/* ]]> */
Apr 122012
 

நந்தன ஆண்டு புத்தாண்டு பலன் துலாம் ராசி

tamil new year 2012 thula rasi

 

2012 துலா ராசி

2012 துலா ராசி

புத்தாண்டு பலன்கள்   tamil new year 2012 :

துலாம் :

சித்திரை(3&4); ஸ்வாதி; விசாகம்(1,2&3):

இந்த வருடம்  மே மாதம் 17-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், குரு ஜென்ம குருபவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள்   னல் வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முங்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்கலுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்கலிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்கலாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடிதான் வரும்.

உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுஜ்க்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு வில்லங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக முடியாமல் போகும்.

ராகு கேது  சஞ்சாரங்களும் சுமாராக இருப்பதாலும், ஏழரைச் சனி நடப்பதாலும் எதிலும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டால், பாதிப்புகளை வெற்றியோடு முறியடிக்கலாம். கேதுவின் சஞ்சாரம் உங்களுடைய பத்தாம் இடத்தில் இருப்பதால், மேற்கூறப்பட்ட அனைத்து விதமான அனுகூலமற்ற பலன்களும் நடக்க ஏதுவாகும். ராகுவின் சஞ்சாரமும் சரியில்லாமல்தான் உள்ளது. குடும்பத்துக்காக நீங்கள் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் என்பதே பெரிய சுமையாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அத்தனையும் நீங்கள் உங்கள் பேச்சில் காட்டுவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வருமானம் குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வராது. பணப்பற்றாக்குறையால், குடும்பத்தாரின் நியாயமான தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால் குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். உடல்நலமும் படுத்தும். கல்வி வேலை வாய்ப்புகளைக் கெடுக்கும். அடிக்கடி பயணிக்க வேண்டியுள்ளது. கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றி ஒருவரை ஒருவர் பிரியும் நிலை ஏற்படும். அரசுத் துறையில் உள்ளவர்கள் லஞ்சம் போன்ற கேஸ்களில் சிக்கி கைதாகி சிறை செல்லவும் கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட்டால், எவ்வித கஷ்டங்களிலும் சிக்காமல் தப்பிக்கலாம்.

பரிகாரம்:

பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை வழிபடுவதும் கொண்டக்கடலை மாலை அணிவிப்பதும் . சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்ளு தீபம் ஏற்றிவந்தால், கஷ்டச் சுமைகள் பெருமளவுக்கு குறைந்துவிடும். துர்க்கையை வழிப்பட்டு கருப்பு உளுந்தை தானம் செய்யவும். ராகுவின் சஞ்சாரத்தினால் விளையும் தீய பலன்கள் குறையும். அதுபோல கேதுவின் சஞ்சாரத்தினால் வரும் கெடுபலன் குறைய வினாயகர் கோவிலுக்குச் சென்று சுத்தம் செய்து அவரை வழிபடவும்.

இந்தப் புத்தாண்டு உங்களுடைய சாமர்த்தியமான நடவடிக்கைகளாலமைதியான ஆண்டாக இருக்கும்! வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>