/* ]]> */
Oct 122011
 

உள்ளங்கை கரும் புள்ளிகளும் பரிகாரங்களும்:-

உள்ளங்கை கரும்புள்ளி

வாழ்க்கையில் நாம்  நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு உட்படுத்துவதுதான். ஜாதகத்தில் பத்தில் சனி, பனிரண்டில் புதன் நீசமானால், கிரகநாதர்கள் , கிரகநாதர்களுக்கு உரிய தீமைகளை உணர்த்தவே கரும்புள்ளி என திடமாக நம்பலாம். சிலர் தான் பிறந்தது முதலே இந்த கரும்புள்ளி இருக்கிறது என்பர். அதாவது அது அதன் வேலையை செய்யக் காத்திருக்கிறது என்று அர்த்தம்.  இனி இந்த கரும்புள்ளி பிரச்சினைகளை உதாரணங்களுடன்  விரிவாகக் காணலாம்.
1. உதாரணமாக சுண்டு விரலில் மூன்றாம் அங்குலாஸ்தியில் ( விரலின் அடிப்பகுதி ) கரும்புள்ளி தென்பட்டால், ஒரு விலைமதிப்பற்ற பொருள் திருட்டுப்போகப்போகிறது என்று அர்த்தம். மற்றும் உத்தியோக உயர்வு பாதிக்கப்படும். கைபேசி, மடிகணிணி( லேப்டாப்)  இவை காணாமல் போகும். பாத்ரூமில் கழட்டி வைத்த மோதிரம் அபேசாகும்.  அலுவலகத்தில் நம் கட்டுப்பாட்டில் இருந்த ஃபைல் காணாமல் போகும். வேண்டாதவர்கள் யாராவது ஃபைலை இடம் மாற்றி வைத்து திண்டாட விடலாம். இதனால் பதவி பறிபோனவர்களும் உண்டு. இந்த சமயம் ஜாதகத்தில் பத்தில் சனி, பனிரண்டில் புதன் நீசமாகும்.
2. ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் அல்லது லக்கினத்திற்கு 7-ல் சனியுடன் சுக்கிரன் இருக்கப்பெற்றால், சுக்கிரமேட்டில் கரும்புள்ளி தெரிய வரும். இதன் பொருள்  வாழ்க்கைத்துணை நம்மைவிட்டுப் பிரிந்து அதனால், நீண்ட நாள் மனக்கவலை வரப்போவதின் அறிகுறிதான். சுக்கிரமேடு என்பது கட்டைவிரலை ஒட்டியே அமையப்பெற்ற மேடுதான். சுக்கிரனை வணங்கவேண்டும். வெள்ளியன்று சனி, ராகு ஹோரையில் தண்ணீர் பருக வேண்டாம்.
3. ஒரு பெண்ணின் இடது காதில் எங்கு கரும்புள்ளி காணப்பட்டாலும், , அதன் பலன் புதுபுது தங்க நகைகளை அணிந்து ,சமுதாயத்தில் அந்தஸ்த்தில் வாழப்போவதின் அறிகுறிதான்.
4. மேற்குறிப்பிட்ட அறிகுறி ஒரு ஆணுக்கு ஏற்பட்டால், அதாவது ஆண்களின் இடது காதில் கரும்புள்ளி அமையப்பெற்று சுக்கிரன் 9-ல் இருந்தால், இவர்களுடைய தாய் தந்தையரே அதிகமான செல்வத்தைத் தருவார்கள்.  கெட்ட கிரகங்களின் பார்வை இருந்தால், வயதில் முதிர்ந்த பெண்ணோ ,இனம், மதம்மாறியோ திருமணம் செய்ய மனம் தூண்டும். இதற்கு பரிகாரம் சிறு வெள்ளிப் பெட்டகத்தில் தேனை ஊற்றி வாசலில் பள்ளம் ஏற்படுத்தி அதில் வெள்ளிப் பெட்டியை வைத்து மண்ணால் மூடிவிட்டால், நன்மைகள் நம்மை நாடிவரும்.
5. ஒரு பெண்ணின் மூக்கின் நுனியில் கரும்புள்ளி தென்பட்டால், தன் தகுதிக்கு மேற்பட்ட ஒரு வரன் அமையப்பெற்று ஆடம்பர வாழ்வு வாழப்போவதின் அறிகுறிதான்.
6. ஆயுள் ரேகையில் கரும்புள்ளி தேன்புள்ளி தோன்றினால், அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தபின் மிகமிக யோகம் எனலாம்.
