துவங்கி ஒரு வருடத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ்..கொண்டாட்டத்துக்கு உரிய நிகழ்வு. விளையாட்டாய்..ஒரு சிறு பொறியின் விளைவாய், சின்னச்சின்ன சந்தோஷங்களின் எதிர்பார்ப்புகளோடு துவங்கியது..இன்று இத்தனை அழகான, அருமையானதொரு கனவுத்தோட்டமாய் பூத்துக்குலுங்குகிறது. நன்றிகள் நூறு மூன்றாம்கோண எழுத்தர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
மூன்றாம்கோணம் : அசாத்திய திறன், கடின உழைப்பு, வெப்மானேஜர் என்று யாருமில்லாமல் தானே வலையை முற்றாக நிர்வகிக்கும் மேலாண்மைத்திறன், கலா ரசனை என்று ஆச்சர்யங்களின் மொத்த உரு. எழுதி வரும் அனைவரையும் வெகு சிறப்பாக ஊக்குவித்தும், தட்டிக்கொடுத்தும் கையாளும் சூரர். நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.
எப்போதும் நான் சொல்லுவது போல் ஜெயிக்கவெனவே பிறந்தவர். பள்ளியிலும் சரி பள்ளிகளுக்கிடையே நடக்கும் போட்டிகளிலும் சரி முதல் பரிசுக்கெனவே கலந்து கொள்ளுவார். “இவன் வந்துட்டானா? அப்ப ஃப்ஸ்ட் பிரைஸ் நாம எதிர்பார்க்க முடியாது “என்று போட்டியாளர்கள் முடிவு செய்து விடுவர். பேச்சு, பாட்டு, கவிதை , படிப்பு என்று அனைத்திலும் இவருடைய ஆற்றல் அளப்பரியது. போராட்ட குணமும் கவித்துவமும் இவரோடே பிறந்தது. கதை சொல்ல போறேன் என்ற சிறுகதை தொகுப்பையும் கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி என்ற நூலையும் எழுதியிருக்கிறார். மூன்றாம் கோணத்தின் இவ்வெற்றியில் இவருடைய பங்கு அபாரமானது. தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்த பதிவுகளில் இவரது படிக்கக்கூடாத கவிதை மிக முக்கியமானது.
பீப்பி( புனைப்பெயர்) :
அபி அவர்களின் தாயார் அபாரமான உழைப்பு, இலக்கிய ஈடுபாடு, சமையல் குறிப்பிலிருந்து, அழகுக் குறிப்பு வரை..கதைகள் மற்றும் கட்டுரை எல்லாம் எழுத வல்லவர். இவர் எழுதிய குழந்தைக்கதை விடுத்தான்களின் வீர சாகசம் என்றும் நினைவில் நிற்கும் ஒன்று. இவருடைய ராசி பலன் அனைவருக்கும் விருப்பமான பகுதி.
எப்போதும் என்னிடம் திட்டு வாங்கும் ஒரு நபர். எத்தனை திட்டினாலும் மனம் தளராமல் மீண்டும் மரம் ஏறுவதில் மன்னன். ஒரு தினுசான பதிவுகள் மட்டுமே எழுதினாலும் இவருக்கென்று ரசிகர்கள் உண்டு தான். என்ன பின்னூட்டம் இட்டு பிரகடனம் செய்து கொள்ள இயலாது அவர்களுக்கு. இவர் எழுதியதில் வந்தான் வென்றான் விமர்சனம் மிகவும் பிடித்தது எனக்கு.
என்ற பெயரில் எழுதிவரும் ஊட்டச்சத்து ஆலோசகர் பானுமதி Bsc. N&D . என்னால் மூன்றாம்கோணத்துக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டவர் என்பதில் எனக்கு பெருமை சேர்த்திருப்பவர். அருமையான டயட் ஆலோசனைகள், சமையல் குறிப்புகள் எழுதி வருகிறார். ஒவ்வொரு பதிவு இடும் முன்னரும் ஏராளமாக ஒப்பீடுகள் செய்து பல புத்தகங்களை அலசி ஆராய்ந்து மட்டுமே பதிவிடுகிறார். டயட் குறிப்புகள், குறிப்பிட்ட நோய்களுக்கான டயட் சார்ட்டுகள் தயாரித்து தருவார். மூன்றாம்கோணத்தில் எழுதத்துவங்கின பின் தன் துறையில் மேற்படிப்பு படிக்கும் எண்ணம் ஏற்பட்டிருப்பதால் படிக்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி. பூங்கொத்து உங்களுக்கு பானு.
