மீனம்:
{பூரட்டாதி 4-ம் பாதம்; உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

மீனம்:
[பூரட்டாதி(4),உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.]
மீனம் :
உடல்நலம் சிறக்கும். உங்கள் நடை,உடை, பாவனைகளில் புதுப் பொலிவு ஏற்படும். புத்திரர்களின் நடத்தையில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அவர்களின் முன்னேற்றம் திருப்தியளிக்கும். புதியவர்களின் நட்பும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும். வீடு வானத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளலாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். கடன் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஒழியும். தம்பதியரிடையே அன்பு மிளிரும். நெருங்கிய நண்பருக்கு உதவி செய்வீர்கள். வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதால், வியாபாரத்தைப் பெருக்குவர். வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்வதால், விற்பனையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. பணியாளர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். குடும்பப் பெண்கள் குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலையைக் கொண்டுவருவர். பணிபுரியும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி புதிய பொறுப்புகளை ஏற்பர். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல லாபம் ஈட்டுவர். அரசியல்வாதிகளுக்கு வெகுந்ளாக எதிர்பார்த்த பதவி, பொறுப்புகள் எளிதாகக் கிடைக்கும். விவசாயிகலுக்கு நல்ல மகசூல் கிடைக்கும் கால்நடை வளர்ப்பிலும் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சாதனை நிகழ்த்துவர்.
Tags : Meena rasi month palan, meena rasi matha rasi palan, matha rasi palan, meenam rasi palan, meenam rasi,மீன ராசி, மீனம் ராசி பலன், மீன ராசி மாத பலன், மாத ராசி பலன்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments













Please comment with your real name using good manners.