/* ]]> */
Oct 052011
 
nizhalpadam


   திகில் படங்கள் எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்றது … சில காட்சிகளில் சொதப்பினால் கூட மொத்த உழைப்பும் வீணாகக்கூடிய அபாயம் அதிகம் … தமிழ் சினிமாவின் இரண்டரை மணி நேர கலாசாரத்திற்காக திகில் படங்களில் தேவையில்லாமல் காமெடி . பாடல் என புகுத்தி கெடுப்பவர்கள் ஏராளம் …

பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவதால் குறும்படங்களுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை … அதே சமயத்தில் சொல்ல வந்ததை சுருக்கமாக பயம் குறையாமல் சொல்ல வேண்டும் … அந்த வரிசையில் வந்திருக்கும் ஒரு குறும்படமே ” நிழல் படம் ” …

பண்ணையாரும் பத்மினியும் ” மூலம் காமெடியில் கலக்கிய வெயிலோன் திரையின் மற்றொரு திகில் படைப்பே இந்த ” நிழல் படம் ” … சிட்டியில் பொது இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதில் இருப்பவர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள் … அதிலும் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்கள் அவரவர்கள் வீட்டிற்கே அனுப்பபடுகின்றன …

நெஞ்சை உறைய வைப்பது போன்ற காட்சிகள் இல்லையென்றாலும் படம் ஸ்மார்டாக இருப்பது பிளஸ் … மூவரே நடித்திருக்கும் இப்படத்தில் விமல்ராஜ் ஸ்கோர் செய்கிறார் … ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் , கோகுலின் ஒளிப்பதிவும் திகில் படத்திற்குன்டான உணர்வைக் கொடுக்கின்றன ….

இயக்கம் : எஸ் . யு . அருண் குமார் …

 

[youtube]IWoVGR5RAyc[/youtube]

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>