/* ]]> */
Oct 042011
 

பத்து லட்சம் ஹிட்ஸ் ஹைகூ போட்டிக்கு வந்திருந்த கவிதைகளில் பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவை..

மூன்றாம் கோணம் பத்து லட்சம் ஹிட்ஸ் போட்டி வந்திருந்த கவிதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பின்வருவன:

நடிகர் விஜயின் மீது தனிபட்ட வெறுப்பும் கிண்டலும் தொனிக்கும் வண்ணம் எழுதப்பட்டிருந்த பல கவிதைகள் நிராகரிக்கப்பட்டன. திருச்சி பிரேம் அவர்களின் படைப்பு முதல் பரிசுக்குரியதாகவும், காயத்ரி அவர்களின் கவிதை இரண்டாம் பரிசுக்குரியதாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது..வாழ்த்துக்கள் பிரேம், காயத்ரி

கடவுளானால்
கஜானா நிறையாது!
சீக்கிரம்
கட்சித் தலைவனாகு!
- பிரேம் , திருச்சி
—————————————————————————————————————————————

நடிகனைக் கடவுளாக்கி

நாங்கள்

மிருகமானோம்!
காயத்ரி
—————————————————————————————————————————————–
அன்று
காதலுக்கு மரியாதை செய்தான்!
இன்று
கடவுளுக்கு மரியாதையில்லை!
பூவரசன் , புதுப்பேட்டை
—————————————————————————————————————————–
வேலோ வில்லோ
காக்க உபயோகி – எமை
கொல்லாதே !

ராஜேஸ்வர், புது டில்லி

——————————————————————————————————————————
நட்சத்திரமானாய்!
கடவுளானாய்!
எப்போது
நடிகனாவாய்?
 தயாநிதி , உடுமலைப்பேட்டை
————————————————————————————————————————–
கடவுளைப் படைத்தவர் விஜய்
“மக்களைக்காக்கும்” வேலாயுதம்!
பாவமன்னிப்புக்குப் பரமபிதாவா !!
மக்களைப் படைத்தவர் கடவுள்
கடவுளைப்படைத்தவர் விஜய்
கடவுள் கல்லானதன் காரணம் புரியுமே!!
தேவனே பாருங்கள் விஜயை
தேவாலயத்தில் மண்டியிடும்போது
தேவையான கதையை கூறுங்கள்!
RajaRajeshwari Jaghamani
———————————————————————————————————————————
சிவனாய் சித்தரிக்கப்பட்டாலும்
வேலனாய் வேடம் கட்டினாலும்
திரை ரசிகர்கள் இதயக்கோவிலில்
கடவுளாய் இளைய தளபதி
R.SHYAMALA
ROYAPURAM
—————————————————————————————————————————–
எல்லாம் வ‌ல்ல‌ சிவ‌னே!
உன்னைக்கொன்டு ந‌டிக்கும் இந்த‌ ப‌ட‌மாவ‌து,
எங்க‌ளைக்கொல்லாம‌ல் இருக்க‌ட்டும்!
 - வித்யா ந‌ந்த‌குமார்
உஸ்ஸ்ஸ்ஸ்” என்று சீரும் பாம்பும் ச‌ப்பு கொட்டிய‌து!
“புஸ்ஸ்ஸ்ஸ்” என்று போகும் உன் ப‌ட‌ங்க‌ளைக் க‌ண்டு!!
vidhya nandakumar

——————————————————————————————————————————–

1) உலகே மாயம்!
    மாயமே சினிமா!!
2) வேல் ஆயுதம் கொண்டு நிஜ
    முருகனே வந்தாலும் நம்
    மக்களைக் காக்க முடியாதே!
வை. கோபாலகிருஷ்ணன்
திருச்சி-2

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>