/* ]]> */
Jan 312012
 

துருவநட்சத்திரம் சிறந்த குறும்படம் விருதுகள் பல வென்றது .  போர்ட் ப்ளேரில் நடந்த இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது .

ஆடை வடிவமைப்பு மற்றும் ப்ரொடக்ஷன் டிசைனிங் : எஸ் . அரவிந்த்
சீஃப் அஸிஸ்டெண்ட் டைரக்டர் : சுஜீத் சிங்
ஆர்ட் டிபார்ட்மெண்ட் : அரவிந்த் மனோஹரன் , அஷோக் செல்வன், கார்த்திக் முத்துக்குமார்
ஃபர்ஸ்ட் அஸிஸ்டெண்ட் காமெரா : மோஹர் மேட்
செகண்ட் அஸிஸ்டெண்ட் காமெரா : ஆஷிமா ஷெனாய்
பூம் ஆபரேடர் : ப்ரஷாந்த் ப்ரகாஷ் ராவ் துமால்
இணை தயாரிப்பு : அஷோக் செல்வன், கார்த்திக் முத்துக்குமார் , ஃபெரோஸ்
கலரிஸ்ட் : பொன்னியன்

வெளிநாட்டில் வசிக்கும் மகனை எதிர்பார்த்து ஏங்கியிருக்கும் அப்பா டெல்லி கணேஷுக்கும் பேரன் சச்சின் ( ஷிவா) வுக்கும் இடையில் மலரும் அழகான குழந்தைதனமான அன்பை மிக அழகாக சொல்லியிருக்கும் படம் . பாட்டி ருக்குவாக வரும் உஷா அட்டகாசமாக நடித்திருக்கிறார் . கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு அபாரம் . டெல்லி கணேஷை விடவும் பிள்ளையின் வருகைக்காக ஏங்கும் தகப்பனின் ரோலுக்கு பொருத்தம் யார் ? தாத்தாவும் பேரனும் நண்பர்களுடன் கிரிகெட் ஆடும் ஒரு காட்சிக்காகவே படம் பார்க்கலாம் ..அத்தனை அழகு ! தாத்தா குழந்தையா பேரன் குழந்தையா என்று ஒரு நிமிடம் நம்மை மயக்கும் சீன் இது .

சிறந்த இயக்கத்துக்கான வெண்கலப் பதக்கமும் சினிமாடோக்ராஃபிக்கான வெள்ளிப் பதக்கமும் L.V. ப்ரஸாத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமியினால் வழங்கப்பெற்ற படம் துருவ நட்சத்திரம் .

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>