பானுமதி அவர்களின் கணவர். agri s என்ற பெயரில் எழுதுகிறார்.வேளாண் துறை அதிகாரி . மட்டுமல்லாமல் தமிழ் ஆர்வம் மிக்கவர்.சமூக அக்கறை உள்ளவர். மனைவியின் ஆர்வங்களுக்கு தூண்டுகோளாய் இருந்து மூன்றாம்கோணத்தில் அவ்வப்போது வேளாண்மை குறித்த பதிவுகள் இட்டு வருகிறார். மணற்கேணி 2010 க்காக இவர் எழுதிய கருத்தாய்வுக்கு கட்டுரை போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள் சிவா.
அனைவரின் பிரியத்துக்கும் உரியவர், அபாரமான தமிழ் அறிவு, பேசிக்கொண்டு இருக்கும் போதே சட்டென சூழலுக்கு ஏற்றார் போல் கவிதைகள் சொல்வதில் வல்லவர். காதல் கவிதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். காதலுக்கே கிறக்கம் உண்டாகும் இவர் கவிதைகள் படித்தால். உங்கள் கவிதைகளின் ரசிகை நான் பிரியன். வாழ்த்துக்கள். நம் பத்திரிக்கையின் மேம்பாடு, தரம் ஆகியவற்றின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். பல சிறப்பான திட்டங்கள் இவர் தீட்டி செயல்படுத்தப்பட்டவையே. இவரது பெண் கணிதம் இவரின் மாஸ்டர் பீஸ் என்பது என் கருத்து.
நம் ஐந்து லட்சம் ஹிட்ஸ் போட்டியில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தவென மூன்றாம்கோணம் வந்தார். பின்பு ஆர்வத்தினால் இங்கும் எழுதத்துவங்கினார். அபாரமான நகைச்சுவை உணர்வு, அற்புதமான எழுத்தாற்றல், அனுபவங்களின் குவியல்.. வணங்குகிறோம் சார். இவரது சிறுகதை உடம்பெல்லாம் உப்புச்சீடை மிகப் பிரமாதமான ஒன்று.
ஐந்து லட்சம் ஹிட்ஸ் பயணக்கட்டிரைப் போட்டியின் வெற்றியாளர். அசராமல் எழுதும் ஆன்மீக சிந்தனையாளர். அருமையான அழகுணர்வு, கலாரசனை..எங்கிருந்து இம்மாதிரியான புகைப்படங்கள் எடுக்கிறார்? எப்படி இத்தனை உழைக்கிறார் என்று தினமும் வியக்க வைக்கும் ஒரு படைப்பாளி. தாங்கள் எங்களுடன் இணைந்ததற்கு மகிழ்கிறோம். கோகுலாஷ்டமி பதிவு எனக்கு மிகவும் பிடித்தது.
ஐந்து லட்சம் ஹிட்ஸ் போட்டிகளின் போது ஆர்வமுடன் நம்முடன் இணைந்தவர். கவிதைகள், சிறுகதைகள் எழுதுவார். சினிமாவில் மிகுந்த ஆர்வமும் திறனும் மிக்கவர். எழுதியவற்றில் மனம் கவர்ந்தவை பல உண்டு என்றாலும் வில்லனாகிய ஹீரோக்கள் கட்டுரையும் குறும்படகார்னரில் அறிமுகப் படமும் மிகவும் சிறப்பானவை.
அருமையான கவிதைகள் இயற்றி பதியும் ராணி கிருஷ்ணன் , சாகம்பரி , சுவாதி, ரிப்போர்டர், கலை, ஸ்பைடர் மேன்,ஜெயசீலன்ஆகியருக்கும். கேளடி கண்மணி என்ற பெயரில் புதிய கேள்வி பதில் பகுதி துவங்கியிருக்கும் சோழன் அவர்களுக்கும் வரவேற்பும் வாழ்த்துக்களும்.
பல புதிய வலைகளையும், அருமையான மனிதர்களையும் அறிமுகம் செய்தும், பின்னூட்டங்களின் மூலம் ஊக்கம் கொடுத்தும் உதவும் இப்படிக்கு இளங்கோ, அன்பேசிவம் முரளிகுமார், கூடல்கூத்தன் ராகவன் ,அட்ரா சக்க சி.பி. செந்தில் குமார் அவர்களுக்கும் நன்றிகள் நூறு.
…ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments