/* ]]> */
Aug 302011
 

 

1. தேங்காய்ப் பால் குழம்பு:

தேவையான பொருட்கள்:

தேங்காய்-1; உருளைக் கிழங்கு-1/4 கிலோ; பச்சை மிளகாய்-4; மல்லி-1ஸ்பூன்; சீரகம்-1ஸ்பூன்; கத்தரிக்காய்-4; பீர்க்கங்காய்-1; பூண்டு-1; மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்; எலுமிச்சம்பழம்-1 மூடி; பட்டை-சிறிது;கிராம்பு-2; ஏலம்-1; எண்ணெய்-2ஸ்பூன், உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

பச்சை மிளகாயுடன் மல்லி, சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.  தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது பாலில் காய்கறிகளை நறுக்கிப் போட்டு மசாலா விழுது, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். காய்கள் வெந்தவுடன் கெட்டி பாலை சேர்த்து மஞ்சள் தூளை தூவ வேண்டும். எண்ணெயில் பட்டை ,கிராம்பு, ஏலம் தாளித்துக் கொட்டி, எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கினால், ‘ தேங்காய்ப் பால் குழம்பு ‘ தயார்.

2. பருப்பு ரவை ரோல்

தேவையான பொருட்கள்:

ரவை-1 கப்; வெங்காயம்-1; தக்காளி-1; துவரம் பருப்பு-1/2 கப்; பச்சை மிளகாய்-4; கடுகு-உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்; கடலை பருப்பு- 1ஸ்பூன்; உப்பு-எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை:

துவரம் பருப்பை சிறிது நேரம் வேகவிட வேண்டும்.  வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு தாளித்து, நறுக்கிய  பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.  இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு கொதிக்கவிட வேண்டும்.
ஒரு கொதி வந்தவுடன் ரவையை சேர்த்துக் கிளறி, வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து  கலந்து இறக்கிவிட வேண்டும். இந்தக் கலவை ஆறியதும் சிறிய ரோல் போல உருட்டிக் கொள்ளவேண்டும். மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

3. கொத்தவரங்காய் பருப்புக் கூட்டு:

தேவையான பொருட்கள்;

இளம்பிஞ்சான கொத்தவரங்காய்-1/4கிலோ;பயத்தம்பருப்பு-50 கிராம்; மிளகாய் வற்றல்-6; கடுகு-1 ஸ்பூன்;  பெருங்காயப்பொடி சிறிது; மஞ்சள்பொடி சிட்டிகையளவு; , கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு;உப்பு-1ஸ்பூன்.

செய்முறை:

காயைக் கழுவியபிறகு, இரண்டாக நறுக்கிக்கொள்ளவேண்டும். குக்கரில் பயத்தம்பருப்புடன் நறுக்கிய காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

அடிகனமான வாணலியில்,இரண்டு ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு தாளித்து நான்காக  கிள்ளிய மிளகாய் வற்றல், நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு வதக்கியதும், வெந்த பருப்பு, காயைக் கொட்டி கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் அதிகமாக இருந்தால், ஒரு ஸ்பூன் அரிசி மாவைக் கரைத்து ஊற்றி, மீதமுள்ள இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவேண்டும்.
மிகவும் சுவையான கொத்தவரங்காய் பருப்புக் கூட்டு மோர்க் குழம்பிற்கு ஏற்ற சூப்பர் காம்பினேஷன்.

Tags : Tasty tamil recipes with 3 dishes coconut milk curry, dal rava roll and kothavaranga kootu

சமையல் குறிப்புகள், சமையல் குறிப்பு, சுவையான சமையல், சமையல் குறிப்பு, சமையல், தேங்காய்ப் பால் குழம்பு ,பருப்பு ரவை ரோல் ,கொத்தவரங்காய் கூட்டு, samayal kurippu, samaiyal tips, tamil recipes,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>