/* ]]> */
Oct 112011
 

 

காதலன் காதலி
காதலி:

எனக்கொரு சந்தேகம்…
என்னை எவ்வளவு
பிடிக்கும் உங்களுக்கு?

காதலன்:
வானத்து விண்மீன்களை
நேரம் கிடைக்கும்போது
எண்ணிப்பார்… தெரியும்…!

காதலி:
சூரியன் ஏன் சுடுகிறான்…?

காதலன்:
நீ வானத்திலன்றி
பூமியில் பிறந்துவிட்டாயே…!

காதலி:
அப்படியானால், நிலவு ஏன் தண்ணென்றிருக்கிறது…?

காதலன்:
நான் உன்னருகிருக்கும் இரவில்
நீயும் அப்படித்தானே…!

காதலி:
கடல் ஏன் சத்தமிடுகிறது..?

காதலன்:
நாம் சங்கமிக்கும்போது
நீ சிணுங்குவதில்லையா என்ன…!

காதலி:
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
விரல்களில் ஒட்டுவது ஏன்…?

காதலன்:
நீ என்னை முத்தமிடும் போது
உன் இதழ் அமிர்தம் ஒட்டுமே…!

காதலி:
போகட்டும்…
உங்களை வியக்க வைத்தது எது…?

காதலன்:
நீ உடுத்தும் உடைகளும்
உன் கூந்தலின் ஒற்றை ரோஜாவும்…
உயிரற்றவை கர்வப்பட்டு நான் கண்ட முதல் தருணமது…!

காதலி:
நான் முதன் முதலாக உங்களிடம் பேசியபோது என்ன நினைத்தீர்கள்…?

காதலன்:
என் மொழியே முன்னின்று பேசுவதாய் உணர்ந்தேன்…!

காதலி:
காதலுக்கும் காமத்துக்கும் என்ன வித்தியாசம்…?

காதலன்:
காதல் என்பது பழச்சாறு…
காமம் என்பது சர்க்கரை…
பழச்சாறை விட சர்க்கரை மிகாதவரை நன்று..

காதலி:
உலகிலேயே மிகச்சிறந்தது எது…?

காதலன்:
நீ எனக்கு தருகின்ற முத்தங்களின் ஈரம்
நிலைக்கின்ற நொடிகள்…!

காதலி:
தவம் எது? வரம் எது?
எனக்கு நேரமாகி விட்டது… சீக்கிரம்…!

காதலன்:
எனக்கு தவம் செய்யும் நேரம் நெருங்கி விட்டது போலும்…!

காதலி:
புரியவில்லையே…!

காதலன்:
உன்னை நான் பிரிந்திருக்கும் நேரம் தவம்…
நம் சந்திப்புகள்தான் வரம்…!

 

- ராணி ஆனந்தி

 

tags : காதலன் காதலி உரையாடல், காதலன், காதலி, காதலன் காதலி வசனம், காதல் வசனம், tamil love dialogues between hero and heroine, tamil lovers dialogues, tamil lovers, tamil love, tamil girlfriend, காதலி வசனம், காதல் பேச்சு

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>