7. கட்டைவிரல் நுனியில் கரும்புள்ளி தோன்றினால், தினக்கூலியாக இருந்தே பணம் சம்பாதித்து பெருவாழ்வு வாழலாம். சுண்டுவிரல் முதல்( பிரிவில்) அங்குலாஸ்த்தியில் கரும்புள்ளி என்றால், குழந்தைகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
8. உள்ளங்கையின் நடுப்பகுதியில் கரும்புள்ளி தோன்றினால், பிறந்த இடத்தை, ஊரை, கிராமத்தை, ஜென்மபூமியை விட்டுவிட்டு தன்னை உயர்த்திக்கொள்ள புது இடம் பெயரப்போவதின் அறிகுறி. கெடுதலற்ற நன்மை.
9. கட்டை விரலை ஒட்டி அமையப்பெற்ற சுக்கிரமேட்டில் கட்டைவிரலை ஒட்டினாற்போல் கரும்புள்ளி இருந்தால், வில்லங்கம் நிறைந்த வாழ்க்கை . சொந்த ஜாதகத்தில் 10-ல் சனி, செவ்வாய் இருந்தால், வீண்வாக்குவாதம் கூடாது. வேலைக்கே வேட்டு வைத்துவிடும்.
10. இருதய ரேகையை ஒட்டியே தெளிவான கரும்புள்ளி என்றால், ஷேர்மார்க்கெட், லேவாதேவி, கந்துவட்டி, மீட்டர்வட்டி கூடாது. பெரிய பொருளாதார சரிவை சந்திக்க நேரும்.
11. லக்னத்திற்கு 4-ல் ராகு இருந்தால், மரமேறி வாழ்க்கை புரிவோர் உஷார் நிலையில் செயல்படவேண்டும்.  புத்திரேகையை ஒட்டியே கரும்புள்ளி தென்பட்டால், ஹெல்மெட் அணியாமல் பிரயாணம் கூடாது. பளுவான வேலைகளில் ஈடுபடும்போது , காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
. 12. சந்திர மேட்டில் அதன் ஓரமான பகுதியில், கறுப்புநிற புள்ளி திடமாகக் காணப்பட்டால், இரைப்பை, பெருங்குடல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படப்போவதின் அறிகுறிதான். உயர்ஜாதி முத்தை வெள்ளியில் மோதிரமாக அணிவது நல்லது.
13. சுக்கிர மேட்டில் இருந்து ஒரு ரேகை உதயமாகி இருதய ரேகையோடு இணைந்தால், திருமணம் சட்ட ரீதியாக பிரிவினை ஏற்படப்போவதின் அறிகுறிதான்.
14. மோதிர விரலின் இறுதி அங்குலாஸ்தியில் ( அடிப்பகுதி) அந்நிய நாட்டில் பிற மாநிலத்தில் வழிப்பறி கொடுக்கப்போவதின் அறிகுறிதான். மிதுன ராசியினரின் கையில் இந்த அமைப்பு தென்பட்டால், நூறு சதவிகிதம் நடந்துவிடும் என எண்ணல் வேண்டும். புதன் கிழமை, புதன் ஹோரையில் புதனை மானசீகமாக வேண்டினால், கெடுதிகள் வருவதில்லை. வெளிநாடு செல்வோர் , பாஸ்போர்ட்டில் மிக கவனமாகஇருப்பது நல்லது. ‘ கேட்ஸ் ஐ’ மோதிரம் அணிவதும் நல்லது.
எனவே கரும்புள்ளி நன்மைக்கும்  தோன்றும். கெடுதிக்கும் தோன்றும். எப்படியும் கரும்புள்ளி அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தும்.

Tags : Tamil palmistry prediction for black mark in the palm and the resultant astrological effects on life and parikaram ,கைரேகை பலன், மச்ச பலன், மச்சம் பலன், உள்ளங்கை மச்சம், கரும்புள்ளி பலன், கரும்புள்ளி, மச்சம், மச்ச சாஸ்திரம், kai rekai, kai rehai, கை ரேகை பலன், கைரேகை

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>