Jun 302013
சிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்
சிதம்பரம் கருணாநிதி உறவில் அடுத்த திருப்பம். 2ஜி குற்றச்சாட்டுகளின் மூலம் எழுந்துள்ள பழியை திமுக மீது போட்டுவிடுவதுதான் நாம் தப்பிக்க ஒரே வழி என்று சோனியாவுக்கு யோசனை சொன்னது ப. சிதம்பரம் தான் என்று தெரிந்துகொண்ட கலைஞர் ப.சி. மீது கடும் கோபத்தில் இருந்ததால், ப.சி.யின் தாயார் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லவில்லை. இப்போது சிதம்பரம் கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கலைஞரின் 90 -வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஜூன் மாதம் 6-ம் தேதி கலைஞரைக் காண வருவதாக இருந்தாராம், ப.சி. தனது தாயார் அப்போது மரணமடைந்ததால், இறுதிக் காரரியங்கள் முடிந்து இப்போது கடிதம் எழுதுகிறாராம். கலைஞர் 100 வயதைக் கடந்து இந்திய மக்களுக்கு வழி காட்டவேண்டும் என்று வாழ்த்தியிருந்தார். பதிலுக்கு கலைஞர் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த கடிதங்களுக்கு என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments