/* ]]> */
Aug 222013
 

‘வாலி’பக் கவிதாஞ்சலி – கவிதை – சங்கர பாண்டியன்

tamil poet lyrics writer vaali

tamil poet lyrics writer vaali

‘வாலி’பக் கவிதாஞ்சலி…..

 

திருவரங்கத்துச் சீமான்

உன் திரைப்பாடல்கள்

கேட்டுத்

திரை அரங்கங்கள்

அதிர்ந்ததே….

 

ஒரு தலைமுறை

வாழ்ந்து மறைந்த

உனக்கு….

தமிழகத்தின் நான்கு

தலைமுறைகள்

தலை வணங்கியதே….

 

வயோதிகக் கவிகள் இறந்தது கண்டோம்….

வாலிபக் கவிஞன் நீ இறந்தது எங்கனம்?

 

உன்னைத் தீ தீண்டிய பொழுதில்…

தீயை அணைத்திட வேண்டி

வானம் பொழிந்ததே…

வற்றாமல் அழுததே…

 

அத்தனை அரசியல் தலைகளோடும்…

அன்பான நட்புண்டு உனக்கு….

நட்பைக் கற்பைப் போல்

எண்ணியவன் நீ….

அதைக் கொண்டு காசு பணம்

பார்த்ததில்லை நீ….

 

ஓங்கி வளர்ந்தது உன் உருவம் மட்டுமல்ல…

நீ தாங்கிப் பிடித்த தமிழும் தானே…

 

இளம் கவிஞர்கள் பலரையும் ஊக்குவித்து…

அவர் உயர்வு கண்டு வாழ்த்தி வரவேற்ற

உன் பண்பாடு யாருக்கு வாய்க்கும்?

 

அந்தப் பக்குவம் இனி எங்கு நீடிக்கும்???

 

பொன்னிற மேனி…

அது அணிந்திருக்கும்

தகதக ஜிப்பா…

 

அது உன்னைப் பகட்டாய்க் காட்ட அல்ல…

தமிழை மரியாதையய்ப் பாதுகாக்க…

 

யாருக்கும் நீ அடி பணிந்ததுமில்லை…

அவமரியாதை செய்ததுமில்லை…

 

உன் நாவில் தமிழ் நடனம் ஆடியது…

உன் பேனா முனையில் தமிழ் சுவாசித்தது…

 

பதினையாயிரம் பாடல்கள் புனைந்தும்…

உனக்கு அளிக்கப் பட்ட பாராட்டெல்லாம்…

தமிழுக்கு அளிக்கப் பட்ட பாராட்டாகத்….

தலை வணங்கி ஏற்றவன் நீ….

 

எப்போதும் வாழ்வில் நீ ஆட்டம் போட்டதுமில்லை…

அழுது புரண்டதுமில்லை….

 

வாழ்வாங்கு வாழ்ந்த வாலியே….

அந்த லோகத்திலும் நீ நற்பேறு பெற்றிட…

இறைவனை வணங்கி….

இதனை இத்தோடு முடிக்கிறேன்….

-S. Sankara Pandian

s sankara pandian

s sankara pandian

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “‘வாலி’பக் கவிதாஞ்சலி – கவிதை – சங்கர பாண்டியன்”

  1. simply super’b

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>