/* ]]> */
Oct 042011
 

என்னதான்  நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்?

விஜய்காந்த் + ஜெயலலிதா

1.”சபாஷ்! சரியான போட்டி!” என்று சொல்லும்படியாக அமைந்துவிட்டது  சென்னை மேயர் தேர்தல். அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டிருப்பவர் சைதை துரைசாமி.  இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி; இலவச திருமண மண்டபம்; இறந்தவர்களின் உடலைப்பாதுகாத்து  மயானத்துக்கு எடுத்துச் செல்லும் குளிர்சாதனப் பெட்டியை தனது அறக்கட்டளை மூலம் இலவசமாக வழங்கி வருகிறார்.  எனவே இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. மேலும், கொளத்தூரில் ஸ்டாலினுடன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனவர். ஆனால், இவர் ஜானகி அணியில் இருந்தவர். அவ்வப்போது  கொஞ்ச காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர். எனவே இவருக்கு அதிமுகவினரிடம் ஒரு எதிர்ப்பு அணியும் உண்டு.  மேலும், போராட்ட நேரங்களிலெல்லாம், காணாமல் போயிருந்தவர்களையெல்லாம் தூக்கிவிட்டு விட்டால், அப்புறம் அவர் பெரிய ஆளாகி நம்மையெல்லாம் ஓரங்கட்டி விடுவார் என்ற பயம் சென்னை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களிடம் இருக்கிறது. இப்படி ப்ளஸ் மைனஸ் கலந்துள்ளவர் சைதை. சைதை துரைசாமி இப்போது ஃபேஸ்புக்கிலும் கலக்குவது தான் இப்போதைய லேட்டஸ்ட் நெட் டாக்.

இவரை எதிர்த்து நிற்கும் மா.சுப்ரமண்யம் சிட்டிங் மேயர் என்பது மட்டுமல்ல . மக்களுடன் மிகவும் நெருங்கியவர். பக்கத்து வீட்டுக்காரர் போன்ற உணர்வும் பாசமும் இவர் மீது அனைவருக்கும் உண்டு.  முக்கியமாக கெட்ட பெயர் எடுக்காதவர். மேலும் மேயராக இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். மேம்பாலங்கள், நகர்ப்புறத் தூய்மை, புயல், மழை நிவாரணம் என்று ஏகப்பட்ட மக்கள் நலப்பணிகளை இன்றுவரை விடாமல் நடத்திகொண்டிருப்பவர் என்ற பெருமை மா.சு.வுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தகுதிகள்.  ஸ்டாலினுக்கே மா.சு. தன்னைவிட மிகவும் நன்றாக மேயர் பணியைச் செய்தார் என்ற எண்ணமும் நம்பிக்கையும்  உண்டு. திமுக தலைமையிடமும், மக்களிடமும் ‘மிக நல்ல மேயர்’ என்ற பெயர் வாங்கியிருக்கிறார். குறித்த காலத்தில் இவர் நிறைவேற்றிய பல திட்டங்கள் இவர் பெயரை சொல்லிக்கொண்டிருக்கின்றன.  எனவே நல்ல  பெயர் இவரோடு ஒட்டிக் கொண்டிருப்பது மா. சுப்ரமணியத்துக்கு உள்ள ப்ளஸ். ஆனால்,  கடந்த 5 வருடங்களில் சென்னையில் உள்ள  திமுக கவுன்சிலர்கள் யாரும் நற்பெயருக்கு சொந்தக்காரர்களாக இல்லை.  மேலும், இவர் ஆளும் கட்சியில் இல்லை என்பதும் இவருடைய மைனஸ். இப்படியாக மேயர் கேண்டிடேட்ஸ் இருவரும் ப்ளஸ் மைனஸ் கலந்து இருக்கிறார்கள்.  இவை மட்டும் ஒரு கேண்டிடேட்டின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிட முடியாது. தேர்தல் என்றால் வழக்கமாக அரங்கேறும் தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் கணக்கில் கொண்டால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சைதைக்குத் தானே வாய்ப்பு அதிகம்?

