/* ]]> */
Jul 112011
 
ரபி பெர்னார்டு

ரபி பெர்னார்டு

1. சமீபத்தில்  ராஜ்ய சபா எம்.பி.யாக யோகம் அடித்திருக்கிறது ரபி பெர்னார்ட்டுக்கு.  அவருடைய  திறமைக்குக்  கிடைத்த பரிசாம் இது. ஜெயா டி.வி.யில் 2 ஜி. பற்றி ரபி பெர்னார்ட் நடத்திய விவாதம்தான் இந்தப் பரிசைப் பெற்றுத் தந்ததாம்.  தா. பாண்டியன்,மலைச்சாமி, தம்பிதுரை, பழ. கருப்பைய்யா ஆகியோரை வைத்தும்  பி.எஸ்.என்.எல்.தொழிற்சங்கப் பிரமுகர்களை வைத்தும், ரபி பெர்னார்ட் ஜெயா டி.வி.யில் நடத்திய விவாதம் பாமர மக்களுக்கு ஸ்பெக்ட்ரம்  ஊழல்பற்றி  எளிமையாகப் புரிய வைத்ததாம்.  2ஜி. குளறுபடிகள் குறித்து டெல்லியிலும் இவருடைய குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பதற்காகவே ரபி பெர்னார்ட் பார்லிமெண்ட்டுக்கு அனுப்பப்படுகிறாராம்.

2.கலைஞர் டி.வி.தொடங்கப்பட்ட அண்ணா பிறந்த தினமான, செப்டம்பர் 15-ம் தேதியன்று, உதயமாகப் போகிறதாம், ஒரு புதிய சேனல். ‘ முரசு ‘ என்ற பெயரில் வர இருக்கும் சேனல் பொழுதுபோக்கு அம்சங்களைக்கொண்டு இருக்குமாம்.

3. தயாநிதி மாறன்  சி.பி.ஐ யிடமிருந்து சம்மனைப் பெற்றுக்கொண்டுவிட்டாராம். அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் பிரதாப் ரெட்டி, அவருடைய மகள் சுனிதா ரெட்டி இவர்களையும் விசாரிக்க இருக்கிறார்களாம்.

4. ஜெ. சசிகலா சம்பந்தப்பட்ட நிதித்துறை சம்பந்தப்பட்டவழக்குகளில் மத்திய நிதிதுறை இணயமைச்சர் பழனிமாணிக்கம், அவுங்களுக்கு சாதகமா எந்த அளவுக்கு உதவியிருக்கிறாருன்னு புஹார்கள்,  கலைஞரிடம் வந்திருக்கிறதாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>