/* ]]> */
Apr 012011
 

கால்.. கால்கேர்ல்.. காதல்! திக் திக் தொடர் – 1

 

தியாகு அந்த மொபைல் ஸ்க்ரீனையே வெறித்துக் கொண்டிருந்தான்… சேட்டு ஒரு மெல்லிய சிரிப்போடு அவன் பானை குதப்பிக்கொண்டே கையிலிருந்த மொபைலை தியாகுவிடம் நீட்டிக் கொண்டிருந்தான்…

“பாரு கண்ணா பாரு… இன்னா ஷோக்காகீது பாரு! டக்க்ருப்பா… ஒவ்வொரு க்ளிப்பிங்கும் கண்ணையே அள்ளுது!”

ஸ்க்ரீனில் அவனும் அவளும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள்… அவள் ஆடைகள் களையும் தருணம் அது…

தியாகுவின் நெஞ்சம் திக் திக் என்றது…

“எது வரை போகும் இந்த க்ளீப்பிங்? ” ” அவன் முகம் தெரிந்திருக்குமா?”  “அவள் முகம் தெரிந்திருக்குமா?”

அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்…

“கழட்ட கழட்டத்தான் தெர்து… படா ஷோக்க்காக்குறாப்பா இவ ! பாக்குறப்பல்லாம்  பம்மி பம்மி நடப்பா! ஆனா பெட் ரூமுல இன்னா போடு போடுறா !”

சேட்டு அத்ற்கு மேலும் சொன்ன வர்ணனைகள் வெளியில் சொல்லும் விதமாய் இல்லை….

தியாகு எதை எதிர்பார்த்து பயந்தானோ அது நடந்தது… இப்போது காமரா அவள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் ஊர்ந்து மெல்ல மேலேறி அவள் முகத்தை காட்டியது… அவள் உணர்ச்சி பிழம்பாய் தெரிந்தாள்….

இப்போது ஒரு முகம் அவள் முகத்தை நெருங்கியது… மெல்ல வள் உதடோடு உதடு சேர்த்தது… இப்போது ஸ்க்ரீனில் தியாகு தெரிந்தான்…

தன் ஆலிங்கனத்தையே இப்படி இன்னொருவன் முன்னால் பார்ப்பது தியாகுவிற்கு என்னமோ போலிருந்தது!

சேட்டு இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்….

“கமலுக்கு நெக்ஸ்டு லிப் கிஸ்ஸுல நீதாம்பா.. சும்மா இந்த மெல்லு மெல்லுற நான் பானை மெல்லுற மாதிரி!”

சேட்டு அவன் ஜோக்கிற்கு அவனே சிரித்தான்!

தியாகு மெல்ல மெல்ல பொறுமையிழந்து கொண்டிருந்தான்…

“சேட்டு! போதும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட்டு இருக்கு !”

“அல்லாத்துக்க்குமா… இல்லையேப்பா.. லிமிட்டு தாண்டிப் போகுதே…”

சேட்டு ஸ்க்ரீனைப் பார்த்து டபுள் மீனிங் பேசினான்.

“சேட்டு! முதல்ல இத ஆஃப் பண்ணு ! நாம பேசலாம்!”

சட்டென்று சேட்டு மொபைலை தன் சட்டை பையில் போட்டுக் கொண்டான்….

“உனுக்கு வேகம் ஜாஸ்திப்பா… பொண்ணாண்டையும் வேகம் காட்டுற என்னாண்டையும் வேகம் காட்டுற! “

அவன் காவி படர்ந்த பற்கள் தெரிய ஒரு மாதிரி ஓசையெழுப்பி சிரித்தான்…

“சேட்டு! போதும்.. இப்ப உனக்கு என்ன வேணும்? அத மட்டும் சொல்லு !”

“எனக்கு அவ வேணும்!”

சேட்டு பட்டென்று சொன்னான்…

“எனக்கு மட்டும் இல்ல.. எங்க க்ரூப் மொத்தத்துக்கும் அவ வேணும் ! இன்னா சொல்லுற? எப்போ அனுப்பற அவள ? “

“சேட்டு , ஆவுற கதையப் பேசு! அவ அந்த மாதிரி பொண்ணு இல்லை!”

“அப்டியா! வீடியோவப் பாத்தா அப்படி தெரியலயே ! உம்மேல இந்தப் பாச்சல் பாயுறா! “

தியாகு மௌனமானான்…

“யோசி தியாகு தம்பி ! யோசிச்சு சீக்கிரமா அனுப்பி வை அவள… இல்லாங்காட்டி எல்லா க்ளிப்புங்கும் டெபனர் ப்ளாக்குக்கு பறந்துடும்!”

தியாகு மெல்ல எழுந்து எதுவும் சொல்லாமல் தடுமாறி நடந்தான்…

பாவனாவுக்கு எப்படி இதையெல்லாம் சொல்வது என்ற நினைப்பே அவனை உலுக்கி எடுத்தது ………..

திக் திக் தொடரும்…..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>