2.   ஊழலுக்கு எதிராகப் போராடுபவர் என்று உமாஷங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களுக்குப் பெயர்.  ஆனால் இவர் அடிக்கடி பந்தாடப்படுகிறவர் என்பதும் யாவரும் அறிந்ததே. இதோ, இப்போதும் இவர்மீது  நடவடிக்கை வந்துவிட்டது. கைத்தறித்துறை நிர்வாக இயக்குனராக இருந்தவர் தற்போது  நில உச்சவரம்புத் துறையின் ஆணையராக  மாற்றப்பட்டுள்ளார். இதற்கான இடமாற்ற உத்தரவை கடந்த 11-ம் தேதி ஞாயிறு இரவு 10.30 மணிக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவர் வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிப் படித்துப் பார்த்த உமாஷங்கர், ” இதை நாளை காலையிலேயே கொடுத்திருக்கலாமே. இரவு நேரத்தில், அதுவும் விடுமுறை நாளில் கொடுக்க வேண்டுமா? ” என்றாராம். பிறகு கலகல்வென சிரித்தபடியே ” கைத்தறித்துறையில் என்னை 106 நாட்கள் பணிபுரிய அனுமதித்ததற்கு நன்றி”. என்று தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிவிட்டாராம்.  விசைத்தறி அதிபர்களும்,கைத்தறித்துறை அதிகாரிகளும், ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்களாம்.  எல்லாம் சரிதான். மாறுதலுக்கான காரணம் என்னங்குறீங்களா?. இதெல்லாம் ஒரு கேள்வியா?. இந்த செய்தியை இன்னொரு முறை படியுங்கள்.

3. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவை அதிமுக கழற்றிவிட்டது ஏன்? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், அரசியல் ஞான சூன்யங்கள் கூட சிரிக்கும். சட்டசபைத் தேர்தலில் ஜெயித்தபிறகு  என்ன செய்தார், விஜயகாந்த்? சட்டசபைக்குகூட சரிவர  வரவில்லை.  சுதந்திரதின விழாவுக்கோ, அதிமுக ஆட்சியின் 100வது நாள் விழாவுக்கோ வந்ததில்லை. ஏன், வந்து முதல்வரை  நாலு வார்த்தை பாராட்டிப் பேசியிருக்கக்கூடாதா? இவையெல்லாம், வெற்றிக்குப் பிறகு விஜயகாந்த் ஜெ.வை மதிக்கவில்லை; அலட்சியப்படுத்துகிறார்  என்றுதானே காட்டுகிறது? சட்டசபைத் தேர்தலில் ஜெயிக்க விஜயகாந்த் தேவைப்பட்டார். இப்போது ஆளும் கட்சியான பிறகு அவர் எதற்கு?  தன்னை ‘அடுத்த முதல்வர் ‘ என்று வேறு கூறிக் கொண்டிருக்கும், விஜயகாந்தை நான் வளர்த்துவிட வேண்டுமா?என்று ஜெ. நினைக்கமாட்டாரா?. அதோடு கலைஞர் தனித்து நிற்பதாக முடிவெடுத்த பிறகு, கும்பலை சேர்த்துக்கொண்டு அதிமுக உள்ளாட்சியில் குதித்தால், அது நல்லாவா இருக்கும்?

இந்த நிலையில், விஜயகாந்த் பாவம், சமச்சீர் கல்வியிலோ, வேறு எந்தப் பிரச்சினையிலுமோ ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு வார்த்தைகூட இதுவரை பேசியதில்லை. பரமகுடி விஷயத்தில்கூட , ஆளும் கட்சி மாதிரியே ‘டயலாக்’ விட்டதுக்கு கிடைத்த பரிசு இதுதானா என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மருகுது,இல்லை-இல்லை ; தேம்புது தேமுதிக.

4. சட்டமன்றத் தேர்தலில் காலை ஒடித்துக்கொண்டு படுத்துவிட்ட ராமராஜன் உள்ளாட்சித் தேர்தலில் கலக்கப் போறாராம். அம்மாவின் மூலம் வெற்றிபெற்ற சில  கூட்டணிக் கட்சிகள்,  தேர்தலுக்குப் பிறகு அதை உணர்வார்கள். என்கிறார்.

Tags : tamilnadu politics and mayor elections in Chennai city between ADMK and DMK and political equations| DMK|ADMK|Jayalalitha|Mayor elections| Saidai Duraisamy| Vijaykanth| Karunanidhi|Communists|ஜெயலலிதா + விஜய்காந்த் | சைதை துரைசாமி | சைதை துரைசாமி ஃபேஸ்புக்| மேயர் தேர்தல்| உள்ளாட்சி தேர்தல்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>