தக்காளி
தக்காளியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. தக்காளியில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து,இரும்புச் சத்து,புரதச்சது போன்றவை இருக்கிறது. தக்காளிசாறுடன் சர்க்கரை சேர்த்து குழந்ததைகளுக்கு கொடுத்தால் உடல் வலிமை பெறும், அத்துடன் குழந்ததை சுறுசுறுப்புடன் இருக்கும். தக்காளி செடியிலும் சத்து தக்காளி செடியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி நீர் விட்டுக் காய்ச்சி அந்த தண்ணீரை குடித்தால் சிறுநீர் எரிச்சல், உடல் வீக்கம், மேக நோய் போன்றவை குணமாகும். தக்காளியை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்டால் உடல் குளிர்ச்சி பெறும். தக்காளி உண்டால் ரத்த சோகை நோய் நீங்கும், புதிய ரத்தம் உடலில் உண்டாகும். இது மட்டுமின்றி ,
- தக்காளிசாறை குளிக்கும் தண்ணீரில் 1 கப் ஊற்றி 15 நிமிடம் கலக்கிய தெளிந்தவுடன் அந்த நீரில் குளித்தால் உடல் துர்நாற்றம் அகலும்.
- கூந்தல் துர்நாற்றம் நீங்க தக்காளி சாறை தலையில் ஊற வைத்து நீராடவும்.
- சருமம் மென்மையாக தக்காளி தோல் நீக்கி துணியில் வைத்து முடிந்து ஒத்தி எடுக்கவும்.
- தோல் அரிப்பு தீர தக்காளி சாறுடன் 2ஸ்பூன் தயிர் ஊற்றி உடம்பில் தேய்க்கவும்.
- வெக்கை நோய் தீர தக்காளி சாறுடன் மோர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Please comment with your real name using good manners.