/* ]]> */
Jan 232013
 

ஆறு மனமே ஆறு – கவிதை – அபி

 

vaigai-river-tamil poem on river sand mining

vaigai-river-tamil poem on river sand mining

 

* டெல்லி பேருந்தில்

ஐந்தே கயவர்கள் !

பாவம்…

எங்கள் ஊர்

ஆற்றுப் பெண்ணுக்குத்தான்

எத்தனை

மணல் லாரிகள் !

 

* ஆற்றுக்கு

இரு பக்கமும்

கரை !

அது மரபு !

எங்கள் ஊர்

ஆறுக்கோ

எல்லா பக்கமும் கரை !

இது திரிபு !

 

* பல நூற்றாண்டுகளை

தாண்டி வந்த எங்கள் ஆறு

பாவம்…

சில கழக ஆட்சிகளை

தாண்ட முடியாமல்

திண்டாடுகிறது !

 

* பேர் வைகையாம்

கை வைக்க கை வைக்க

குறையாதாம் !

பெரிசு ஒன்று

பழம்பெருமை பாடியது !

நமட்டுச் சிரிப்பு

சிரித்தனர்

மணல் லாரிக் காரர்கள் !

 

*  உச்ச நீதி மன்றம்

சொன்னாலும்

நீர் தர மறுக்கும்

அண்டை மாநில நேர்மை !

நீரில்லாத

ஆற்று மணலை

காசாக்கும்

சொந்த மாநில சீர்மை !

என

இரண்டு மாநில

திறமையில்

திண்டாடுகிறது

காவேரி ஆறு !

 

* தன்னை வற்ற வைத்தாலும்

பிறந்த வீட்டின் மேல்

எத்தனை பாசம் !

இப்போதெல்லாம்

காவேரி

கொஞ்சம் நீர் சிந்துவது

கர்நாடகத்தில்

வெள்ளம் வந்தால்

மட்டும்தான் !

 

* ஆற்று மணல்

ஒரு லாரி விலையை

அரசே நிர்ணயிக்கிறது !

அழியும் எதிர்கால

சந்ததியின் விலையை

நாமே நிர்ணயிப்போம் !

 

* புத்தகத்துல படத்துல

ஆறுல தண்ணியும்

பக்கத்துல மணலும் இருக்கே

நம்ம ஊரு ஆறுல மட்டும்

ஏம்பா ரெண்டுமே இல்ல ?

ஐந்து வயது

குழந்தையின் கேள்விக்கு

ஆகாயத்தை வெறிக்கிறேன் நான் !

———————————-

 

மேலே உள்ள படம் வைகை ஆறு தான் ! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கவிதை இது !

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “ஆறு மனமே ஆறு – கவிதை – அபி”

  1. Nice and good kavithai

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>