/* ]]> */
Aug 182011
 

சேரன் கே.எஸ்.ரவிகுமார் மோதல் -

இயக்குநர் சங்க பிரச்சினை

சேரன் இயக்குநர் சங்கம்

தமிழ்ப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் பல்வித உணர்ச்சிக் கொந்தளிப்புகள் காணப்பட்டன.  மேடை ஏறிய சேரன் 2011 ஜூலை வரை கணக்கு வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று கூற அதை அமீரும், ஜனநாதனும்  ஆதரிக்க செல்வமணியோ தன்னை சேரன் ப்ளாக்மெய்ல் செய்வதாகக் கூறினார். கூச்சல் குழப்பம்; வார்த்தைகள் வெடித்தன. கே.எஸ். ரவிகுமார் மேடையேறி சேரனை ஒருபிடி பிடிக்க, கூட்டம் கே.எஸ். ரவிகுமாரை சப்போர்ட் பண்ணி கரவொலி எழுப்ப,  “கணக்கு கேட்பது தவறா?” என்று சேரன்  நொந்துபோய்க் கேட்டாலும் அதைக் கூட்டம் ரசிக்கவில்லை.  பின்னர் பதவி ஏற்கும்போதும் சேரன் விட்டுக் கொடுக்காமல்,  ” நான் ஓட்டுப் போடாமல் தேர்வு செய்யப்பட்டேன். அதனால் நான் அப்படித்தான்  திமிராகத்தான் பேசுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ” என்றார். அந்தக் கூட்டத்தில் சேரன் எல்லோராலும் ஒரு வில்லனாகவே பார்க்கப்பட்டார்.

இதற்கிடையே இன்னும் இரு தமிழ் இயக்குநர்களிடையே வேறு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது பார்திபனுக்கும் மனோபாலாவுக்கும் தான். கமல் மனோபாலா நட்புக்கு  நான் வேட்டு வைக்கவில்லை என்கிறார், நடிகர் பார்த்திபன்.  பிரச்சினைகளை விளக்கி , மனோபாலாவே கமலிடம் உண்மையை எடுத்து உரைத்திருக்கலாம்.  கமல்-மனோபாலா இடையே உள்ள பிரச்சினை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.  இவர்களின் பிரிவிற்கும் நான் எந்த வகையிலும் காரணமல்ல என்பதையும் நண்பர் மனோபாலாவுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்று தன்னிலை விளக்கம் அளிக்கிறார், நடிகர் பார்த்திபன்.  பிரச்சினை ரொம்பப் பெரிசாகுதோ என்னமோ?

Tags : Article on tamil cinema directors election and fight between cinema director K.S.Ravikumar and tamil movie director Cheran

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>