/* ]]> */
Feb 062012
 

எழுத்து வட்டம் – கவிதை – அபி

 

tamil poem on writing

எழுத்து வட்டம்

 

முதன் முதலில்
மழலை நிழலினில்
எழுத நான் பிடித்தது
என் அப்பா கைப்பிடித்து
எழுதிக் கொடுத்த
சிலேட்டுக் குச்சி தான்!

சிலேட்டுக்குச்சிகள்
ஒடிந்து மெலிசாக
காகிதத்தில் எழுதியது
கறுப்புமுனை பென்சிலால்!
தலை சீவினால் சாகும்
சகலத்துக்கும் மத்தியில்
சீவினால் மட்டுமே
உயிர் பெறும் வரம் அது !

பேனாவால் எழுதியது
அரும்பு மீசை முளைக்கையில்தான்!
வயிற்றுக்கு நடுவே
வாகாய்த் திருகி
மை ரொப்பினால்
மையமாய் எழுதுமது!
கை கையாய் இருந்ததை விட
மையாய் இருந்தது அதிகம்!

சாந்துப்பொட்டுப் போய்
ஸ்டிக்கர் பொட்டு வந்த நேரம்
மை பேனா வழி விட
பால் பாயிண்ட் வந்தது !

பேனாவின் எழுத்தும் கூட
மெல்ல மெல்லத் தேய
கை கீபோர்டில் தட்டத் தட்ட
எழுத்து திரையிலே வந்தது!

கீபோர்டும் கூட
எல் போர்டாகிவிட
டச் ஸ்க்ரீன்  பெட்டகம்
டாம்பீகம் கொண்டது !
சதுரமாய் இருந்த
பெட்டக ஸ்க்ரீனில்
கை விரல் தொட்டு
பொத்தான் தட்டுகையில்
அப்பா கைபிடித்துப் பழகிய
பழைய சிலேட்டு குச்சி
ஏனோ எனக்குள்
வந்து வந்து போகிறது !

 

- அபி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>