உங்க வீடு சிஸ்டம் வேற.இங்க வேற.அவங்க அப்படி தான் சொல்லி கிட்டு இருப்பாங்க . நீ ஒண்ணும் கண்டுக்காதே. போக போக எல்லாம் சரியாயிடும்.அத விடு . இப்போ உனக்கு ஒரு குட் நியூஸ்.நாளை மறுநாள் நாம கொடைக்கானல் போறோம் . அங்க போய்….தனியா…ஜாலியா….எந்
சத்தம் கேட்டது, மாமியார் சத்தம், “சத்யா …சத்யா ….பால்காரன் பெல் அடிக்குறது காதுல விழல ஐந்து மணிக்கு மேல நல்ல குடும்பத்து பொண்ணு தூங்குவளா?…’” துள்ளி எழும்பியவளுக்கோ தூக்கி வாரி போட்டது ” ச்சே ..கனவா ?” ….கதவைத் திறந்து பால் வாங்கி வைத்து விட்டு குளிக்க போனாள். விருந்தாளிகள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள் .அவர்கள் போனதும் , பிரேம் சமையலறையில் தன் அம்மாவிடம் கெஞ்சுவது கேட்டது
” அம்மா ப்ளீஸ் மா. நான் அவ கிட்டே சொல்லிட்டேனே , ஹனி மூன் கூட்டி கிட்டு போறேன்னு
முகம் வாடி போனது பிரேமுக்கு .குளியலறையில் கேட்டு கொண்டு இருந்த சத்யாவுக்கு கண்ணீர் முட்டியது,அழுது தீர்த்தாள் .வெ
இன்னொரு நாள் திடீரென ,வெளியே போய் வந்த பி
இப்படியே நாட்கள் நகர்ந்தன ……
அவளுக்கு பிறந்த நாள் வந்தது . பச்சை பட்டு சேலை அவள் அம்மா எடுத்து கொடுத்தது புதிதாய் இருந்தது . ஆனால் அதற்க்கு மாட்சிங் ப்ளவுஸ் எடுத்து தைக்க டைம் இல்லாமல் வந்து விட்டாள். கணவனை அழைத்தாள் ,” பிரேம் , பர்த் டேக்கு புது புடவை இருக்கு , ஆனா மாட்சிங் ப்ளவுஸ் தான் இல்லை , போய் எடுக்கலாமா ?.” ” ஐயோ, என் கிட்ட காசு இல்ல அம்மா கிட்ட போய் வாங்கிட்டு வரேன் ” என்றான் .
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது , இந்த காலத்தில் இப்படி ஒரு மகனா ? தான் சம்பாதிக்கும் மொத்த பணத்தையு
அதற்கு மேல் அந்த ப்ளவுஸ் தேவையே இல்லை என்று தோன்றியது “ ஏங்க ! ப்ளவுஸ் கிடைச்சிருச்சி “என்றாள்.அவள் கையில் கருப்பு ப்ளவுஸ். எல்லாவற்றுக்கும் மேட்ச் ஆகுமே.
பிறந்த நாளுக்கு முந்தைய நாள்
அம்மா சொன்னாள் ” ஹோட்டல் சாப்பாடு எல்லாம் நல்லது கிடையாது. சூர்யா படம் தானே.அது பிரியா கூட பாக்கனும்னு சொல்லிட்டு இருந்
மறுநாள் விடிந்தது . ” ஹாப்பி பர்த் டே செல்ல குட்டி , சீக்கிரம் கிளம்பு , சினிமா போறோம், மெதுவாக சொன்னான் ” .எழும்பியவளிடம் ” யார் கிட்டவும் சொல்லாதே “. சொல்லாம எப்படி ? அவள் . நான் ஏற்கனவே அம்மா கிட்டே கோயிலுக்கு போறோம்னு சொல்லிட்டேன் . ஒருவழியாக சினிமா தியேட்டர் வந்து சேர்ந்து உட்கார்ந்தால் ,அங்கே படம் பார்க்க விட வில்லை . நொடிக்கு ஒரு தரம் “ போய்டலாமா ? அம்மா ஏன் லேட்? கோயிலுக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமானு கேப்பாங்க ? ” ..கடைசியில் இடைவேளை வந்ததும் எழுப்பி கூட்டி கொ
எதுக்கு என்ன இங்க கூட்டி கொண்டு வந்தீங்க ? நான் நிம்மதியா வீட்டிலேயே இருந்து இருப்பேனே என்றாள் ….
வாசலில் கார் சத்தம் கேட்டது. பின்னோக்கிய நினைவலையிலிருந்து மீண்ட சத்யா இப்போது குழந்தையை குளிப்பாட்டி முடித்து இருந்தாள்
குழந்தையை எடுத்து , துடைத்து , பவுடர் பூசும் போது , பிரியா வந்து விட்டாள் . மாமியாரின் உபசரிப்பு , மகளின் புகுந்த வீட்டு புராணம் , எல்லாம் காதில் விழுந்தது .
