/* ]]> */
Oct 102011
 

திடீரென பிரசன்னமானார் ரஜினி

 

ரஜினிகாந்த் + லக்ஷ்மி மஞ்சு

ரஜினிகாந்த் + லக்ஷ்மி மஞ்சு

1. நீண்ட இடைவெளிக்குப் பின்,தென்பட்டார் ரஜினி. மகள் சௌந்தர்யாவின் மாமனார் ராம்குமார்-ஹேமா தம்பதியின் சஷ்டியப்த பூர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. சொந்தக்காரர்களும் நண்பர்களும் நிறைந்திருந்தார்களாம். யாரும் எதிர்பாராத தருணத்தில்,  அங்கே திடீரென பிரசன்னமானாராம், ரஜினி.  எல்லோரையும் அன்புடன் நலம் விசாரித்தாராம். முகத்திலும், உடம்பிலும், சிகிச்சையின் களைப்பு முழுதுமாக நீங்காமல் இருந்ததாம். இதற்கிடையில் மோகன்பாபுவின் மகள் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில் வேறு நெட்டை கலக்கிக் கொண்டிருக்கிறது.

டப்சி பண்ணு

2. நற்சான்றிதழ் கிடைப்பது மிகவும் கஷ்டம்தான். அதுவும் அதே துறை சார்ந்தவர்களிடமிருந்து வருவது மிகவும் சிரமம்.  வட இந்தியப் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினி. அவருக்கு அடுத்தபடியாக நடிகர் சூர்யா. தொழிலுக்கு அதிக மரியாதை கொடுப்பவர், தனுஷ். ‘ஜென்டில்மேன்’ ஜீவா. இப்படியெல்லாம் சான்றிதழ் கொடுக்கிறாராம், நடிகை தப்சி.

ஷகிலா

3.. எய்ட்ஸ் குழந்தைகளை ஆதரிக்கும் கன்னியாஸ்த்ரீயாக நடிக்கிறார், நடிகை ஷகிலா. ‘ஈ அபயதீரம்’ என்ற மலையாளப் படத்தில் இந்த வேடம். கவர்ச்சிப் பாதையிலிருந்து விலகி குணச் சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு மாறிவிட்டார்.

எங்கேயும் எப்போதும்

4. சமீபத்தில் சாலை விபத்தில் காலமான இயக்குனர்  திருப்பதிசாமி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்தவர். மிகவும் திறமை வாய்ந்தவர் இவர், என்பது முருகதாஸின் உயர்ந்த எண்ணம். திருப்பதிசாமியின் அகால மரணம் இவருடைய குடும்பத்தை பெருமளவில் பாதித்தது. திருப்பதிசாமியின் வாழ்க்கையையே , அவருடைய அகால மரணமும், அது குடும்பத்தை எப்படி பாதித்தது என்பது போன்றவற்றின் பாதிப்பே, ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தை தயாரித்தார், ஏ.ஆர். முருகதாஸ்.

ஜோஷ்னா

5..பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை நடிகை ஜோஷ்னா, தன்னுடைய உடலில் ‘பியர்ஸிங்’ (பச்சை குத்திக்கொள்வது)  செய்துகொண்டுள்ளார். இப்படி ‘பியர்சிங்’ பண்ணிக்கொண்டு, மாடர்ன் உடையோடு, நடந்தபோது ஒட்டுமொத்த தெருவும்  அவரை வேடிக்கை பார்த்ததாம்.  தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாம்.

சிம்ரன்

6. . ‘ ஜாக்பாட் ‘ நிகழ்ச்சியை இப்போது சிம்ரன் நடத்துகிறார்.” முதலில்  குஷ்பு மேடம் இந்த நிகழ்ச்சியை நடத்தியபோது பார்ப்பேன். அழகான சேலை, விதவிதமான ஜாக்கெட் என கலக்குவார். அவருடைய அழகில் மயங்கினேன்; மயங்குகிறேன். நான் மட்டுமல்ல. எந்தப் பெண்ணாக இருந்தாலும், குஷ்பு போல ஆடை அணியவேண்டும் என்ற ஆசை வரும். எனக்கு அந்த வாய்ப்பு தானாக தேடி வந்திருக்கிறது. இனி என்னையும் விதவிதமான உடைகளில் நீங்கள் பார்க்கலாம். ” என்கிறார், சிம்ரன்.  குஷ்பு மாதிரி இவருக்கு அரசியல் ஆசை எதுவும் இல்லையாம்.

Tags : Latest cinema hot news about south indian super star Rajinikanth latest public appearance and rajinikanth health updates and latest cinema news, ரஜினி, ரஜினிகாந்த், ரஜினி ஹெல்த், ரஜினி உடல்நிலை, டப்சி பண்ணு, டப்சி, சிம்ரன், எங்கேயும் எப்போதும், முருகதாஸ்,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>