/* ]]> */
Jul 312011
 

கமல் வீட்டில் வளர்ந்தவராம், மனோபாலா.  சந்தானபாரதியும் இவருடன் கமல் வீட்டில்தான் இருந்தவராம்.  எங்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டதே என்று கலங்கித் தவிக்கிறார், மனோபாலா. மனோபாலாவை பாரதிராஜாவிடம் கொண்டுபோய் சேர்த்ததிலிருந்து ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பாலாவின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டாராம். படைப்பாளிகளுக்கும் பெப்ஸிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது கமல் பெப்ஸி பக்கமும் இவரும் சந்தானமும் படைப்பாளிகள் பக்கமும் இருக்க நேர்ந்ததால், இப்படிப்பட்ட பிரிவு வந்துவிட்டது. இவர் படைப்பாளிகள் பக்கம் போனது பாரதிராஜா இவருடைய குருநாதர் என்பதாலாம்.  பிரிந்திருந்த நேரத்தில் வில்லங்கமா ஒருவர் வந்து கொடுத்த பொக்கே ஐடியாவால் பிரச்சினை பெரிதாகி விட்டதாம். . வலுக்கட்டாயமாக மனோபாலாவையும் சந்தான பாரதியையும்  பொக்கேயில் கையெழுத்துப்போட வைத்தாராம் திருவாளர் வில்லங்கம் { இவர்   பார்த்திபன் என்பதை மூன்றாம் கோணத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். தப்பான எண்ணத்துடன் எதுவும் செய்யவில்லை என்று  பார்த்திபன் பதறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது} மொத்தம் 100 பொக்கேக்களுக்கு மேல் கமலுக்கு வந்து சேர்ந்ததாம். அவற்றில் இவர்கள் இருவரது பொக்கேக்களை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்ட கமல்,  அவற்றை ஒருவாரம் வைத்திருந்தாராம். மனோவும்  சந்தான பாரதியும் கையெழுத்துப் போட்ட பொக்கேக்கள் அவர் ஆழ்மனதில் பெரிய வடுவை ஏற்படுத்திவிட்டதாம்.  ‘  ஏன்னா நாங்கள் கமல் வீட்டில் அவர் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு  வளர்ந்தவர்கள். அதனால், கமல் இவர்களுமா இப்படி? என நினைத்திருக்கக்கூடும். அன்றிலிருந்து இதுவரை கமல் என்னுடன் பேசுவதேயில்லை. ” என்று உருகுகிறார், மனோ. இவருடன் பொக்கேயில் கையெழுத்திட்ட சந்தான பாரதி கமலுடன் கைகோர்த்துவிட்டாராம். மேலும் அன்று துரோகிகளாக மாறி எதிர்ப்பு தெரிவித்த அனைவரும் இன்று கமலுடன் கை கோர்த்து அலையும்போது என்னை மட்டும் கமல் ஒதுக்கி வைப்பது ஏன்? என்று கலங்குகிறார். ” அன்றைக்கு உன் முன்னால் மல்லுக்கு நின்றவர்கள் எல்லாம் இன்று உன்னுடன் சேர்ந்து நிற்கும்போது …கமல்…நான் உனக்கு துரோகமே நினைக்காதவன். என்னிடம் மட்டும் நீ இன்றளவும் விலகி நிற்பது ஏன்? நான் இன்றைக்கு சாப்பிடும் சாப்பாடு நீ கொடுத்தது. இன்றும் உன் நட்பு வேண்டிக் காத்திருக்கிறேன்” என பகிரங்க மடல் விடுக்கிறார். கருணை காட்டுங்கள் கமல்சார்!

Tags : Tamil cinema latest hot news about tamil hero kamalhasan and the fight he had with director and comedian manobala during the tamil movie production

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>