தஞ்சாவூர் கேன்சர் சென்டர்
இது ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளையின் ஒரு அங்கம்.துலுக்கம்பட்டியில் மாதாக்கோட்டை புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் இந்த புற்றுநோய் மருத்துவமனை தஞ்சாவூரில் முதன்முறையாக 60 மருத்துவர்கள் மற்றும் 60 சமூகநலஆர்வலர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை மருத்துவமனையாகும் .

” இங்கு புற்றுநோயை வென்றோர் தின நிகழ்ச்சி “ ஜூன் 10 ஆம் தேதி அன்று நடைபெற்றது . கிட்டத்தட்ட 40 ” புற்றுநோய் வென்றோர் ” கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 9 பேர் குழந்தைப் பருவ புற்றுநோய் வென்றோர் என்பது குறிப்பிட்டத்தக்கது . புற்றுநோயை எதிர்கொண்டு போராடி , தாங்கள் வென்ற கதையை அவர்கள் பகிர்ந்து கொண்டது உருக்கமாகவும் உத்வேகம் ஊட்டுவதாகவும் இருந்தது .
மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் கொள்கையுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு தஞ்சாவூர் கேன்சர் சென்டர் , புற்றுநோய் முன் கண்டறிதல் , கீமோதெரபி சிகிச்சை , அறுவை சிகிச்சை , கதிர்வீச்சு சிகிச்சை , வலிநீக்கு மருத்துவம் , விழிப்புணர்வு முகாம்கள் , தணிப்பு மருத்துவ சேவை என புற்றுநோயை வெல்லும் அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது .
மேலும் மிகக்குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் மூலம் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்களால் செய்யப்படுகிறது .
தஞ்சாவூர் கேன்சர் சென்டரின் மற்றொரு முக்கிய அம்சம் இது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருத்துவமனை என்பது .
மிகச்சிறப்பான இன்னம் சில அம்சங்கள்
1. சனிக்கிழமைதோறும் சிறப்பு பரிசோதனை உண்டு பதிவு மற்றும் ஆலோசனைக் கட்டணம் இல்லை .
2. அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கும் கட்டணச்சலுகை கீமோதெரபி மருந்துகளுக்கு விலைச்சலுகை
3. 12 வயதிற்குட்பட்ட குழந்தை நோயாளிகளுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை என்பன .
ஒரு மருத்துவமனை அதிலும் புற்றுநோய் மருத்துவமனைக்கான எந்த சாயலும் இல்லாமல் அழகான , மனதுக்கு இசைவான தோற்றத்துடனும் சூழலுடனும் இருக்கிறது தஞ்சாவூர் கேன்சர்சென்டர் .
கட்டடத்தைச்சுற்றிலும் அழகான தோட்டம் எழில்மிகு சூழல் .
மருத்துவமனைக்கு உள்ளே பசுமையும் மிகுந்த சுகாதாரமும் பேணப்படுகிறது .
இங்கு வரும் நோயாளிகளில் பெரும் சதவிகிதத்தினர் மிக்க ஏழைகள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சம் . ஏழை எளியோருக்கு அழகான சுகாதாரமான சூழலில் தரமான மருத்துவ சிகிச்சை , சலுகை கட்டணத்தில் என்பது ஏதோ பெருங்கனவு என்பது போன்று தான் இருக்கும் கேட்பவர்களுக்கு !ஆனால் இது உண்மையாக செயலூக்கம் பெற்று நடந்து கொண்டு இருக்கிறது தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் !
மருத்துவர்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவதும் செவிலியர் மிகுந்த அன்பு பாராட்டுவதும் ஆறுதலாக இருக்கிறது . இப்படியான ஒரு கனிவு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்குக் கிடைப்பது எத்தனை அரிது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தானே ?
செவிலியருக்கு சிறப்புப்பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி அவர்களின் சாதனைகளையும் பாராட்டி ஊக்குவித்து வருகிறது மருத்துவமனை நிர்வாகம் .
டாடா நினைவு புற்றுநோய் மையத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர் ஷைலா மற்றும் ஜெயந்திக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பு செய்தி !
