கை ரேகை சாஸ்திரம் – கல்யாண ரேகை என்ன சொல்லுது?
அதோ அந்த படத்தில் சுண்டு விரல்களின் கீழ் இரண்டு ரேகை தெரிகிறதல்லவா? அது தான் இந்த திருமண ரேகை. இந்த படத்தில் காட்டப்பட்டதைப் போல் ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் கூட சிலருக்கு இருக்கலாம்.
திருமண ரேகையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் :
1. எத்தனை ரேகைகள் உள்ளன?
2. திருமண ரேகையில் நீளம் எவ்வளவு ?
3. திருமண ரேகையின் அகலம் எவ்வளவு ?
4. திருமண ரேகை இதய ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை அப்படியே நேர்கோடிழுத்தால் சந்திக்கும் இடம் என்ன ?
5. திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா?
இந்த மூன்று விஷய்ங்களையும் கவனித்து விட்டு நாம் இந்த விஷயங்கள் பற்றிய கைரேகை பலன் எப்படி என தெரிந்து கொள்ளலாம். எந்த கை பார்க்க வேண்டும்? உங்கள் நேடுரல் ஹேண்ட் அதாவது நீங்கள் இயற்கையிலேயே எந்த கை பழக்கமுடியவரோ அந்த கையில் பார்க்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் பழக்க வழக்கம் காரணமாக அனைவரும் வலது கை பழக்கமுடையவர் போல தோற்றம் அளித்தாலும் பிறக்கும்போது இயல்பாய் இடது கை பழக்கமுடையவராய் கூட இருந்திருக்கலாம். ஆகவே எது நமது இயற்கையான டாமினென்ட் கையோ அந்த கையில் உள்ள ரேகைகளை பார்க்க வேண்டும் .
சரி, இந்த ரேகையிலிருந்து நாம் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்?
எத்தனை ரேகைகள் உள்ளன?
1. திருமண ரேகை முதலில் திருமண சம்பிரதாயத்தை குறிக்கவில்லை. அது நம் வாழ்க்கையின் ஏற்படும் காதல் உறவுகளை பற்றியது. ஆகவே இந்த ரேகையை காதல் ரேகை என அழைப்பதே பொறுத்தமானது. ஆக உங்கள் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை என்பதை இந்த காதல் ரேகை காட்டிவிடும். ஒன்றிற்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் உறவுகளை காட்டும்.இதை வைத்தே உங்கள் காதல் வெற்றி பெறுமா இல்லையா எனவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
திருமண ரேகையில் நீளம் எவ்வளவு ?
2. திருமண ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும் என தெரிந்து கொள்ளலாம். நீளம் கம்மியாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது.
திருமண ரேகையின் அகலம் எவ்வளவு ?
3. திருமண ரேகை அல்லது காதல் ரேகை த்டித்திருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெலிதாக இருந்தால் அது அந்த உறவின் ஆழமின்மியை குறிக்கும்.
திருமண ரேகை இதய ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை அப்படியே நேர்கோடிழுத்தால் சந்திக்கும் இடம் என்ன ?
4. திருண ரேகை எந்த இடத்தில் இதய ரேகையை நோக்கி திரும்புகிறது என்பது முக்கியம். அந்த திரும்பலை அப்படியே நீட்டித்தால் அது இதய ரேகையை வந்து சந்திக்கும் இடத்தை வைத்து ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என கணிக்கலாம்.
திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா?
5. திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்லதறகல்ல. சில பிரச்சினைளையே குறிக்கும். அது இல்லற வாழ்க்கை ( இல்லற இன்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாகவோ அல்லது மன ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடும் பிரச்சினையாகவோ இருக்கலாம்.)
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments