/* ]]> */
Feb 052012
 

தீர்த்தக் கரையினிலே – காதல் கவிதை – அபி

kadhal kavithai, tamil love poem, காதல் கவிதை,

kadhal kavithai tamil love poem

தீர்த்தக் கரையினிலே
தீர்த்தக் கரையினிலே – மனம்
வேர்த்துப் போய் நான் ! உன்
தீர்க்கப் பார்வைகள் போதும் ! தாகம்
தீர்க்கப் பார்ப்பாயா ! நான்
கோர்க்கும் வார்த்தைகளில் உன்
கோபம் குறையாதா நீ
வார்க்கும் விழிச்சிரிப்பில்
என் தாபம் மறையாதா ?

உனை
கறுப்பு நிலா என நினைத்தேன் !
கோபத்தில் நெருப்பு நிலா நீ!
மனதை
பறிக்கும் முகத்தில் கோபம்
தெறிக்கப் பார்க்கையில்
உன் பார்வையில் எத்தனை தீ !

பொய்யான கோபத்தை
தொடங்கியவன் நானே தான் !
அதற்காக அதையே நீயெனக்கு
காட்டுவது சரியில்லை !
காதல் விஷயத்தில் நான்
கட்டாயம் குழந்தைதான்
அதற்காக ஊடலை மட்டுமே நீ
ஊட்டுவது சரியில்லை !

வாழ வேண்டிய நொடிகள் இன்று
வீணாய் இறக்கிறது ! நீ
வார்க்கின்ற வார்த்தையில் தான் என்
வாழ்க்கை இருக்கிறது ! உன்
மூச்சு பட்டால்தான் என்
இதயமே துடிக்கிறது ! உன்
பேச்சு கேளாமல் இன்று அது
துடியாய்த் துடிக்கிறது!

தீர்த்தக் கரையினில்
மனம் வேர்த்துப் போய் நான் ! உன்
தீர்க்கப் பார்வைகள் போதும் ! தாகம்
தீர்க்கப் பார்ப்பயா?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>