♠ சில்க் சுமிதா- வித்யா பாலன் ஏணி வச்சாலும் எட்டுமா? – கபிலன், சீர்காழி
யார் கீழே, யார் மேலேன்னு சொல்லலியே…
கண்களாலேயே… கிறக்கம் ஏற்றும் கருப்புத்திராட்சை – விஜயலெக்ஷ்மி என்ற சில்க்..
வித்யா பாலன்….
“டர்ட்டி பிக்சர்” வரட்டும்… பார்க்கலாம்
♠ அண்ணா, அன்னா இரண்டே வரியில வேறுபடுத்துங்க? (இந்த.. அது பெரிய “ண்“..இது சின்ன “ன்” டைப் பதில் எல்லாம் வேணாம்!) – முத்தரசன், ராமநாதபுரம்.
அண்ணா – காங்கிரஸுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து, தமிழகத்தில் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியவர்.
அன்னா – காங்கிரஸை இந்தியாவில் ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கக்கூடிய வாய்ப்புள்ளவர்.
♠ வைரமுத்து கவிதைகளில் ரொம்ப பிடிச்சது? – சரவணகுமார், ஓசூர்
கவிதைகளில் ரொம்ப பிடிச்சது ரொம்ப இருக்கு. என்றாலும் நிறைய பிடிச்ச பாடல் (கவிதை) வரிகள். இதோ..
“உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்..
எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம்..”
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜாவையே கிளைமாக்ஸை மாற்றவைத்தது இந்த பாடல் வரிகள்..
♠ பதில் சொல்ல ரொம்ப கஷ்டமான கேள்வி எது? – ரதிமாறன், கோவை.
(ஐயோ.. இப்பவே கண்ணைக் கட்டுதே..)
பாரில் இருக்கும்பொழுது வீட்டில் இருந்து மனைவி ஃபோன் செய்து எங்கே இருக்கீங்க?? என்று கேட்பதுதான் பதில் சொல்ல ரொம்ப கஷ்டமான கேள்வின்னு, திருமணமான என் நண்பர் சொல்கிறார்.
♠ மனித வாழ்வின் பருவங்களில் சிறந்ததுன்னு எதைச்சொல்லலாம்? – ஷஹி
பருவகாலம்..
♠ மங்காத்தா பாத்தீங்களா? – அழகன், மதுரை.
தல ஆடுன மங்காத்தா ஆட்டம் சூப்பர்… தமிழ்த் திரை உலகில் “தல” வித்தியாசமானவர் என்பதை மறுபடியும் நிருபித்திருக்கிறார்..
♠ இதுக்கு சொல்லு தல பதிலு..கோழி வந்துதா..முட்ட வந்துதா? எது பஸ்ட்டு? – B. ரவி, ஈரோடு.
கோழியும் முட்டையும் சேர்ந்துதான் வந்தது.. (போன வாரம் அஞ்சப்பர்ல சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினப்ப..)
ஐயா சாமி .. இந்த கேள்விய இன்னும் எத்தனை நாளுக்குத்தான் கேட்பிங்களோ??
♠ பேசும்போது கண்களைப் பார்த்து பேசணும்ன்னு சொல்றாங்களே எதுக்கு? – சிலம்பு, பழனி
அது யாரு யாரைப் பார்த்து பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்..
கண்களைப் பார்த்து பேசினால், எதிராளிப் பொய் பேசினால் ஈசியாய் கண்டுபிடிச்சிடலமாம்.
ஆனாலும் நம்ம ஆளுங்க மலை முழுங்கி மகாதேவன்கள் அல்லவா??
♠ மனைவி அமைவதெல்லாம்…சரி..கணவன்? – ஹேமா, ஆத்தூர்
பெண்களுக்கு பெரும்பாலும் அது பெற்றோர் கொடுத்த வரமாகிவிடுகிறது..
♠ ஸ்ரீதேவி திரும்பவும் நடிக்கிறாங்களாமே? இன்னா கேரக்டர் குடுப்பாங்க பா? சிவா, கடலூர்.
மாமி(யார்) கேரக்டர்..
மாப்பிள்ளை படத்திலேயே தனுஷுக்கு மாமியாரா ஆகியிருக்கவேண்டியவங்க பா..
♠ கலைஞர்? - கவிதா கண்ணன், புதுக்கோட்டை.
தமிழினத் தலைவர்
தமிழகத் தலைவர்
தற்பொழுது குடும்பத்தலைவர்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments