/* ]]> */
Jul 102011
 
பிரணாப் கருணாநிதி

பிரணாப் கருணாநிதி

1. அமைச்சரவை மாற்றம் சம்பந்தமாகப் பேசத்தான், மத்திய மந்திரி பிரணாப்,  கலைஞரைச் சந்திக்க சென்னை வந்தாராம். தி.மு.க. சைடிலிருந்து புதிதாக யாரையாவது சேர்ப்பது அல்லது, விடுவது என்பது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்ததாம். இருக்கிற மந்திரிகளைக்கூட நீக்கிவிடும் யோசனையில் இருக்கிறதாம் தி.மு.க. தலைமை. உப்பு சப்பில்லாத இலாக்காக்களோடு இரண்டு மந்திரிகள் தர காங்கிரஸ் தயாராக் இருக்கிறதாம்.. என்ன செய்யப் போகிறது திமுக?

2. முன்னாள் அமைச்சர் இசக்கி. சுப்பைய்யாவின் தங்கை மகள் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து திமணம் செய்துகொண்டாராம். போலீஸை வைத்து மிரட்டப் பார்த்த இசக்கிக்கு தோட்டத்திலிருந்து ஆர்டர் பறந்து வந்ததாம், திருமணம் செய்துவைக்கச் சொல்லி.

3. தி.மு.க.தலைமைக்கு  மட்டும்தான் ‘ குடும்ப ஆதிக்கம் ‘ என்ற குற்றச்சாட்டு இல்லை.  எம்.பி.யாக இருக்கும் டி.ஆர். பாலுவும் தன் மகனுக்கு எம்.எல்.ஏ. சீட்  வாங்கினார்;  தூத்துக்குடி பெரியசாமிக்கு சீட் இல்லாவிட்டால், அவரது மகள்; ஆற்காடு வீராசாமிக்கு வயதாகிவிட்டால், அவரது உதவியாளர்; இப்படியாக குடும்ப ஆதிக்கத்தை அடுத்தகட்டத் தலைவர்களும் ஆரம்பித்ததை  கட்சியின் கடைசித் தொண்டனும் ரசிக்கவில்லையாம்.

4.”  இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில், 1967ல் முன்னணியில் இருந்து களப்பணி ஆற்றியவர்கள் மாணவர்கள்தான். அவர்களால்தான் அப்போது ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால், இன்றைக்கு மாணவர்கள் மத்தியில் தி.மு.க. பற்றிய மதிப்பீடு மோசமான நிலையில் இருக்கிறது.  ஆட்சியை இழந்ததற்கு அவர்களே முக்கிய காரணம் “இப்படியெல்லாம் இருக்கிறதாம், தி.மு.க. தொண்டர்களின் உணர்வுகள்.

5.”  கலைஞர் பங்கேற்ற ஒரு சினிமா நிகழ்ச்சியில், நடிகர் அஜீத் , விழாவில் பங்கேற்க தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுப்வதாகச் சொன்னபோது, நடிகர் ரஜினிகாந்த் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கைதட்டியதற்கான காரணம் இப்போது புரிகிறதா?  ” என்கிறார் இல. கணேசன். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தால், திரைப்படத் துறையினர் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள், என்பதும், கேபிள் டி. வி ஆபரேட்டர்களும் இவர்களால் அதிகம்  பாதிக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>