இவளும் போய் நலம் விசாரித்தாள். பிரியாவின் கணவன் குழந்தையை வாங்கி கொண்டார்.
பஜ்ஜி , பாயசம் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டார்கள் சினிமாவுக்கு .போனவர்கள் 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள் . இவள் தான் போய் கதவை திறந்து விட்டாள் . இப்போது முறை அவர்களுக்கு . அந்த பெட் ரூம் அவர்களுடையது .அனைவரும் ஹாலில் தான் படுத்திருந்தார்கள்.கதவு திறக்கும் ஓசை கேட்டு எழுந்த குழந்தை அதன் பின் இரவு முழுவதும் தூங்கவும் இல்லை . இவளையும் தூங்க விடவில்லை.
காலை மணி 9 .30 ஆகி விட்டது . குழந்தைக்கு மருந்து கொடுக்க வேண்டும் . மருந்து பெட் ரூம் ஷெல்பில் இருக்கிறது . கதவு இன்னும் திறந்த பாடில்லை. தட்டவா ? வேணாமா ? என்று யோசித்தபடி , கதவை நெருங்கியவளுக்கு , தட்டி நிறுத்தியது மாமியாரின் குரல் .
” ஏய் , உனக்கு இங்கிதம் தெரியாதா ? புதுசா கல்யாணம் ஆனவங்க ? மெதுவா தான் எழும்பி வரட்டுமே ? இங்க என்ன குடியா மூழ்கி போகுது ? எல்லாம் உனக்கு சொல்லி தரணுமா ? என்று போதிக்க ஆரம்பித்தார் .
அவ்விடம் விட்டு நகர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள் . அவளுக்கு இது ஒன்றும் புதிதல்லவே ?
சிறிது நேரம் கழித்து, பிரியா ட்ரான்ஸ்பரென்ட் நைட் ட்ரஸில் மொபைலில் யாருக்கோ வழி சொல்லி
அவளை பார்க்க வந்த பிரெண்ட் கைனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள். ” என்னடி பிரியா , எப்படி இருக்கே , கல்யாணத்துக்கு தான் வர முடியல. அதுவும் இல்லாம மேடம் ஹனி மூன் வேற கிளம்பிட்டு இருக்கீங்க , ரொம்ப பிஸி போல , உன்ன இப்போ விட்டா பிடிக்க முடியாது, பை தி வே இதெல்லாம் நீ போட்டு நான் பாத்ததே இல்லையே , எனி ஹவ் , நல்ல இருக்கு ! கலக்குறே ! என்றாள்
அப்போது தான் வெளியே வந்த மாமியார் “வாம்மா அனிதா! எப்படி இருக்கே ? பிரியா…. ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அனிதா சொன்னது சரி தான் ” என்றாள் .
பிரியா ” இது என்கேஜிமென்ட் முடுச்சிட்டுஅவர் சிங்கபூர் போயிருந்தபோவே எனக்கா
தலையணைக்கு உறை போட்டு கொண்டு இருந்த சத்யா நிமிர்ந்து பார்த்தாள்,நைட்டி அழகாக தான் இருந்தது. ஆனால் அத்தனையும் தெரிந்தது. குளித்து விட்டு வந்த பிரேம் குழந்தை விடாமல் அழும்
சத்யா மனதுக்குள் , குழந்த சத்தமா அழுறதுனால உங்களுக்கு கேட்டது . சத்தமே இல்லாம இங்க நான் ஒருத்தி அழுறது உங்களுக்கு புரியவே இல்லையா ? என்று நினைத்த படியே ” அது விடிய விடிய அழுது அழுது உயிரை எடுக்குது . நான் என்ன செய்யட்டும் ? ” என்றாள் .
திரும்ப பிரேம் ,” என்ன பொறுப்பில்லாத பதில்!ஒரு நல்ல அம்மாவா நடந்துக்க முயற்சி பண்ணு ” என்றான்.
” இந்த பதில் எனக்கு மட்டும் தானா பிரேம் ? “, நுனி நாக்கு
வரை வந்து விட்ட கேள்வியை கேட்க நினைத்து கேட்காமலே மரத்து போன உணர்ச்சிகளுடன் மரமாகி நின்றாள் சத்யா.
..சபீனா ..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




the story s awesome… keep it up sabeena akka
அற்புதம். நல்ல கதை களம்.
யார் இந்த கதையில் குற்றவாளி மாமியார அல்லது கணவனா ?
தொடரட்டும் உங்கள் கலைப்பணி !!!
நல்ல கதை