/* ]]> */
Sep 272011
 

மண்ணியம் பேசுவோம் .. – கவிதை – ராணி ஆனந்தி

save trees

பெண்ணியத்தோடு
பேசுவதறியோம்…
மண்ணியத்தோடு
பேசுவதறிவோம்…

உணர்வறியோம்
என்றே ஏசுவார்…
உணவிற்காய் எமைச்
சாரும் மாந்தரெல்லாம்…

வெட்டியாய்
நிற்கிறோமென்பார்…
எம்மோரையெல்லாம்
வெட்டிச் சாய்த்து விட்டு…

முகம் பார்த்துச்
சிரிப்போம்…
ஒரு நாளும்
இரசித்திடார்…

தாயாய் பசி
தீர்ப்போம்…
ஒரு நாளும்
உணர்ந்திடார்…

வீட்டிற்கோர் மரம்
வளர்ப்போம் என்றே
வீணாக்குகிறார்
வினாடிகளை…

வீட்டிற்கோர் மரம்
வெட்டாதிருந்தால்
போதுமே எம்மோர்
வாழ்ந்திருக்க…!

 

Tags : save trees| tamil poem on trees |மரம் பற்றிய மனித நேயக் கவிதை| மரம் வளர்ப்போம் | மரம் | காடு |

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>