” புற்றுநோய் வென்றோர் தின ” நிகழ்ச்சியில் டாக்டர் அருண்சேஷாசலம் கௌரவிக்கபட்ட போது
உண்மையான சேவை நோக்கத்துடன் செயல்பட்டு இந்த மருத்துவமனையை திறம்பட நடத்திச்செல்லும் மருத்துவர்கள் …
டாக்டர். அருண் சேஷாசலம் MD ., Dip NB ., MNAMS., DM., மெடிக்கல் ஆன்காலஜிஸ்ட் ( கீமோதெரபி மருத்துவத்துறை )
டாக்டர் . G. செந்தில்குமார் MS., DNB ., M.ch ., சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட் ( புற்றுநோய் அறுவை சிகிச்சைதுறை )
டாக்டர் . T . சுஜித் MBBS ., DMRT ( DNB ) ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் ( புற்றுநோய் கதிர்வீச்சுத் துறை ) ஆகியோர் .
தஞ்சாவூர் கான்சர் சென்டர் பொதுநலன் கருதி வெளியிடும் கான்சர் பற்றின முக்கிய அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள் :
நோயின் அறிகுறிகள்
ஆறாத புண் , ஓயாத இருமல் , குரலில் மாற்றம் , புதியதாக வளரும் கட்டி ,அசாதாரண ரத்தக் கசிவு , மலம் சிறுநீரில் ரத்தம் , மச்சங்களில் மாற்றம் , விழுங்குவதில் சிரமம் , எடைகுறைவு .
தடுப்பு வழிகள்
மதுவை மறப்பீர் , புகைத்தல் தவிர்ப்பீர் , புகையிலை மறுப்பீர் , பான் , குட்கா ஒழிப்பீர் , ரசாயனங்கள் விலக்குவீர் , இயற்கை உணவு உண்பீர் , சுற்றுச்சூழல் காப்பீர் , சுகாதாரம் பேணுவீர் , 40 வயதுக்கு மேல் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வீர் .
வலியும் வேதனையும் , மரணமும் தவிர்க்க பரிசோதனை அவசியம் . பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்ய அறிந்து கொள்வது அவசியம் . கூச்சம் , தயக்கம் , அலட்சியம் ஆபத்தில் முடியும் . புற்றுநோயை தொடக்கத்தில் கவனித்தால் முழு குணம் பெற முடியும்.
கேன்சர் ஹெல்ப் லைன் : 73 73 29 59 59 , 04362 – 292233 / 324355 / 326355 .
தஞ்சாவூர் கான்சர் சென்டரின் மருந்தகம் பற்றி குறிப்பிட வேண்டிய மிக முக்கிய விபரம் இங்கு நோயாளிகளுக்கு மருந்துகள் அடக்க விலைக்கே வழங்கப்படுகின்றன என்பது தான் . புற்றுநோய் , அதற்கான சிகிச்சை என்று வரும்போதே செலவுகள் தான் மலைக்க வைப்பவை . இங்கு அதுவும் எளிதாக்கித் தரப்படுகின்றது நோயாளிகளுக்கு !
தென் தமிழகத்தில் உலகத்தரமான புற்றுநோய் சிறப்புச்சிகிச்சையை ஏழை எளியோருக்கும் கிடைக்கச் செய்திருக்கும் தஞ்சாவூர் கான்சர் சென்டர் நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் !
..ஷஹி..
tags
cancer , tanjore , tanjore cancer centre , chemotheraphy , radiation , pain management , surgical oncologist , medical oncologist , radiation oncologist , thulukampatti, tobacco cessation, dr. arun seshachalam , dr. sujith, dr. senthilkumar
புற்றுநோய் , புற்றுநோய் மருத்துவமனை , தஞ்சாவூர் கான்சர் சென்டர் , ரேடியேஷன் , ஆன்காலஜி , சர்ஜிகல் ஆன்காலஜி , கீமோதெரபி , துலுக்கம்பட்டி , தஞ்சாவூர் , டாக்டர். அருண் சேஷாசலம் , டாக்டர் . சுஜித் , டாக்டர் . செந்தில் குமார் , புற்றுநோய் மருத்துவம் , புகையிலை , மது , சுற்றுச்சூழல், இயற்கை உணவு ,புற்றுநோய் முன் கண்டறிதல் , கீமோதெரபி சிகிச்சை , அறுவை சிகிச்சை , கதிர்வீச்சு சிகிச்சை , வலிநீக்கு மருத்துவம் , விழிப்புணர்வு முகாம்கள் , தணிப்பு மருத்துவ சேவை
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





Please comment with your real name using good manners.