/* ]]> */
Jan 172012
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் :காலையும் நீயே மாலையும் நீயே

படம் : தேனிலவு

பாடியவர்கள் : ஏ . எம் .ராஜா , எஸ் . ஜானகி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ராகங்களைப் பற்றின ஞானம் உள்ளவர்கள் எழுதினால் இன்னமும் சிறப்பாக இருக்கும் . ரசனை என்ற ஒன்றின் துணை மட்டும் கொண்டு இந்தப் பாடல் பற்றி எழுத முடியுமா தெரியவில்லை . சிறுமியாய் இருந்த போது தொட்டு மனதில் நீங்காமல் இருக்கும் ஒரு பாடல் இது . கேட்கும் போதே வைஜயந்தி மாலாவின் உருவம் கண்ணுக்குள் நடனம் ஆடுகிறது எப்படி ? பெர்ஃபெக்ட் பியூட்டி அவர் . தமிழ் சினிமா உலகின் நிகரற்ற ஒரு கலைஞர் . இத்தனை அழகும் இப்படி ஒரு நடனத்திறமையும் ஒரே இடத்தில் அமைவது மிக அரிது . ஏ. எம் .ராஜாவின் ஆன்மாவை வருடும் குரல் . லேசான கரகரப்பும் இதமான ஆண்மையும் ததும்பும் குரல் . காதில் விழும்போதெல்லாம் மிகுந்த அமைதியையும் கொண்டும் வரும் இசை . என்றைக்கும் நிலைக்கும்படியான ஒரு காம்போசிஷன் ..

காலையும் நீயே மாலையும் நீயே

காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே

காலையும் நீயே மாலையும் நீயே

காலையும் நீயேமாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே

ஆலய மணி வாழ் ஓசையும் நீயே

அருள் வடிவாகும் தெய்வமும் நீயே

காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே

காலையும் நீயே மாலையும் நீயே

பாலில் விழுந்த பழங்களைப் போலே

பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

பாலில் விழுந்த பழங்களைப் போலே

பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

மனதில் மேடை அமைத்தவள் நீயே

மங்கல நாடகம் ஆட வந்தாயே

காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே

காலையும் நீயே மாலையும் நீயே

 

ஆங்கிலத்தில் பாடல் வரி

M:Kaalaiyum Neeye
Maalayum Neeye
Kaatrum Neeye
Kadalum Neeye
(2)
M: Aalaya manivaai Osaiyum Neeye
Arul Vadivaagum Deivamum Neeyekaalaiyum Neeye…

Paalil Vizhuntha Pazhangalai Poley
Paruvam Uruvam NirainthavaL Neeye
(2)
Manathinil MEdai AmaithavaL Neeye
Mangala Naadagam aada Vanthaaye.

F: kaalaiyum…
M&F:kaalaiyum…

தொகுப்பு
..ஷஹி..
ஜெமினி , ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா , கண்ணதாசன் , ஏ. எம் .ராஜா , எஸ். ஜானகி , தேனிலவு
jemini , jemini ganesan , vaijayanthi mala , kannadasan, a. m. raja, s. janaki, thaennilavu, thenilavu

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>