/* ]]> */
Apr 122012
 
2013 கடக ராசி

நந்தன ஆண்டு புத்தாண்டு கடக ராசி tamil new year predictions 2012 kadaga rasi

2012 கடக ராசி

2012 கடக ராசி

புத்தாண்டு பலன் 2012:நந்தன ஆண்டு புத்தாண்டு கடக ராசி tamil new year predictions 2012 kadaga rasi

கடகம்:

புனர்பூசம்(4) ; பூசம்; ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும்.

குருபகவானைத் தவிர, ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 11-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இந்த சர்ப்ப கிரகங்களின்சஞ்சாரம் உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்து கொடுக்கும்.

ஆண்டு மேமாதம் 17-ம் தேதி முதல் , குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.  வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும்.  குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை தரப் போவதால், இந்த ஆண்டு உங்களுக்கு லாபமாகவே இருக்கும். குருபகவான் அளித்த நற்பலன்களைப் போலவே, வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்களை கேதுவும் வாரிவழங்கத் தயங்கமாட்டார். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

ராகுவின் சஞ்சாரம் கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். செயல்படுத்த முடியாதவையெல்லாம் மனதில் வந்து போகும். அஜீரணக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள் வயிற்று சம்பந்தமான கோளாறுகள் ஆகியவை ஏற்படும். நெருங்கிய உறவினர் சிலர் எதிர்ப்பு காட்டக்கூடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணி மாற்றம் நேரும்.சிலருக்கு பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படலாம். பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். உங்கள் ஜாதகத்தின் ஐந்தாம் இடத்தைப் பொறுத்து பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் முடியும்.

கேதுபகவானின் சஞ்சாரமும்  யோகமாகவே உள்ளது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயசியில் ஈடுபடுவார்கள்.

அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது,  சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார்.    துலாத்தில் உச்சம் பெற்ற சனி உங்கள் ராசியையும் 6, 12, இடங்களையும் பார்க்கிறார். இதன் விளைவா கஉங்கள் எதிரிகள் தலைதூக்குவார்கள்.  விபத்துகள் முதலிய ஆரோக்கிய பாதிப்புகள் தோன்றலாம். அதன் மூலம் மருத்துவ செலவு போன்ற விரய செலவுகளும் ஏற்படலாம்.   மனக் குழப்பங்களும் கவலைகளும் மனதை ஆட்டிப்படைக்கும். ஆனால்,  குரு,கேது,ஆகிய கிரகசஞ்சாரங்கள் நற்பலன்களை வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  எனவே மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு இனிமையான ஆண்டாகவே இருக்கும்.

பரிகாரம்:

சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட்டால்,  துன்பம் விலகி ஓடும் .

குருபகவானின் திருவருளால், இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமையும் . வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>